Search This Blog

திங்கள், 8 ஏப்ரல், 2013

அருங்காட்சியத்திற்கு போகும் சிறுகதைகள்

கல்கி வார இதழில் வழக்கம்போல் இந்த ஆண்டும் சிறுகதைப்போட்டி அறிவித்திருக்கிறார்கள். முதல் பரிசு 10ஆயிரம், இரண்டாம் பரிசு 7 ஆயிரத்து 500, மூன்றாம்பரிசு 5000. இது தவிர பிரசுரமாகும் கதைகளுக்கு 500 ரூபாய் சன்மானம் தருவார்கள் என்று நினைக்கிறேன். அறிமுக எழுத்தாளர் என்றால் சிறப்பு பரிசு உண்டு.

கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜுன் 15. ரெகுலராக வாசிப்பில் இருப்பவர்களுக்கு இந்த விவரங்கள் நன்கு தெரியும். இந்த பதிவில் நான் குறிப்பிட்டிருப்பது புதியவர்களுக்காக.

நானும் கடந்த 2000வது ஆண்டில் இருந்து தொடர்ந்து சிறுகதைகளை இந்த போட்டிக்கு எழுதி அனுப்பிக்கொண்டேதான் இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட பிரசுரத்துக்கு கூட தேர்வு பெற்றது இல்லை. இரண்டு முறை வாசகர் கடிதம் வந்துள்ளது. பிறகு 2011ல் கல்கி தீபாவளி தமாக்கா போட்டியில் கட்டுரை ஒன்றிற்கு சைக்கிள் பரிசு கிடைத்தது. இந்த ஆண்டும் சிறுகதை பரிசுக்கு முயற்சிக்க வேண்டும். கல்கி போட்டியில் தேர்வாகாத சிறுகதைகளை மீண்டும் பிற இதழ்களுக்கு அனுப்பி அவை அனைத்துமே பிரசுரமாகியிருக்கின்றன. எங்கே சறுக்குகிறேன் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

------------------
தமிழ் இதழ்களில் பிரசுரமாகும் சிறுகதைகளில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறந்த சிறுகதையை தேர்வு செய்து அந்த ஆண்டின் 12 சிறுகதைகளில் ஒரு சிறந்த சிறுகதையை தேர்வு செய்து நூலாக வெளியிடும் பணியை 43ஆண்டுகளாக இலக்கியச்சிந்தனை செய்துவருகிறது. நான் எழுதிய தேன்மொழியாள் என்ற சிறுகதை அமுதசுரபியில் வசுமதி ராமசாமி அறக்கட்டளை பரிசு பெற்று அது 2006ஆம் ஆண்டு ஜனவரி மாத சிறந்த சிறுகதையாகவும் தேர்வு பெற்றது.

தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 1
தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 2
தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 3
தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 4

அந்த கதை இடம்பெற்ற தொகுப்பு பெயர் அருவி. அதில் உள்ள பிற 11 எழுத்தாளர்களை தொடர்புகொள்ள முயற்சித்தேன். 5 பேர் மட்டும் தொடர்பில் வந்தார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் தொடர்ந்து பல மாதங்கள் தொலைபேசி தொடர்பில் இருந்தார். அவர் பெயர் எம்.ஆர்.ராஜேந்திரன். இவர் கொற்றவன் என்ற பெயரில் கதை, கவிதை, கட்டுரை எழுதியதுடன் கல்கியில் நிருபராகவும் பணியாற்றினார். இப்போது ஒரு மினிபட்ஜெட் படம் இயக்கியுள்ளதாக கல்கியில் ஒரு பக்க செய்தி வெளியாகியுள்ளது. இவருடைய அலைபேசி எண்ணும் என்னுடைய மொபைல்போன் மாற்ற அலைக்கழிப்பில் எங்கே சென்றது என்று தெரியவில்லை.

இலக்கியச்சிந்தனைக்கு ஒவ்வொரு மாதமும் வந்து குவியும் சிறுகதைகளில் சிறந்ததை தேர்ந்தெடுப்பதே கடினமாக இருக்கும். ஆனால் இப்போது ஒரு ஆண்டு முழுவதும் வரும் சிறுகதைகளில் வெகு சுலபமாக சும்மா பேருக்கு 12 கதைகளை தேர்ந்தெடுத்துவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவு வெகுஜன இதழ்கள் சிறுகதைகளை குறைத்துவிட்டன. அல்லது ஏறக்குறைய சிறுகதை பிரசுரத்தையே நிறுத்திவிட்டன என்று சொல்லலாம். அப்படி ஒன்றிரண்டு சிறுகதைகளும் பிரபல எழுத்தாளர்களுடையது மட்டுமே பிரசுரமாகின்றன என்று இலக்கியசிந்தனை நிர்வாகி ஒருவர் வருத்தப்பட்டிருந்தார்.

இலக்கியசிந்தனை பற்றிய வலைத்தள சுட்டி

இதழ்கள் அனைத்திலும் சினிமா மட்டுமே பெருமளவு ஆதிக்கம் செலுத்துகின்றன. அப்படி ஒருசில புதியவர்கள் எழுதினாலும் ஒரு பக்க கதை, அரைபக்க கதை என்று நசுக்கப்பட்டுவிட்டார்கள். இவர்கள் இப்படி பிரசுரம் செய்வதால் மக்களின் ரசனையும் குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு எங்கும், எதிலும் பொறுமை, சகிப்புத்தன்மை இல்லாமல் அவசரப்படுகிறார்கள். (ஒரு பிரபல இதழில் அதன் துணையாசிரியர்களே உப்புசப்பில்லாத ஒருபக்க கதைகளை எழுதி சன்மானத்தை அவர்களே எடுத்துக்கொள்ளும் கேவலமான நிலையும் இருப்பதாக சிலர் சொல்லக்கேள்வி. அதை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் சுமார் துணுக்கு மற்றும் ஜோக்குகள், கடிதங்கள் பிரசுரமான வகையில் எனக்கு 2006-07 ஆம் ஆண்டில் மட்டும் 5ஆயிரம் ரூபாய் வரை பணத்தை அனுப்பாமல் மோசடி செய்துவிட்டார்கள். நானும் கடிதம் எழுதி அலுத்துப்போய் விட்டுவிட்டேன். இப்போது அந்த இதழுக்கு நான் எதையுமே எழுதி அனுப்புவதில்லை.)

இந்த ஆண்டு இலக்கியச்சிந்தனை 43ஆம் ஆண்டு நிறைவு விழா வரும் வெள்ளிக்கிழமை 12-04-2013 மாலை 6 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலை ஏவி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் எனக்கும் வந்திருக்கிறது. 2006ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வருகிறது. ஆனால் பொருளாதார காரணங்களால் என்னால் கலந்து கொள்ள முடிவதில்லை.

நான் பரிசு பெற்ற ஆண்டில் அந்த விழா நடைபெறும் முதல் நாள் வரை சென்னையில்தான் இருந்தேன். முதல் நாள் இரவு புறப்பட்டு மறுநாள் காலை திருவாரூர் வந்துவிட்டேன். அன்று மாலை 4 மணிக்கு என்னிடம் போஸ்ட் மேன் விழாவிற்கான அழைப்பிதழை கொடுத்தார். பிரித்துப்பார்த்தால் 6 மணிக்கு விழா. நாம என்ன யஹலிகாப்டர்லயா போகமுடியும்னு நினைச்சு விட்டுட்டேன். அதன்பிறகு போகும் வாய்ப்பே அமையவில்லை.

2012ஆம் ஆண்டின் சிறந்த நாவலாக கவிப்பேரரசு திரு. வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற நாவலைப் பாராட்டி ரூ.5000 பரிசை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வழங்க உள்ளதாக அழைப்பிதழில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

காவிரிப் பாசன மாவட்டங்களில் வேளாண்மை வெறுமையானதால் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகளின் 11 குடும்பங்களுக்கு இந்த நாவல் ஈட்டிய வருவாயிலிருந்து தலா 1 லட்சம் வீதம் 11 லட்சத்தை பரிவுத்தொகையாக வைரமுத்து வழங்க இருப்பதாகவும் அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஆனந்த விகடன் 04.04.2012 இதழில் வெளியான ஒற்றைச்சிறகு சிறுகதைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு.

சென்னையில் இருப்பவர்கள் வாய்ப்பிருந்தால் போய்வாருங்கள்.

போகிற போக்கில் சிறுகதைகள் என்ற வடிவம் வெகுவிரைவில் நூலகத்தில் கூட கிடைக்காமல் அருங்காட்சியத்தில் போய் பார்க்க வேண்டிய நிலை வரலாம்.

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

முதல்வன், நாடோடிகள் வெற்றி - கந்தா - ஆனந்த விகடனில் கதையும்

ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா என்ற சிறுகதையை 10.04.2013 தேதியிட்ட ஆனந்த விகடனில் திருவாரூர் பாபு எழுதியிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் உருவான முதல் சினிமாவான கந்தா படம் வெற்றியை எட்டிப்பிடிக்க முடியவில்லை என்பதை விட பல மடங்கு அதிர்ச்சியை இந்த சிறுகதையின் முடிவு எனக்கு ஏற்படுத்தியது. 

அதற்காக கதையின் முடிவு பெரிய மலையைப் புரட்டுவது போல கனமான விசயத்தை எல்லாம் வைத்து எழுதப்படவில்லை. கதைமாந்தர் ஒருவரின் மனைவி போகிற போக்கில் சொல்கிற ஒற்றை வாக்கியத்துடன் கதை முடியும். அந்த வாக்கியம் வாசகர் எதிர்பாராதவகையில் இருக்கும். நானும் கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கதைகளைப் படித்திருப்பேன். சமீப காலத்தில் நான் வாசித்த கதைகளில் கதையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று மனதின் ஓரத்தில் லேசான யூகம் எட்டிப்பார்த்ததை தகர்த்து வேறு வகையில் அமைந்திருந்தது இந்தக் கதையில்தான்.

சிறுகதைகள் வாசிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு திருவாரூர் பாபு என்ற பெயர் கண்டிப்பாக பரிச்சயமாகியிருக்கும். சுமார் ஆயிரம் சிறுகதைகளுக்கு மேல் எழுதிய அவருடைய முதல் சிறுகதை பிரசுரமாவதற்கு நான்கு ஆண்டுகள் ஆனதைப்போலவே அவர் இயக்கிய முதல் படம் திரையைத் தொடுவதற்கும் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன என்று திருவாரூரில் கந்தா படம் ரிலீஸ் வெளியான நாளன்று குறிப்பிட்டார்.

நான்கு ஆண்டுகள் கழித்து அவருடைய முதல் கதை பிரசுரமானாலும் அதன் பிறகு ஆயிரம் கதைகளை அவரால் எழுத முடிந்திருக்கிறது. ஆனால் முதல் படம் கந்தா பல பிரச்சனைகளால் மிகவும் தாமதமாக திரையைத் தொட்டது அதன் வெற்றியை பாதித்த முக்கிய காரணியாக அமைந்துவிட்டது.

படத்தின் ஆறு பாடல்களையும் ஆடியோவில் கேட்கும் போது நன்றாகத்தான் இருந்தது. மூன்று பாடல்களை படமாக்கிய விதமும் குறைசொல்லும்விதமாக இல்லை. (படத்தில் மூன்று பாடல்கள்தான்) பிறகு ஏன் மக்களிடம் பிரபலமடையவில்லை என்று பார்க்கும்போது சேனல்கள் எதிலும் திரும்பத்திரும்ப ஒளி (ஒலி) பரப்பாகவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இப்போது படம் எடுப்பது கூட பெரிய விசயம் இல்லை. அதை மார்க்கெட்டிங் செய்வதும், தியேட்டர்களை பிடிப்பதும், அதற்கு முதல் இரண்டு வாரங்கள் கூட்டம் சேர்ப்பதும்தான் பெரிய வேலையாக சவாலாக இருக்கும் என்று பலரும் சொல்வது கந்தா படத்திலும் உண்மையாகிவிட்டது.

படம் நல்ல கருத்தைதான் சொன்னது என்றாலும் அதையும் தாண்டி முழு அளவில் மனது திருப்தி அடைந்தது என்று உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. படத்தில் ஒரு மெசேஜ் கூட சொல்லாமல் வெற்றிபெறும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு அமைந்துவிடுகிறது. பாபு எதுவும் மெசேஜ் சொல்லவில்லையோ என்று நினைத்துவிடவேண்டாம். ஆசிரியரும், பெற்றோரும்தான் சமூக விரோதிகள் உருவாக காரணம் என்ற அழுத்தமான மெசேஜ் படத்தில் இருக்கிறது. ஆசிரியரும், பெற்றோரும் தவறானவராக இருந்துதான் பிள்ளையை வீணடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கேட்காத கடனும், பார்க்காத பயிரும் பாழ் என்ற விதிக்கேற்ப பிள்ளையை கவனிக்காமல் விட்டால் கூட சிக்கல்தான் என்ற கருத்து மறைமுகமாக படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் கந்தா படத்தில் சொல்ல வந்த விசயம் மக்கள் மனதை தொடுவதற்கு தவறிவிட்டது. மேக்கிங்கில் குப்பை என்று சொல்லும்படி எல்லாம் எந்த தவறும் இல்லை. இந்த காரணத்தால்தான் மக்களுக்கு பிடிக்கவில்லை என்று அறுதியிட்டு கூறுவது கடினம்.

முதல்வன் படம் படு ரிச்சான ஒரு பேண்டசி கதைக்களம். அந்த படத்தை நான் பார்க்கும்போது, படத்தின் கிளைமாக்ஸ் மிகப்பெரிய சேசிங், அதிரடி சண்டை என்றெல்லாம் இருக்கலாம் என்று யூகித்தேன். ஆனால் யாரும் அவ்வளவு எளிதில் யூகிக்காத வகையில் நாலு சுவற்றுக்குள் ரகுவரனை வைத்து முதல்வரின் பாதுகாவலர்களையே சுட்டுக்கொல்லவைத்தது என்று ரொம்ப சிம்பிளான கிளைமாக்ஸ்தான் இருந்தது. ஆனால் ரசிகர்களை திருப்திப்படுத்திவிட்டது. 

என் பார்வையில் அதற்கு காரணம், கிளைமாக்ஸ் வருவதற்கு சில காட்சிகள் முன்பாகவே இளைஞர்கள் கையில் ஆட்சி, ஊழல் பெருச்சாளிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள் என்ற வகையில் காட்சிகள் அமைந்ததிலேயே ரசிகர்கள் திருப்தி அடைந்திருக்க வேண்டும். பெரிய விசயத்தையே சாதித்தாயிற்று. மூட்டைப்பூச்சியை நசுக்க ராணுவம் என்பதெல்லாம் தேவையில்லை. சின்ன விசயத்தை வைத்து ரகுவரனை காலிசெய்துவிடலாம் என்று காட்சி அமைந்ததால் ரசிகனும் திருப்தியாகி விட்டான் என்று சொல்லத் தோன்றுகிறது.

1994ன் இறுதியில் வெளிவந்த படம் புதிய மன்னர்கள். இப்போதும் பொதிகை, மெகா மற்றும் பல தொ(ல்)லைக்காட்சிகளிலும் இந்தப் படம் அவ்வப்போது ஒளிபரப்பாகிறது. படம் வந்தபோது மட்டுமல்ல இப்போதும் தொலைக்காட்சிகளில் படத்தைப் பார்த்த யாரும் படம் நல்லாயில்லை என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனாலும் படம் ஓடவில்லை. இப்படியும் சில படங்களுக்கு பரிதாப ரிசல்ட் கிடைக்கும்.

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற கருத்தை முன்வைத்து நாடோடிகள் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தக் கதை யாருடை மனதிலும் சொந்தக்கற்பனையாக உருவான கதையோ, அல்லது தழுவல், உருவலோ என்று நான் வாதிடவில்லை. ஆனால் அந்தப் படத்தை நான் முதன்முதலில் பார்த்ததும் 2000 அல்லது 2001ஆக இருக்கலாம். கல்கி வார இதழ் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற தொலைந்தகாலம் என்ற சிறுகதைதான் என் நினைவுக்கு வந்தது.

ஜி.ஆர்.சுரேந்தர்நாத் எழுதி இரண்டாம்பரிசு ரூ.7,500 பரிசு பெற்றதுடன் அதை எழுதிய எழுத்தாளர் 35 வயதுக்குட்பட்டவர் என்பதற்காக கூடுதலாக 500 ரூபாயும் பரிசு பெற்ற கதை அது.

நண்பனின் காதலுக்கு உதவப்போய் நண்பன் காதலியின் அப்பாவையோ அண்ணனையோ தவறுதலாக கொலைசெய்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வருவான். ஆனால் நண்பனின் பணக்கார மனைவி வசதி வாய்ப்பில்லாத சூழ்நிலையில் வாழ விருப்பமின்றி அவனை விட்டு பிரிந்து சென்றிருப்பாள். வாரத்தில் இரண்டுநாட்கள் குழந்தையை பார்க்கலாம் என்ற அளவில் விவாகரத்து வழக்கு தீர்ப்பாகி இருக்கும்.

நண்பனின் அரைவேக்காட்டு காதலுக்காக தன் இளமைக்காலம், தன் சகோதரியின் நின்றுபோன திருமணம் என்று பல இழப்புகளை தந்துச் சென்ற தொலைந்த காலத்தை நினைத்து அந்த கதாபாத்திரம் வருந்துவதாக கதை முடியும்.

பொதுவாக சிறுகதைகள், நாவல்களை படமாக்குவதில் பல சிரமங்கள் உண்டு. கதாசிரியரை திருப்திபடுத்த நினைத்தால் ஆடியன்ஸ் எஸ்கேப்பாகிவிடுவார்கள். அதற்காக கதையின் மையக்கருவையே சிதைத்து சின்னாபின்னமாக்கி கதை அல்லது நாவலின் பெயரைக்கெடுக்கும் காரியங்களையும் பல இயக்குனர்கள் செய்ததுண்டு. ஆனால் நாடோடிகள் படத்துக்கு அமைக்கப்பட்ட திரைக்கதை ரசிகர்களைக் கட்டிப்போட்டதன் காரணமாக பெரிய வெற்றி பெற்றது.

கல்கியில் வெளிவந்த சிறுகதையை ஒருபாராவில் சொன்னாலும் முழுக்கதையும் புரிந்துவிடுகிறது. இந்த கதைக்கரு இரண்டரை மணி நேரப்படமாக வந்தபோதும் ரசிகர்களைக் கவரும் வகையில் இருந்தது.

திகில், முழு நீளக்காமெடி படங்கள் சில நேரங்களில் விதிவிலக்காகிவிடும். ராஜேஷ் இயக்கிய மூன்று படங்களில் பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் மட்டும் லேசாக கதை இருந்தது மாதிரி (அது எங்க சார் இருந்தது. நானே கதை இல்லைன்னு ஒத்துகிட்டேன் அப்படின்னு இயக்குனர் ராஜேஷ் சொல்லலாம்.) எனக்கு தெரிந்தது. காமெடி என்ற பெயரில் மொக்கை ஜோக் சிலவற்றை வைத்து படத்தை முடிக்காமல் காட்சி அமைப்புகளே சிரிப்பை வரவழைத்ததும், சந்தானத்தின் முகபாவனைகளும் அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். அத்துடன் பாடல்களும் நயன்தாராவும் பக்கபலமாக இருந்தனர்.

முனி பார்ட் 1-ஐ விட காஞ்சனா (முனி பார்ட் 2)  அதிரடி வெற்றி. அதற்கு முக்கிய காரணம் திகில் சமாச்சாரத்துடன் காமெடியைக் கலந்ததுதான். இதையயல்லாம் பார்க்கும்போது எனக்கு ஒரு விசயம் மட்டும் ஓரளவு விளங்குகிறது. கருத்து சொல்லு, சொல்லாம போ... பாடல்கள் ஓரளவு கேட்கும்போதே தாளம் போடச்செய்வதாக இருக்க வேண்டும். சிரிப்புக்கு உத்திரவாதம் தரவேண்டும். அதனால் வயிற்று வலி என்று ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் ரசிகர்களில் பெரும்பாலனவர்கள் இருக்கிறார்கள்.

திருவாரூர் பாபுவும் காமெடிக்கு என்று குண்டு ஆர்த்தி, சத்யன், விவேக்கின் தனி காமெடி டிராக் என்று பயன்படுத்தி காட்சிகள் அமைத்திருந்தார். அத்துடன் பாடல்களும் நன்றாகத்தான் இருந்தன. ஆனாலும் வெற்றிக்கனியைப் பறிப்பதைத் தடுக்கும் வில்லனாக சரியான நேரத்தில் படம் ரிலீசாகாதது அமைந்துவிட்டது.

அவருடைய பேட்டி தினகரன் வெள்ளி மலரில் 5-4-2013 பிரசுரமாகியுள்ளது.

Page 1

Page 2

தில், கில்லி உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளரான கோபிநாத் தயாரித்து ஒளிப்பதிவு செய்யும் படமாக தேரடிவீதி திருக்கண்ணபுரம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இது திருவாரூர் பாபுவின் இரண்டாவது படம். இந்தப்படத்தில் அவருக்கு எல்லாவிசயமும் கூடி வந்து வெற்றி தேவதை அவரது படத்தை முத்தமிடவேண்டும் என்று என்னுடைய மானசீக குருவுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

10 ஏப்ரல் 2013 ஆனந்த விகடன் இதழில் திருவாரூர் பாபு எழுதிய கதையின் சில பாராக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.

-----------------------------------------------------

யாருக்கும் சொல்ல வழி இல்லை. போலீஸ் எப்பவும் கண்காணிச்சுக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு உணர்வு. செல்போன்கூட வெச்சுக்கலை. உன்னைக் கண்காணிச்சுட்டு இருப்பாங்களோ... என்னால கஷ்டப்படுவியோனு நெனப்பு. அதான் உனக் குக்கூடச் சொல்லாம... எல்லாம் நாசமாப்போச்சுடா.

நான் காணாப் போனதும் உன்னையும் ரெண்டு நாள் ஸ்டேஷன்ல வெச்சு விசாரிச்சதா கேள்விப்பட்டேன்... அழுதேன். எனக்கு வேற வழி தெரியலடா. என்னை மன்னிச்சிரு... உன்னைப் பார்க்கணும்... உன்கூடப் பேசணும்னு துடிச்சிருக்கேன். ஆனா, பொண்டாட்டி குழந்தைகளோடு இருக்கற உனக்கு, என்னால சங்கடம் வந்துடக் கூடாதுனு உறுதியா இருந்தேன். அதனாலதான் இத்தனை வருஷமா உன்னைத் தவிர்த்தேன்!''

வேட்டியால் முகம் துடைத்துக்கொண்டான். 20 வருட சோகத்தை, ஆற்றாமையைத் தன்முன்னே இறக்கிவைக்கிறான் என்பது பரமேஸுக்குப் புரிந்தது . 

''ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா அகால மரணம் அடைந்தார். இந்த போட்டோவ பெரிசா வெச்சு நான் பிறந்த தேதி, இறந்த தேதி எல்லாம் போட்டு, போட்டோ பின்னால  எழுதியிருக்கேன். நாற்பத்துச் சொச்சம் வயசுல நான் செத்துப் போனதை இந்த ஊருக்குச் சொல்லணும்டா. பழைய போட்டோவைப் போட்டாதான் என்னை அடையாளம் தெரியும். ஆயிரம் போஸ்டர் அடிச்சு தெருத் தெருவா ஊர்ல உள்ள அத்தினி சுவத்துலயும் ஒட்டு. என்கிட்ட ஏமாந்தவன், நான் ஏமாத்தினவன் எல்லாம் போஸ்டரைப் பார்த்து 'தொலைஞ்சான்’னு ஒரு பெருமூச்சுவிடுவான். அதுதான் என் ஆத்மா சாந்தி அடையறதுக்கான மந்திர வார்த்தை. எனக்காக இதைச் செய்வியா? என்னோட கடைசி ஆசைடா...''