Search This Blog

ஞாயிறு, 4 நவம்பர், 2012

அலுவலகத்துக்குள் மழை

ஒரு வில்லங்க சான்று வாங்குறதுக்கு இவ்வளவு வில்லங்கமா? இப்படி நினைச்சு நொந்து போற மாதிரி ரெண்டு நாள்ல கிடைக்கக்கூடிய வில்லங்க சான்றிதழ் வாங்குறதுக்கு 15 நாள் அலையுற மாதிரி ஆயிடுச்சு. அந்த நாட்கள்ல ஒரு வாரம் திருவாரூர்ல கனமழை.

எங்க வீட்டு உத்திரத்துல என் விரலால லேசா குத்துனா சட்டுன்னு உள்ள போகுது. போதி தர்மனுக்கு உள்ள சக்தி நம்மளுக்கு வந்துடுச்சோன்னு நல்லா பார்த்தா மிஸ்டர் கரையான் எல்லா மரத்துலயும் புகுந்து விளையாடி வெச்சிருந்தார். இதுல மழை பெய்ய ஆரம்பிச்ச உடனேயே 6 இடத்துல வீட்டுக்குள் மழை.

உத்திர மரத்துல மட்டுமில்லாம செங்கல்-சேறு கலவையால கட்டப்பட்ட வீடா இருந்ததால சுவற்றிலும் கரையான் ராஜ்ஜியம். சரி... இடிச்சுட்டு கட்டுறதுக்கு ஏற்பாடு செய்யலாம்னு கரையான் கிட்ட சிக்காத வீடு சம்மந்தப்பட்ட பேப்பர்களை எடுத்துட்டு ஒரு பத்திர எழுத்தர்கிட்ட போனேன். அவர் எழுதிக்கொடுத்த மனு ஒர்க்அவுட் ஆகாம ஒரு வாரம் அலைஞ்சு, அதுல தப்பா விவரம் தந்துட்டீங்க. வேற மனுதான் எழுதி புதுசா பணம் கட்டணும்னு சொல்லிட்டாங்க. நான் மறுபடியும் முதல்லேருந்தா அப்படின்னு மலைச்சுப் போய் ரெண்டாவது தடவை பணம் தெண்டம் அழுதது தனிக்கதை.

ரெண்டாவது மனு கொடுத்துட்டு தினமும் அலைஞ்சப்பதான் சார்பதிவு அலுவலகத்துக்குள்ள டேபிள், ரெக்கார்டு இருக்குற அலமாரி, பீரோ எல்லாத்தையும் அங்க இங்க நகர்த்தி பரமபதம் ஆடிகிட்டு இருந்ததைப் பார்த்தேன். காரணம் வேற ஒண்ணும் இல்லை. எங்க வீட்டுல ஆறு இடத்துலதான் மழைத்தண்ணி ஒழுகுதுன்னு எண்ணி சொல்லிட்டேன். இந்த சார்பதிவாளர் அலுவலகத்துல என்னால எத்தனை இடத்துல மழைத்தண்ணீர் லீக்கேஜ் அப்படின்னு கால்குலேட் பண்ண முடியலை.

இந்த லட்சணத்துல கரண்ட் கட் ஆனதும் லைட் எரிய மட்டும்தான் யுபிஎஸ் இருக்கு. பிரிண்டர் கரண்ட் இருக்கும்போது மட்டும்தான் வேலை செய்யும்னு சொல்லி அந்த தாமதத்தையும் காரணமா சொல்லி இன்னும் ரெண்டு நாள் அலைய விட்டாங்க.

அப்போ பத்திரப்பதிவுக்கு வந்திருந்த திருவாளர் பொதுஜனம் ஒருத்தர், இவங்க வாங்குற காசை வெச்சு 25 கிலோ வாட் ஜெனரேட்டர் பத்து வாங்கிப்போடலாம். அதுக்கு ஒரு வருசத்துக்கு டீசல் வாங்கி ஊத்தலாம்னு சொன்னார். அவர் சொன்னது பத்திரப்பதிவு கட்டணமா இல்ல அன்பளிப்பு (?!) பணமான்னு எனக்கு புரியலை.

திருவாரூர் மாவட்டம் உருவாகி 15 வருசம் ஆகுது. திருவாரூர் பகுதி சொத்துக்களோட ஆவணங்களை பாதுகாத்து பதிவு செய்ய வேண்டிய அலுவலகம் முழுவதும் அலுவலகத்திற்குள் மழை. வெளங்கிடும். வேற என்ன சொல்றது. அரசாங்க சொத்துதான் முறையான பராமரிப்பு இல்லாம நாசமா போற மாதிரி பத்திரப்பதிவு ஆவணங்களும் நாசமா போறதுக்கு வாய்ப்பு இருக்கு.

இந்த மாதிரி எவ்வளவோ அரசு அலுவலகங்கள், உயிர் காக்க வேண்டிய மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் இதைவிட கேவலமான நிலையில இருக்கு. நாம பாட்டுக்கு புலம்பிகிட்டே இருக்கவேண்டியதுதான். நீ சார்பதிவாளர் அலுவலகத்துல சீக்கிரம் வேலையை முடிச்சுகிட்டு கட்டிடம் இடிஞ்சு விழறதுக்குள்ள வந்துடுன்னு காமெடி பண்றார் நண்பர் ஒருத்தர்.

அவ்வளவு சீக்கிரம் அந்த கட்டிடம் இடிஞ்சு விழுந்துடும்னு எனக்கு தோணலைன்னேன். அந்த நண்பர் எப்படி சொல்றேன்னு கேட்டார். அரசாங்க அலுவலகத்துக்கு போனா நம்ம வேலை எப்போ முடியும்னு அவ்வளவு சீக்கிரம் தெரியுறது இல்லை. அதே மாதிரி கட்டிடமும் அவ்வளவு சீக்கிரம் இடிஞ்சுடாதுன்னு நினைக்கிறேன் என்றேன்.

இதையயல்லாம் பார்க்கும் போது பில்டிங் ஸ்டிராங்கு... பேஸ்மெண்ட் வீக் கதைதான் நினைவுக்கு வருது. இப்படி மருத்துவமனை, பள்ளிக்கூடம், அரசு அலுவலங்கள் போன்ற ஆயிரமாயிரம் கட்டிடங்கள் சிதிலமடைஞ்சுகிட்டு இருக்கும்போது அதை எல்லாம் சரிசெய்யாம வேற எது எதுலயோ கவனம் செலுத்தி அழகுபடுத்துறாங்க-----------------இதுல குறிப்பா யார் பேரையும் நான் சொல்லலீங்க.

4 கருத்துகள்:

  1. சில அரசு அலுவலகங்கள் வெகு நவீனமாக.., சில இந்த அளவுக்குப் பராமரிக்கப்படாமல்..:(!?

    பதிலளிநீக்கு
  2. Kavalayai vidunga sir, FDI kondu vanthaa, yellaa prachinayum "mudichidalaam"!!

    பதிலளிநீக்கு
  3. கவலையை விடுங்க சார், பன்னாட்டு முதலீடு கொண்டு வந்து எல்லா பிரச்சினையும் "முடிச்சிடலாம்"

    பதிலளிநீக்கு
  4. நண்பரே,

    தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
    http://www.tamilkalanchiyam.com

    - தமிழ் களஞ்சியம்

    பதிலளிநீக்கு