Search This Blog

புதன், 9 மார்ச், 2011

மறைவில் ஒரு உதயம்

சிறுகதையோட டைட்டிலைப் பார்த்ததுமே என்ன சொல்ல வந்துருக்கேன்னு உங்களுக்கெல்லாம் புரிஞ்சிருக்கும். தெரியாதவங்க கதையைப் படிச்சு முடிக்கும்போது தெரிஞ்சுக்குவீங்க.

கிராமத்துல 'ஆடு பகை, குட்டி உறவா' அப்படின்னு ஒரு பழமொழி உண்டு. உறவுக்காரங்க யார் கூடவாவது சண்டை போட்டுட்டு ஈகோ காரணமா பேசிக்காம இருப்பாங்க. ஆனா மனசுக்குள்ள பாசம் இருக்கும். அதனால பகையா நினைச்சுகிட்டு இருக்குறவங்களோட புள்ளைங்ககிட்ட நல்லாவே பழகுவாங்க. இதுதான் அந்த பழமொழிக்கான விளக்கம். வெளி ஆள் இது பத்தி கேட்டா, அடப்போப்பா...எதோ கோபத்துல அவங்க அப்பனும் நானும் பேசாம இருக்கோம். இந்த புள்ளைக என்ன பண்ணும் பாவம்... அப்படின்னு ரொம்ப இயல்பா கேட்பாங்க.

அதெல்லாம் அந்தக்காலம். இப்போதைய காலகட்டத்துல குட்டிகளே ஆடுகளை பகையா நினைக்குது. ஆனா ஆடுகளோட சொத்தும், பணமும் வேணும். என்ன உலகம் இது.

மறைவில் ஒரு உதயம் சிறுகதை பக்கம் 1
மறைவில் ஒரு உதயம் சிறுகதை பக்கம் 2

கதையைப் படிச்சு முடிச்சவங்க இது என்னடா இவன், ஹிதேந்திரன் கதையை அடிப்படையா வெச்சு எழுதியிருக்கானேன்னு நினைக்கலாம். ஆனால் நான் 'மறைவில் ஒரு உதயம்'-இந்த டைட்டில்ல தேவி வார இதழ்ல ஒரு சிறுகதையை எழுதினேன்.அந்த கதை வந்து சில மாதங்களுக்குப் பிறகுதான் ஹிதேந்திரன் சம்பவம் நடந்துச்சு.

திரும்பவும் அந்த கதையை தூசி தட்டி வேற மாதிரி எழுதினேன். அதுதான் இப்ப உங்கள் பார்வைக்கு இருக்கு. தேவி வார இதழ்ல வெளிவந்த கதையை விரைவில் பதிவேற்றுவேன்.

உங்களுக்கெல்லாம் இன்னொரு சந்தேகம் வந்துருக்கும். இந்த கதை இருக்குற ரெண்டு பக்கமுமே எதோ ஒரு புத்தகத்துல வந்தது மாதிரியே வடிவமைக்கப்பட்டுருக்கேன்னு யோசிப்பீங்க. இது சும்மா நானா முயற்சி செய்து பார்த்ததுங்க. ஒரு பிரபல நாளிதழ்ல தினமும் பக்க வடிவமைச்ச பிறகு இந்த அளவுக்கு கூட பிளாக்-ல முயற்சி செய்து பார்க்கலைன்னா அது எவ்வளவு பெரிய கொடுமை சார். அதான் இந்த விபரீத முயற்சி.

இந்தப் பக்கத்தை இன்னும் குவாலிட்டியா பதிவு செஞ்சிருக்கலாம். ஆனா பலருடைய கம்ப்யூட்டர்ல திறக்க ரொம்ப நேரம் ஆக வாய்ப்புண்டு. அந்த அளவுக்கு பொறுமை இருக்காதுன்னுதான் சுமாரான தரத்துல jpeg பார்மெட்ல போட்டிருக்கேன். இது பிடிஃஎப் பைலா இருக்கும்போது இன்னும் தெளிவா இருக்கும். அந்த பார்மட்ல படிக்கணும்னு தோணுச்சுன்னா பின்னூட்டத்துல தெரிவியுங்க. மெயில்ல அனுப்பி வெக்கிறேன். (நல்லவேளை...நாங்க எஸ்கேப் ஆயிட்டோம்னு யாருப்பா குரல் கொடுக்குறது...)

புதன், 2 மார்ச், 2011

நீங்க சரவணனா...உங்களைத்தான் தேடுறோம்

முருகப்பெருமானே பக்தைக்கு உதவி செய்ய மனித ரூபத்துல வர்ற கதை அப்படி இப்படின்னு பில்ட்டப் கொடுத்து ரிலீஸ் செய்திருக்காங்க. நான் தியேட்டர்ல படம் பார்த்து ரொம்ப வருஷம் ஆகுது. ஆனா ஒரு நொடி எனக்கே ஆசை வர்ற மாதிரி இன்னைக்கு தினத்தந்தியில ஒரு விளம்பரம்.

படத்துல தனுஷ் பேரு சரவணனாம்

நீங்க சரவணனா...அப்போ 4 சரவணன்களுக்கு இலவச அனுமதி. ஒரு காட்சிக்கு ஒரே ஒரு சரவணனுக்கு மட்டும் ஓசி டிக்கட் அப்படின்னு விளம்பரத்தைப் பார்த்ததும் போகலாமான்னு தோணுச்சு. ஆனா கீழே வழக்கம்போல ஒரு வார்த்தை நட்சத்திரக் குறியோட இருந்துச்சு. வேற என்ன, நிபந்தனைக்குட்பட்டதுதான். இந்த ஒரு வார்த்தையை வெச்சு அப்பாவி நுகர்வோரை(என்னை மாதிரி அப்பாவிகளை) என்ன பாடு படுத்துறாங்க.

இந்த வார்த்தையால என்ன ஆச்சுன்னுதானே கேட்குறீங்க. நான் போய் ஓ.சி டிக்கட் கேட்க, அவங்க பதிலுக்கு வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் - இவங்ககிட்ட எல்லாம் நாந்தேன் சரவணன்னு புதுசா சர்டிபிகேட் வாங்கிட்டு வர சொல்லிட்டாங்கன்னு வெச்சுக்குங்க.

ஏன் இந்த மாதிரி ரிஸ்க். நான் வேற வேற ஒரு நல்ல புனைப்பெயர் தேடிகிட்டு இருக்கேன். சொந்தப்பேர்ல எழுதுனா வாசகர் கடிதம் கூட தட்டுத்தடுமாறிதான் பிரசுரம் ஆகுது.(அதான் பிளாக்கை குப்பைத்தொட்டியாக்கி வெச்சிருக்கியேன்னு நீங்க நினைக்கிறது புரியுது.)

அதனால நான் என்ன முடிவெடுத்துட்டேன்னா, இப்போ தியேட்டருக்கு போகப்போறது இல்லை. அவ்வளவுதான்.

இருபது வருஷத்துக்கு முன்னால வரைக்கும் நாலு பேர் கொண்ட குடும்பம் (நடுத்தர நகரத்துல) ஒரு படம் பார்க்க அஞ்சு ரூபாய்ல இருந்து பத்து ரூபாய்க்குள்ள முடிஞ்சுடும். (இப்போ டூவீலர் பார்க்கிங்குக்கே இதை விட அதிகமா கறந்துடுறீங்கிளே.) அப்போ ஒரு ஆள் தினக்கூலியில முப்பது ரூபாயில இருந்து அம்பது ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஆக ஒரு குடும்பம் படம் பார்க்க ஆகுற செலவு அந்த ஆளோட தினக்கூலியில இருபது சதவீதத்துல இருந்து முப்பது சதவீதமாத்தான் இருக்கும்.

ஆனா இப்போ பெரும்பாலும் ஒரு ஆளோட சம்பளம் நூத்தம்பது ரூபாயில இருந்து இருநூறு ரூபாயாத்தான் இருக்கு. (இதை விட பல மடங்கு அதிகமா சம்பாதிக்கிற ஆள் டாஸ்மாக்ல கொடுத்தது போக மீதிதான் மத்த செலவுக்கு.)

ஓரளவு நல்லா சம்பாதிக்கிற குடும்பத்தினர் படத்துக்கு போற அளவுக்கு நேரம் இருக்குறது இல்லை. வேலை முடிச்சுட்டு இரவு லேட்டா வர்றதும், காலையில சீக்கிரமே புறப்பட்டு ஓடுறதும்னு அவங்க பொழைப்பும் திண்டாட்டம்தான்.

தியேட்டர் காலியா இருக்க இன்னொரு முக்கிய காரணம் டிக்கட் கட்டணம்தான்னு எல்லாருக்குமே தெரியும். திருவாரூர்லயே ஒரு டிக்கட் ஃப்ளாப் ஆன படத்துக்கே அறுபது ரூபாய். பெரிய நடிகர்கள் படத்துக்கு ஒரு வாரம் வரை நூறு, எண்பதுன்னு விக்கிறாங்க.

சராசரி அறுபது ரூபாய் டிக்கட்டுன்னா நாலு பேர் இருக்குற குடும்பத்துக்கு ஸ்நாக்ஸ் செலவு சேர்த்து முன்னூறுக்கும் மேல ஆகும். பலருக்கு அது ரெண்டு நாள் சம்பளமா கூட இருக்கலாம்.

நல்லா கவனிக்கணும். ஒரு காலத்துல ஒரு ஆளோட ஒரு நாள் சம்பளத்துல முப்பது சதவீதம்தான் ஒரு குடும்பம் படம் பார்க்க செலவானுச்சு.

ஆனா இப்போ ஒரு குடும்பம் படம் பார்க்க ஒரு ஆளோட ரெண்டு நாள் சம்பளம் தேவைப்படுது.

சினிமா டிக்கட் விலை உயர்ந்துருக்குற வேகத்துல பெரும்பாலான மக்களோட வருமானம் உயரலை. அதோட ஒரு ஆள் ஒரு நாளைக்கு நானூறு ரூபாய் சம்பாதித்தாலும் அதைப் பிடுங்கி எறியுற மாதிரி விலைவாசி ஆயிடுச்சு.

அதனாலதான் மக்கள் டிவிடிக்கு முதலிடம் கொடுத்துட்டு தியேட்டரை கொஞ்சம் தள்ளி வெச்சுட்டாங்க. அது மட்டும் இல்லாம 24மணி நேரமும் தொலைக்காட்சியில எதாவது இருந்துகிட்டே இருக்கு.

யோசிங்கப்பா.

அப்புறம் இலவசம்னு படிச்சதும் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது. புதுச்சேரியில கலர்டிவிதான் எங்க எல்லார் வீட்டுலயும் இருக்கே. இன்னொரு டி.வியை வெச்சு என்ன செய்யுறதுன்னு மக்கள் ரொம்ப வருத்தப்பட்டாங்களாம். அதனால கம்ப்யூட்டர் இலவசமா வழங்க முயற்சி எடுப்போம்னு சொல்லியிருக்காங்க.

தமிழகத்துல மேல்சபை வாக்காளர் பட்டியல்ல பேர் சேர்த்தவங்களுக்கு ஒரு லேப்டாப்பும், மத்தவங்களுக்கு டெஸ்க் டாப்பும் கொடுக்கப்போறோம்னு அறிவிக்கப்போறாங்க.(நடத்துங்க...உங்க வீட்டு சொத்தையா வாரி வழங்கப்போறீங்க.)

தமிழ் நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிச்சாச்சு. கடந்த சில தேர்தல்ல சில அரசியல் வியாதிகளோட மன்னிக்கவும் அரசியல்வாதிகளோட பிரச்சாரம் மட்டுமில்லாம 49 (O) விதி குறித்த விழிப்புணர்வும் அதிகமாயிருக்கு.

நானும் போன தேர்தல்ல ஓ போடத்தாங்க போனேன். எங்களுக்கு இருக்குற வேலையில இது என்ன வெட்டி வேலைன்னு பூத் அலுவலர் போலீஸ்காரர்கிட்ட புகார் பண்ணிட்டார். உடனே ஒரு ஏட்டும், இன்ஸ்பெக்டரும் வந்து நீ யாரு, எங்க வேலை செய்யுற அப்படி இப்படின்னு மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க. கொலை செய்யுறவனும், கோடி கோடியா ஊழல் செய்யுறவனும் போலீஸ் காரங்களோட சிரிச்சு பேசிகிட்டு போறாங்க. எங்களை மாதிரி சட்டதிட்டத்தை மதிச்சு நடக்குற ஆளுங்களை போலீஸ் குற்றவாளியைப் போல் நடத்துது. என்ன கொடுமை சார் இது.

ஆனாலும் ஒரு ஆறுதல். போன நாடாளுமன்ற தேர்தல்ல புதுக்கோட்டையில மட்டும் பத்தாயிரத்துக்கும் அதிகமானவங்க வாக்களிக்க விருப்பமில்லைன்னு பதிவு செஞ்சிருக்காங்க.

அதிலும் ஒரு நெருடல். புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை கொத்து பரோட்டாவாக்கி பக்கத்துல இருக்குற எல்லா தொகுதியிலயும் சேர்த்துட்டதுக்காகதான் இந்த புறக்கணிப்பாம்.

இதே ஒற்றுமையோட செயல்பாடு திருப்தி அளிக்காத வேட்பாளரை எதிர்த்து இந்த மாதிரி முடிவெடுத்தா நாடு நல்ல வழிக்கு சீக்கிரமா போயிடும்.

அது சரி...கேஸ் அடுப்பு, டி.வி இதெல்லாம் எப்படி  ஓசியில வாங்க முடியும். அதையெல்லாம் விட்டுட்டு வடை போச்சேன்னு புலம்புற அளவுக்கு அப்பாவிகளா பொதுஜனம்.