Search This Blog

திங்கள், 16 செப்டம்பர், 2013

தி இந்து தமிழ் எப்படி

தமிழால் இணைவோம் - என்ற சப் டைட்டிலுடன் (துணை தலைப்பு?) இன்று முதல் தமிழகத்தில் வெளிவருகிறது தி இந்து நாளிதழ்.

தினகரன் புது நிர்வாகத்திலிருந்து வர ஆரம்பித்தபோது அதிரடியாக 1 ரூபாய்க்கு இறங்கி பிற நாளிதழ்களை கலங்க வைத்து பிறகு ஸ்டெடி ஆனது போல இந்து தமிழ் இதழும் காமதேனு என்ற பெயரில் ஒரு ரூபாய் ஐம்பது பைசா விலையில் வெளிவரப்போகிறது என்றெல்லாம் செய்திகள் காற்றில் உலா வந்தன.

நானும் காமதேனு என்ற பெயரில் கூகிளில் இந்த நாளிதழை தேடி ஏமாந்தது எல்லாம் தனி கதை.

இன்று வேறு ஒரு வேலையாக பேருந்து நிலையம் சென்ற போது கடையில் தொங்கிய வால்பேப்பரை பார்த்து விலை கேட்டேன் நாலு ரூபாய் என்றார்கள். ஆக, தமிழ் சினிமா ஹீரோக்களைப்போல் முதல் ரீலில் பாட்டு பைட்டு என்றெல்லாம் அதிரடியாக களம் இறங்காமல் தொடக்கத்தில் இருந்தே சீராக சென்று சந்தைக்குள் நுழையலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது.

கடைக்காரர் எடுத்து தரும்போது எனக்கு the hindu ஆங்கில பேப்பருக்கும் தமிழ் பேப்பருக்கும் வித்தியாசம் உடனடியாக தெரியவில்லை. பேப்பரை பிரித்துப்பார்க்கும்போதுதான் தெரிந்தது.

பேப்பரின் தோற்றம், வடிவமைப்பு, உள்ளடக்கம் ஆகியவை சாதாரண பாமரனை விட சற்று அடுத்த கட்டத்தில் உள்ளவர்களுக்கானது போல் என் மனதில் படுகிறது.

தமிழில் முதல் இதழ் வெளிவரும்போதே இணையத்திலும் யுனிகோடு வடிவில் பார்வைக்கு கிடைக்கிறது. பொதுவாக ஒரு இதழ் புதிதாக கால் பதிக்கும்போது முதல் இதழ் தலையங்கத்தில் சம்பிரதாயமாக சில வார்த்தைகளை இடம்பெறச்செய்யும். 

இந்து தமிழ் இதழிலும் அதே போன்ற தோற்றத்தில் தலையங்கம் இருந்தாலும், தங்கள் நிருபர்களும், எடிட்டர்களும் எழுதுவதை மட்டும்தான் படிக்கவேண்டும் என்று இல்லாமல், வாசகர்களையும் தகுந்த அளவில் பங்கேற்கச்செய்வது என்ற விஷயம் நல்லபடியாக எடுபட்டால் இந்த நாளிதழ் மக்களிடம் பரவலாக போய்ச்சேர வாய்ப்பு உண்டு.

சில நாளிதழ்களும், புலனாய்வு இதழ்களும் வாசகர்களின் கார்டூன்களை அவ்வப்போது வெளியிடுவது உண்டு. ஆனால் தமிழ் இந்து, கார்டூனை முடிந்த அளவு வரைந்தோ அல்லது வார்த்தைகளால் எழுதியோ அனுப்பினால் தங்கள் ஓவியர்களை கொண்டு கார்ட்டூனாக்கி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது வாசகர்களை ஈர்ப்பதாக அமையும்.

தி இந்து இன்று வெளிவந்த நாளிதழ் தீபாவளி போன்ற பண்டிகை சிறப்பிதழைப்போல், பல தலைப்புக்களில் கட்டுரைகளுடனும், நிறைய விளம்பரங்களுடனும் வெளிவந்திருக்கிறது.

இன்று ஒரு நாள் பேப்பரை மட்டும் பார்த்து முழு விமர்சனம் செய்வது, மகாமகத்தன்று கும்பகோணத்தையும், சூப்பர்ஸ்டார் படம் ரிலீசன்று அந்த சினிமா தியேட்டரையும், திருமணம் நடைபெறும் நாளன்று அந்த புதுமணத்தம்பதிகளையும் பற்றிய பார்வையாகவே இருக்கும்.

அதனால் தொடர்ந்து சிலதினங்கள் கவனித்து, வாரத்தின் ஏழு நாட்களும் என்னென்ன பகுதிகளுடன் வெளிவருகிறது என்பதை பார்த்துதான் இது பற்றி பேச வேண்டும்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

திருவாரூரில் கும்பாபிஷேகம்

திருவாரூரில் ஓடும் ஆழித்தேரின் பெருமைகள் நிறைய பேர் அறிந்ததுதான். அந்தத் தேர் திருவிழாவுக்கு பிள்ளயார் சுழி போடப்படுவது திருவாரூரை ஓட்டிய மருதம்பட்டினத்தில் உள்ள உள்ள அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில்தான் என்பது பலருக்கும் புதிய தகவலாக இருக்கும்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். சிதிலமடைந்திருந்த ஒரு சிவாலயத்தின் நுழைவாயில் மொட்டைக்கோபுரமாக இருந்த இடத்தில் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு செப்டம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருவாரூர் பெரிய கோயிலில் ஆழித்தேரோட்ட திருவிழாவான பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான தொடக்க நிகழ்ச்சியாக, ஒவ்வொரு ஆண்டும் திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் உள்ள சண்டிகேஸ்வரர், மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் ஆலயத்துக்கு வருவார். அங்கு பூமிக்குரிய பூஜைகள் முடிந்த பின்பு திருமண் எடுத்துச்சென்று முளைப்பாலிகை வளர்த்துதான் திருவாரூரின் பெரிய கோயிலில் கொடியேற்றம் நடைபெறும்.

ஆலயம் உருவான காலம் உறுதியாக தெரியவில்லை. ஆலய அர்ச்சகருக்கு தெரிந்து கடந்த 60ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடைபெற்றதில்லையாம். ஆனால் பஞ்ச பாண்டவர் ஐவரும் தனித்தனியே ஒரு லிங்கம் வைத்து பூஜித்த பெருமைக்குரிய தலம் இது என்று செவிவழிச்செய்திகள் உலா வருகின்றன.

மகாபாரதகாலத்திலேயே தருமன், பீமன், அர்ச்சுணன், நகுலன், சகாதேவன் ஆகிய பஞ்சபாண்டவர்கள் வழிபட்டதாக பெருமைக்குரிய மருதவனம் என்று அழைக்கப்பட்டு இப்போது மருதம்பட்டினம் என்று வழங்கப்படும் ஊரில் இருந்து அருள்பாலிக்கும் அருள்மிகு மதுரபாஷினி அம்பிகா சமேத அபிமுக்தீஸ்வரர் சுவாமி ஆலயம் உருவான காலம் தெரியவில்லை. இதை வைத்து பார்க்கும்போது இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் ஆகி பல ஆண்டுகள் ஏன் சில நூறு ஆண்டுகள் கூட ஆகியிருக்கலாம். மிகவும் சிதிலமடைந்திருந்த இந்த ஆலயம் பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்டு மகாமண்டபமும் மூன்று நிலைகளில் நூதன ராஜகோபுரமும் அமைக்கப்பட்டு இன்று செப்டம்பர் 1ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

தஞ்சமடைந்தவர்களுக்கு அடைக்கலம் தருபவர் அபிமுக்தீஸ்வரர். பாண்டவர்கள் கவுரவர்களால் அஞ்ஞான வாசம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதால் காட்டில் வாழ்ந்த பிறகு நாடு விட்டு நாடு போய்க்கொண்டே இருந்தார்களாம். அப்போது ஐந்து பேரும் இணைந்து ஒரு இடத்தில் தனித்தனி லிங்கங்கள வைத்து வழிபட்ட தலம்தான் மருதம்பட்டினம். மூலவர் அபிமுக்தீஸ்வரர் சற்று பெரிய லிங்க ரூபத்தில் தரிசனம் தருகிறார். அந்த கருவறையைச் சுற்றி நான்கு மூலைகளிலும் தனித்தனி விமானத்துடன் நான்கு லிங்கங்கள் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளன. கிழக்கு முகமாக இரண்டு. மேற்கு முகமாக இரண்டு. இது அபூர்வமான அமைப்பாகும்.

மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் கோயிலில் தற்போது முதலில் வரவேற்பது மூன்று நிலைகளில் புதிதாக அமைக்கப்பட்ட ராஜகோபுரம். திருப்பணிக்கு முன்பு இது மொட்டை கோபுரமாக இருந்தது.

அதனைக்கடந்து வெளிப்பிரகாரத்தினுள் நுழைந்தால் பிரமாண்டமான மகாமண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் மையத்தில் நந்திபகவான் வீற்றிருக்கிறார். பழைய ஆலயத்தில் நந்திபெருமானுக்கு மட்டும் சின்னதாக மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. நந்தியம்பெருமானிடம் உத்தரவு பெற்று கருங்கல் தூண் மற்றும் மேற்கூரையுடன் அமைந்த பழமையான மகாமண்டபத்தினுள் நுழைகிறோம். 

எதிரே மூலவர் அபிமுக்தீஸ்வரர் அருள் பொங்க காட்சி தருகிறார். வடக்கே அம்பாள் மதுரபாஷிணி தென்முகமாக தோற்றமளிக்கிறாள். தமிழில் தேன்மொழியாள், இனிமையான குரல்வளம் மிக்கவள் என்று பொருள். மூலவரையும் அம்பாளயும் தரிசித்து விட்டு வெளியே வரலாம். பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில் ஏற்கனவே சிதிலமடைந்து பாழடைந்திருந்த மடப்பள்ளி நல்ல முறையில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. பிரகார வலம் வந்தால் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நதி உள்ளது. தெற்கில் குருதெட்சிணாமூர்த்தி தரிசனம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் குருபெயர்ச்சி விழா மிக சிறப்பாக நடைபெறும்.

பிரகாரத்தின் மேற்கில் வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியர், மகாலெட்சுமி சந்நதிகள் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளன.  மூலவர், அம்பாள் விக்ரஹகங்களும், நன்கு லிங்கங்களும் சமமாக ஒரே உயரமுள்ள கருங்கல் பீடத்தில் அமைந்துள்ளன.

திருக்கார்த்திகைக்கு சுப்பிரமணியர் சுவாமி வீதி உலாக்காட்சி உண்டு. பிரதோஷ வழிபாடும், மாசி மாத சிவராத்திரியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாண்டவர்களின் வேதனை தீர்த்த இந்த தலத்தை நாடி வந்தவர்கள் அனைவரது துயங்களயும் போக்கும். நம்பி வந்தோருக்கு நலம் யாவும் நல்கும் இறைவன் இத்தல நாயகர்.

திருவாரூர் பெரிய கோயிலுக்கு கிழக்கில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர்மயிலாடுதுறை இருப்புப்பாதையை கடந்ததும் சற்று தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்தும், பெரிய கோயிலிலிருந்தும் ஆட்டோவில் செல்லலாம்.

மதுரபாஷினி அம்பிகா சமேத அபிமுக்தீஸ்வரர் சுவாமியின் அனுக்கிரஹத்தால் பழமையான இந்த ஆலயத்தின் திருப்பணியை முன்னின்று பெரும் பொருட்செலவில் செய்த திரு & திருமதி சந்திரிகா ராஜ்மோகன் குடும்பத்தாருக்கும், இன்னும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த திருப்பணியில் பங்கேற்ற அனைவருக்கும், கும்பாபிஷேக ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த ஊர் பொதுமக்களுக்கும், இந்த மஹா கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்த ACN  கேபிள் தொலைக்காட்சி நிர்வாகிக்கும், ஆகமவிதிகள் படி யாகசாலை பூஜைகள் செய்த சிவாச்சாரியார்களுக்கும் இன்னும் இந்த மாபெரும் விழாவின் பின்னணியிலும் முன்னணியிலும் இருந்து தொண்டு செய்த அனைத்து உள்ளங்களுக்கும் சிவனடியார்க்கும் ஒரு எளிய பக்தன் என்ற முறையில் இவர்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற சுவாமி-அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களை பிரார்த்திக்கிறேன்.

கும்பாபிஷேக விழா குறித்த முந்தைய இடுகைக்கு செல்ல...

கும்பாபிஷேக படங்கள் பின்னர் பதிவேற்றப்படும்...