Search This Blog

வியாழன், 7 நவம்பர், 2013

திருவாரூரில் திரைப்பட கலை இயக்குனர் டிராட்ஸ்கி மருது

12-11-2013 செவ்வாய் மாலை 6 மணி முதல் 9 மணி வரை திருவாரூர், கமலாலயம் தென்கரை, இராசம்மாள் திருமண அரங்கத்தில் நடைபெறும் விழாவில் ஓவியரும் திரைப்பட கலை இயக்குனருமான டிராட்ஸ்கி மருது மற்றும் பலர் பங்கேற்கிறார்கள்.

வைகறை எழுதிய மெளனமும் மணிமுடிகளும் நூல் அறிமுக விழாவை
இலக்கிய வளர்ச்சிக்கழகம் திருவாரூரில் நடத்துகிறது. அந்த விழாவிற்குதான் ஓவியர் டிராட்ஸ்கி மருது வருகை தர இருக்கிறார். திருவாரூர் பகுதியில் உள்ள இலக்கிய ஆர்வலர்கள், ஓவியர்கள் ஆர்வமிருந்தால் விழாவிற்கு வருகைதரலாம்.

-திருவாரூர் சரவணன்.
***********************
ஓவியர் டிராட்ஸ்கி மருது பற்றி சில வார்த்தைகள்.... அந்திமழை இணைய இதழில் வெளிவந்தது இங்கே....

"பத்திரிக்கைச் சித்திரங்களில் மருதுவினுடையது கற்பனை வளமிக்க ஓவியங்கள்.மருது செய்வது கதைகளுக்கான சித்திரங்கள் அல்ல.அவைகள் கலைப் படைப்புகள்.பத்திரிக்கைகாரர்கள் அவற்றை கதைகளுக்கு சித்திரங்களாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்"என்று சிற்பி தட்சிணாமூர்த்தி. கணையாழியில்(மார்ச் 1994)முன்பு குறிப்பிட்டிருந்தார்.

கலை சார்ந்த எல்லா தளங்களிலும் இயங்கும் டிராட்ஸ்கி மருது தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஓவியர்.

மதுரையில் பிறந்த மருது சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்றார்.பல விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த அவர் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் ஆர்ட் டைரக்டராகவும் பணிபுரிந்துள்ளார்.எழுபதுகளில் மங்கையர்மலர் ,தொண்ணூரில் குமுதம்(சுஜாதா ஆசிரியராக இருந்த காலம்),சென்னை நெசவாளர் கூடத்தில் டெக்ஸ்டைல் டிசைனராக பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ளார்.

சிறு பத்திரிக்கைகள் மற்றும் தீவிர இலக்கியங்களுக்கு நிறைய வரைந்துள்ளார்.

கோமலின் சுபமங்களாவில் இவர் வரைந்த நடுபக்க ஓவியங்கள் பெரிதாக சிலோகிக்கப்பட்டது.ஆனந்த விகடனில் மருது வரைந்த அனேக ஓவியங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது .

ஜனரஞ்சக பத்திரிக்கைகள் மற்றும் சிறு பத்திரிக்கைகளின் அன்பை ஒரு சேர பெற்ற ஓவியர்களில் மருது குறிப்பிடத்தக்கவர்.

தேவதை,அசுரன் மற்றும் மூன்று NFDC சினிமாக்களின் கலை இயக்குனராக மருது பணிபுரிந்துள்ளார்.

இது தவிர பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்பெஷல் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்.அவற்றில் ராஜகாளியம்மன்,பாளையத்தம்மன்,நாகேஸ்வரி,நைனா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

தமிழ், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது தீராத காதல் கொண்ட மருது தமிழின் முண்ணனி இலக்கியவாதிகளை கோட்டோவியத்தில் பதிவு செய்துள்ளார்.
 
நன்றி : அந்திமழை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக