Search This Blog

சனி, 12 மார்ச், 2011

தடுமாறுகிறதா இளையபாரதம்?

அப்துல்கலாம் ஐயா இளைஞர்களை நல்ல விதமா பெரிய லட்சியத்தை அடையணும்னு கனவு கண்டு அதற்கான முயற்சிகள்ல இறங்க சொன்னாங்க. சொல்லிகிட்டும் இருக்காங்க.

ஆனா இளைய தலைமுறையில பொறுப்பில்லாம நடந்துக்குறவங்களோட சதவீதம் அதிகமாகிட்டே வருதோன்னு சந்தேகமா இருக்கு.

ஓரிரு நாட்களுக்கும் முன்பு திருச்சி பகுதியில லஞ்சம் வாங்கி பிடிபட்ட தனி தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய ரெண்டு பேரோட போட்டோவும் சில பத்திரிகைகளில் வந்திருந்தது.

அந்த தனி தாசில்தாருக்கு அம்பது வயசு இருக்கும்னு நினைக்கிறேன்.(பல பேரோட உடம்பு இதெல்லாம் எனக்கு பிடிக்கலைன்னு அலர்ஜியானாத்தான் டை அடிக்கிறதையே நிறுத்துறாங்க. அதனால வயசை சட்டுன்னு சொல்ல முடியலை.) அந்த ஆள் ஜாலியா ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போறது மாதிரிதான் வர்றாரு. இவய்ங்க என்னத்த, தண்டனை, வாங்கி அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சிருக்கலாம்.

ஆனா கூட பிடிபட்ட வி.ஏ.ஓ பொண்ணுக்கு இருபத்து நாலு வயசுதான் ஆகுதாம். லஞ்ச வழக்குல பிடிபட்ட குறைஞ்ச வயசு ஆள் இந்த விஜயலெட்சுமியாத்தான் இருக்கும்னு சொல்றாங்க. (சத்தமா சொல்லாதீங்கப்பா...ஒருத்தர் அதை பாராட்டி அறிக்கை விட்டுட்டு உடனே அதுக்காக தனக்கு பாராட்டு விழா நடத்தணும்னு அடம் பிடிப்பாரு.)

இந்த பொண்ணு பணியில சேர்ந்து ஆறு மாசம்தான் ஆகுதாம். அரசுத்துறையில இருக்குற பல கேடு கெட்ட அதிகாரிகள் லஞ்சம் வாங்குறதை நியாயப்படுத்தி சொல்ற ஒரே காரணம் என்ன தெரியுமா?

"வேலை வாங்க அல்லது பிரமோஷன் வாங்க லஞ்சம் கொடுத்தேன்."

இந்த பொண்ணு இப்போ தேர்வு எழுதி அதுல வேலை வாங்கினதாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் ஏன் இந்த பேராசை?

ஆனா இந்தப் பொண்ணு லஞ்சம் வாங்க மாட்டேன்னு சொன்னா, இவ எங்க நம்மை எல்லாம் மாட்டி விட்டுடுவாளோ...அதனால இவளை எந்த வம்புலயாவது கோர்த்து விட்டுடணும்னு ஒரு கூட்டம் தயாராயிருக்கும். இதுக்கு பயந்துதான் பலரும் வாங்க ஆரம்பிப்பாங்க. அப்புறம் என்ன புலிவால் புடிச்ச கதைதான்.

பிறகு, அந்த வழக்கம், ஆசையாகி பேராசையாக ரொம்ப காலம் ஆகாது.

என்னைப் பொறுத்தவரை அரசியல்வியாதிகள் கட்சி நடத்தவும் தேர்தலுக்கு செலவழிக்கவும் பெரிய பெரிய பேங்க்கை கொள்ளை அடிச்சாதான் முடியும். அது நடைமுறையில அவ்வளவா சாத்தியமில்லை. அதுதான் மக்கள் சுரண்டப்படுற எல்லா விஷயங்களிலும் இவங்க மையப்புள்ளியா இருக்காங்க.

இப்போ நாகப்பட்டினத்துல ஒரு பெண், கண்டக்டரை தாக்கியதால ரெண்டு மணி நேரம் பேருந்தை இயக்காம வேலை நிறுத்தம் பண்ணியிருக்காங்க.

அந்தப் பெண், எட்டு ரூபாய் டிக்கட்டுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டியிருக்கு. அதுல ஆரம்பிச்சிருக்கும் வில்லங்கம்.

நாகப்பட்டணத்துல இறங்கியதும் மாத்திக்குடுங்கன்னு நடத்துனர் சொல்லியிருக்காரு.

அந்த அம்மாவும் எங்கயோ சில்லறை மாத்தி ஐம்பது ரூபாயை குடுத்துருக்கு. நாற்பது ரூபாயை மட்டும் கொடுத்துட்டு ரெண்டு ரூபாயை தராம போயிருக்காரு. அதை அந்த அம்மா கேட்டதும் தகராறு ஆயிருக்கு.

ரெண்டு ரூபாயை அந்த அம்மா மூஞ்சியில தூக்கி வீசிட்டு அசிங்கமா பேசுனதாலதான் செருப்பால அடிச்சேன்னு அவங்க சொல்றாங்க. கண்டக்டர் வேற எதோ காரணம் சொல்றாரு.

டூட்டியில இருக்குறப்ப அவங்க என்ன செஞ்சாலும் பயணி மேலதான் குற்றம் சுமத்தப்படும்னு ஒரு காரணத்தை வெச்சுகிட்டு இவங்க ஆட்டம் தாங்கலை.

பஸ்சுல இருக்குற ஐம்பது பேருக்கும் 1ரூபா, ரெண்டு ரூபா சில்லரை குடுக்குற சூழ்நிலையில பணம் இல்லைன்னா கஷ்டம்தான். அதை நாகரிகமான வார்த்தையில அழுத்தமா மறுக்க நிறைய கண்டக்டருங்களுக்கு தெரியுறதே இல்லை.

பயணி கிட்ட இருந்து தப்பான வார்த்தை வர்றதுக்கு முன்னாலயே கேவலமான பேச்சு பேசுறதையே நிறைய கண்டக்டர்கள் பிழைப்பா வெச்சுருக்காங்க.

நான் பார்த்த வரை, பயணிகள் கிட்ட நல்லா பேசுற கண்டக்டருங்க கொஞ்சம் கம்மிதான். எரிஞ்சும் விழாம குழையவும் இல்லாம நடந்துக்குறவங்கதான் அதிகம்.

ஆனா இப்போ செருப்படி வாங்குன மாதிரியான கண்டக்டருங்க ரொம்ப பேர் அரசு பஸ் தனக்கே சொந்தம்னுங்குற மாதிரி நடந்துக்குறாங்க. அராஜக அரசியல்வாதிகளோட பிம்பம்தான் இவங்களும்.

பஸ்சுல போகும் சூழ்நிலை வர்றப்ப அப்பாவியான ஆட்கள் பலரும் ஓரளவு சில்லரையோடதான் போறாங்க.

அப்படி இல்லாம வீம்புக்காகவும், குடிச்சுட்டும் பிரச்சனை பண்ற சிலரை கண்டக்டர்கள் கண்டுக்குறதே இல்லை. அவங்க வீரமெல்லாம் அப்பாவிகள் மேலதான்.

என்னத்த சொல்றது?

வியாழன், 10 மார்ச், 2011

முதல்வன்-சில சிந்தனைகள்...

இன்னும் எத்தனை கோடி மனிதர்கள் பிறந்தாலும் அவர்களின் தேவைகளை நிறைவேற்ற பூமியில் இருக்கும் வளங்களுக்கு வல்லமை உண்டு. ஆனால் எத்தனை பூமி உருவாகி நினைத்தாலும் அவற்றால் ஒரே ஒரு மனிதனின் பேராசையை கூட நிறைவேற்ற முடியாது.

இது காந்தியடிகளின் கூற்று. இந்த நிலையை நோக்கி நம் நாடு ரொம்பவும் வேகமாக சென்றுகொண்டிருப்பது கண்டு ரொம்பவே நான் அதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். இதைத் தவிர வேறு என்னதான் செய்வது?

எதிலும் முதல்வனாக இருக்க வேண்டும் என்ற இலக்கு சரிதான். ஆனா அதற்காக தகிடுதத்தம் செய்வது ஆபத்தானது. இது சாதாரண ஆட்களுக்கு.

இன்னும் சிலர் இருக்கிறார்கள், எதிலும் முதல்வனாக மட்டுமல்ல எல்லா நம்பராகவும் தானே இருக்க வேண்டும் என்ற கொடூர எண்ணத்துடன். அதாவது மற்றவர்களை ஒழித்துக்கட்டிவிட வேண்டும். இது அதிகாரத்தில் இருப்பவர்களின் பேராசை. ஒண்ணாம் நம்பராக மட்டுமல்ல...ஒரே நம்பராக இருக்க வேண்டும் என்பதை கொள்கையாகவே வைத்திருக்கும் பேர்வழிகளிடம்தான் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறோம்.

திருவாரூரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இளையாங்குடி (இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது). அங்கிருந்து சாலைக்கிராமம் செல்லும் சாலையில் சில மைல் தூரத்தில் உள்ள எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மாசிமாத மஹா சிவராத்திரி அன்று மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடும்.

நான் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் பௌர்ணமி வழிபாட்டுக்கு சென்று வந்து விட்டதால் இப்போது செல்லவில்லை. இன்னொரு உறவினர் திருவாரூரில் இருந்து கிளம்பி சென்ற நேரத்தையும் வழிபாடு முடித்து இங்கே ஊர் திரும்பிய நேரத்தையும் சொன்னபோது எனக்கு மயக்கம் வராத குறைதான்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ஜெயலட்சுமி என்ற தனியார் பேருந்தில் அதிகாலை 5 மணிக்கு கிளம்பினால் கிட்டத்தட்ட ஏழரை மணி வரை பார்த்து பத்திரமா (60 கிலோ மீட்டர்) அழைச்சுட்டு போவாங்க. அப்புறம் அங்க ஒரு ஹோட்டல்ல காலை டிபனை முடிச்சுட்டு எட்டு மணி சுமாருக்கு பரமக்குடி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தால் அது அறந்தாங்கி, காரைக்குடி, காளையார் கோவில், கல்லல், இளையாங்குடி வழியாக ஊர்ந்து மதியம் மூன்று மணிக்கு பரமக்குடிக்கு போய்ச் சேரும்.

அப்போதெல்லாம் நாம என்னமோ நானூறு கிலோ மீட்டர் பயணம் செய்யுறதா நினைச்சுக்குவேன். சும்மாவா...பத்து மணி நேரப் பயணமாச்சே.( காலை 5 மணிமுதல் மதியம் 3 வரை கணக்கிட்டு பாருங்க. சரியா இருக்கும்.)

அப்புறம் 1993, 94ம் வருஷமா இருக்கலாம். பரமக்குடியில இருந்து தஞ்சாவூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அஞ்சரை முதல் அஞ்சே முக்கால் மணி நேரப் பயணம். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு சுமாரா ரெண்டு மணி நேர பயணம்(65 கி.மீ). மொத்தமா எட்டு மணி நேரத்துல ஊருக்கு போக முடியுதேன்னு சந்தோஷப்பட்டோம்.

இதுல என்ன கொடுமைன்னா பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியா பரமக்குடி போனா நூற்றி தொண்ணூறுல இருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவுதான்னு நினைக்கிறேன். சமீபமா பத்து ஆண்டுகளுக்குள்ளதான் இந்த சாலைகளை முழுமையா இருவழி போக்குவரத்துக்கு ஏதுவா அகலப்படுத்துனாங்க. ஆனா தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி வழியா போனா இருநூற்று நாற்பது முதல் இருநூற்று அம்பது கிலோமீட்டர் தொலைவு இருக்கும். ஒவ்வொரு ஊருக்குள்ளயும் பேருந்து நிலையம் சென்று ஊருக்குள்ள சுத்தி திரும்புற தொலைவு தனி.

அப்புறம் இந்த நேரத்தையும் குறைக்க முடியுமான்னு யோசிச்சேன். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடின்னு போனா  இருநூற்று நாற்பது கிலோ மீட்டர் தொலைவுதான். ஆனா சரியா பஸ் கிடைத்து போனா ஏழு மணி நேரத்துக்குள்ள போயிடலாம்.

அதிலும் பரமக்குடியில் அதிகாலை 4 மணிக்கு திருச்சிக்கு மானாமதுரை, திருப்பத்தூர் வழியாக செல்லும் பேருந்தில் ஏறினால் பெரும்பாலும் காலை ஏழு இருபத்து ஐந்துக்குள் புதுக்கோட்டை வந்துவிடலாம். அடுத்த இரண்டு நிமிடங்களில் அடுத்த பேருந்தில் ஏறிவிட்டால் எட்டே முக்காலுக்குள் தஞ்சைக்கு செல்வதும் உறுதி. பிறகு அங்கிருந்து ஒண்ணே முக்கால் மணி நேரம். பெரும்பாலும் பத்தரை மணிக்குள் திருவாரூர் வந்து விடலாம். ஏறத்தாழ ஆறரை மணி நேர பயணம்.

இவ்வாறு ஒவ்வொரு ஊரிலும் மாறி செல்லும்போது சில நாட்களில் அதிக கூட்டம், ஊர்வலம் என்று எதாவது காரணங்களினால் சரியான சமயத்தில் பஸ் கிடைப்பது சிக்கலாகிவிடும்.

பத்து மணி நேர பயணம் ஆறரை மணி நேரமாக சுருங்குவதற்கு எவ்வளவு போராட்டம் நடக்கிறது என்று பாருங்கள்.

பயணதூரம் குறையும் வகையில் வழி இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக முத்துப்பேட்டை சென்ற உடன் அடுத்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் செல்ல கிட்டத்தட்ட இருநூறு கிலோ மீட்டர் தொலைவு இருந்தாலும் சொந்த வாகனம் என்றால் அதிகபட்சம் மூன்று மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.

எங்கள் உறவினரில் சிலர், இந்த பாதையில் ராமநாதபுரம் வரை செல்லாமல் தொண்டியை அடுத்த உப்பூர் வழியாக சாலைக்கிராமம் சாலையில் சென்று கோவிலை அடைந்திருக்கிறார்கள். மொத்த பயண நேரம் மூன்றரை மணி நேரத்திற்கும் குறைவுதானாம்.

ரோடு சூப்பர் என்று என்னிடம் பாராட்டிப் பேசினார்கள். அதெல்லாம் சரிதான். இப்போ இருக்கும் சந்தோஷம் இன்னும் சில ஆண்டுகளில் காணாமல் போய்விடும். ஆங்காங்கே டோல்கேட் அமைத்து சுங்கவரி என்ற பெயரில் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

சாலை நன்றாக இருக்கவேண்டும் என்றால் இந்த மாதிரியான செலவினங்களை சமாளித்துதானே ஆக வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இந்த சாலைகளுக்கு எவ்வளவு செலவாகிறது, அதில் அரசின் பங்கு எவ்வளவு, தனியாரின் பங்கு எவ்வளவு, அதற்கு குறிப்பிட்ட தொகை லாபம், வட்டி, பராமரிப்பு, ஊழியர்களின் ஊதியம் போன்ற செலவுகள் போக எவ்வளவு தொகை மிக அதிகமாக வசூலிக்கிறார்கள் என்ற விபரமே தெரியவில்லை.

ஒரு நகராட்சிக்கு சொந்தமான கடைக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வாடகை தருவதாகத்தான் அரசியல்வாதி ஒப்பந்தம் செய்திருப்பார். ஆனால் உள் வாடகையாக தினமும் ஆயிரம் ரூபாய் கூட வசூலிப்பார். இதே மாதிரியான கொள்ளைகள்தான் சுங்க வரி வசூல் செய்வதிலும் இருக்கும்.

பக்கத்து மாநிலமான கேரளாவில் படகுப்போக்குவரத்து நிறையவே நடக்கிறது. சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவுக்கு, இரண்டரை மணி நேர படகுப்பயணத்துக்கு பத்து ரூபாய்தான் வசூலிக்கப்படுகிறதாம். ஆனால் இங்கே கன்னியாக்குமரியில் ஐந்து நிமிட பயண தூரத்தில் இருக்கும் விவேகானந்தர் பாறைக்கு செல்ல முப்பது ரூபாய் கட்டணம். அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல வேண்டுமானால் அதற்கு தனி கட்டணமாம்.

அரசியல் வியாதிகள் செலவழிக்கும், பத்து தலைமுறைக்கு சேர்த்து வைக்கும் எல்லா பணமும் கோவில்களில் இருந்து கழிப்பறை வரை எல்லா இடத்திலும் இப்படித்தான் சாதாரண பொது மக்களிடமிருந்து அநியாய கட்டண முறையில் வலுக்கட்டாயமாக பிடுங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இரட்டை ரயில் பாதை இருந்தால் எவ்வளவு எரிபொருள் மிச்சமாகும், எவ்வளவு சாலை விபத்துகள் குறையும்?...அது அவ்வளவு எளிதானது இல்லைன்னு சொல்லிடாதீங்க. ஆறு மாசத்துல அவ்வளவு பெரிய தலைமைச் செயலகம் கட்ட முடியும்போது இது முடியாதா. நான் சொல்வது போல இரட்டை ரயில் பாதை வந்துவிட்டால் ஆம்னி பஸ் பிஸினஸ் படுத்து விடும். அப்புறம் எங்களுக்கு வருமானம்?- இப்படி ஒரு எண்ணம்தான் அரசியல்வாதிகள் மனதில் ஓடும்.

பதிவின் நீளம் அதிகமாகி விட்டது. இதே போல் நாம் சுரண்டப்படும் பல  விஷயங்களை அவ்வப்போது பதிவிட முயற்சிக்கிறேன்.