Search This Blog

வியாழன், 18 அக்டோபர், 2012

சென்னைக்கு கூடுதலாக ஒருமணி நேரம் மின்வெட்டு-வெளி நாட்டு கம்பெனி எல்லாம் பொட்டி தூக்கிட்டு ஓடிடுமா?

நேற்று ஒரு ஐந்து நிமிடம் தொல்லைக்காட்சி செய்தி பார்க்க நேர்ந்தது. அப்போது எனக்கு ஷாக் கொடுத்த விஷயம் தமிழகத்தில் மின்வெட்டு நிலை எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்திதான். (இன்று காலை நாளிதழ் செய்திகளில் 10 பேர் என்று அறிவித்திருக்கிறார்கள்)

ரமணா படத்தில் யூகிசேது 4வது ரீலிலேயே கண்டு பிடித்த விஷயத்தை உயரதிகாரிகள் (?!) கிளைமேக்ஸ் நெருங்கும்போதுதான் கண்டு பிடிப்பார்கள். இந்த காட்சி எனக்கு ஏன் இப்போது நினைவுக்கு வந்து தொலைத்தது என்று தெரியவில்லை.

சென்னைக்கு கூடுதல் நேரம் மின்சாரத்தை வெட்டினால் கழிவறை வரை ஏசி போட்டுக்கொண்டு குடிப்பதையும், இன்னும் பல ...................... வேலைகளையும் முக்கிய பணியாக வைத்துக்கொண்டு 24 மணி நேரமும் எல்லா கதவையும் அடைத்து வைத்து மின் விளக்கையும் எரிய விடும் மென்பொருள் நிறுவனங்கள், ஹோட்டல் போன்றவை நஷ்டப்பட்டுவிடும் என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

கோடிக்கணக்குல காசு வாங்கிட்டு இப்படி அவங்களுக்கு தடையில்லாம கரண்ட் கொடுக்குறதை இந்த அரசியல் வியாதிகள் மாத்திக்கப்போறது இல்லை. மக்கள் எல்லாரும் ஓட்டுக்கு பணம் வேணாம், இலவசம் வேணாம் அதுக்கு பதில் அடிப்படை உரிமையை கொடுன்னு கேட்டு வெளக்கமாத்தை தூக்குற வரை அரசியல் வியாதியை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. ஒரு பெட்டிக்கடை வைத்தாலே மாதம் 10 ஆயிரம் லாபம் எதிர்பார்க்கும்போது, ஜனங்களுக்கு ஓட்டுக்கு பணமும் கொடுத்து மத்த செலவும் செய்ய அவங்க என்ன நோட்டா அடிக்கிறாங்க?

எங்களுடைய கேள்வி எல்லாம் என்னன்னா பெரும்பாலான அரசு அலுவலங்கள் நல்ல காற்றோட்டமான பகுதியிலதான் அமைந்திருக்கு. (முக்கியமாக பெருந்திட்ட வளாகம்) அங்க எல்லாம் என்ன ...................த்துக்கு ஏ/சி வசதின்னு கேட்குறேன்?

மருந்து சேமிப்பு கிடங்கு, பால் பொருள் சேமிப்பு பகுதி தவிர மத்த எல்லா அரசு அலுவலகத்துக்கும் ஏ/சியை புடுங்கி வீசுனா பாதி பிரச்சனை சால்வுடு.

அடுத்த விஷயம் வீடுகள்ல ஏ/சி இருந்தா அவங்களுக்கான வணிக நிறுவங்களுக்கான டேரிப் நிர்ணயிச்சு அதன்படி கட்டணம் வசூலிக்கலாம். ஏன், யூனிட்டுக்கு 10 ரூபா வாங்கினாலும் தேவலை. அப்போதான் மாசம் 60 ஆயிரம் எழுபதாயிரம் வருமானம் வர்றவன் கூட 1 அங்குலம் கூட வெளிச்சம் வராம வீடு கட்டுற கலாச்சாரத்தை நிறுத்துவான்.

அது மட்டுமில்லாம எல்லா அரசு அலுவலங்கள் மாடியிலயும் சோலார் பேனல் வெச்சா, அந்த கட்டிட காம்பவுண்ட் பகுதியிலயும், எரியுற லைட்டுக்காவது கரண்ட் கிடக்காம போகுமா என்ன?

இப்படி ஒவ்வொரு யூனிட்டையும் எப்படி சேமிக்கலாம், நுகர்வை எப்படி குறைக்கலாம், சோலார், காற்றாலை மூலமா எந்த அளவுக்கு மின்சாரம் தயாரிக்கலாம்னு யோசிக்காம, 13ஆயிரத்து ஐ நூறு கோடியை கணக்குல கொண்டுவராம யுரேனியம், தோரியம் செலவை மட்டும் கணக்கு பண்ணிட்டு யூனிட் 1 பைசாவுக்கு கிடைக்குது, அரை பைசாவுக்கு கிடைக்குதுன்னு இருக்குற மக்களை .............................யா ஆக்குறானுங்க.

அது எப்படி சார், அணு மின்சாரத்துக்கு மட்டும் அணு உலை கட்டுமான செலவை கணக்குல காட்டாம கரண்ட் தயாரிக்கிற செலவை மட்டும் சொல்லி ஆதரவு தேடுறீங்க. ஆனா சூரிய மின்சாரத்துக்கு மட்டும் பேனல் போடுற செலவை சொல்லி ஒரு யூனிட் ஒரு லட்ச ரூபாய் ஆகுதுன்னு கூசாம பேசுறீங்க?

எனக்கு தெரிந்த வரை சோலார், காற்றாலை மின்சார உபகரணங்கள் அதிகரிச்சா குடிசை தொழில் மாதிரி நிறைய சிறு, குறு தொழிற்சாலைகள்லயும் உதிரி பாகம் வாங்க வேண்டியிருக்கும். அவங்ககிட்ட இந்த அரசியல் வியாதிங்க பெரிய அளவுல லஞ்சம், நன் கொடை(கொள்ளை அடிக்க) வாங்க முடியாது.

ஆனா ................... மின்சாரம்னா எத்தனை கோடி தேவையோ அதை ஒரே கம்பெனியில வாங்கி நூறு தலைமுறைக்கு சேர்த்துக்கலாம்.

இந்த பதிவுல நான் சொல்லியிருக்குறதுக்கு மாற்றுக்கருத்து ஏகப்பட்டது இருக்கும். நான் நடைமுறைக்கு ஒத்துவராததை சொல்லியிருக்கலாம். அதை பின்னூட்டமிட்டால் நானும் தெரிஞ்சுக்குவேன், மத்தவங்களும் புரிஞ்சுக்க ஏதுவா இருக்கும்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர், கோவில்ல பிரசாதம் வினியோகம் செய்யுவாரு. முக்கியமா மார்கழி மாதத்துல எல்லா நாளும் 2 கிலோ அரிசியிலதான் பொங்கல் போட்டு கொண்டு வருவாங்க. சில தினங்கள்ல 50 பேரும் வருவாங்க. ஒரு சில நாள்ல 200 பேரும் வருவாங்க. ஆனா அவர் ஒரு நாள் கூட அளவுக்கு அதிகமா மிச்சம் வெச்சது கிடையாது. சுத்தமா தீர்ந்துடுச்சுன்னு நிறைய பேரை திருப்பி அனுப்புனது கிடையாது.

கூட்டத்தை கண்களால் ஒரு நொடியில் அளந்து விட்டு, அதற்கேற்றார்போல் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் அளவை தீர்மானிப்பார்.

ஆனால் இப்போது மின்சார வினியோகத்தில் என்ன நடக்கிறது? மொத்தமாக வழித்து சென்னையில் உள்ள நாலு பேருக்கு கொடுத்துவிட்டு மற்ற மாவட்டங்களுக்கு அதே கரண்டியால் மண்டை வீங்க அடி பின்னி விடுகிறார்கள்.

அரசியல் வியாதிகள் மனம் வைத்தால் எல்லாம் சாத்தியம்தான். ஆனால் அவர்கள் மனம் வைப்பதற்கு அந்த காரியத்தால் அவர்களுக்கு லாபம் இல்லையே?

9 கருத்துகள்:

  1. நியாயமான தனிமனித கோபம் தான், ஆனால் அவர்கள் செவிகளில் விழுமா?

    பதிலளிநீக்கு
  2. திருவிளையாடல் படத்தில் நாகேஷ் சொல்வாரே , '' இப்படி தனியா புலமாபர் அளவுக்கு கொண்டு வந்து விட்டு விட்டானே '' என்று ....அது போல்தான். என்ன கரடியாக கத்தினாலும் யார் காதிலும் விழப் போறதும் இல்லை. யாரும் திருந்தப் போறதும் இல்லை.
    கார்த்திக்+அம்மா

    பதிலளிநீக்கு
  3. திருவிளையாடல் படத்தில் நாகேஷ் சொல்வாரே , '' இப்படி தனியா புலமாபர் அளவுக்கு கொண்டு வந்து விட்டு விட்டானே '' என்று ....அது போல்தான். என்ன கரடியாக கத்தினாலும் யார் காதிலும் விழப் போறதும் இல்லை. யாரும் திருந்தப் போறதும் இல்லை.
    கார்த்திக்+அம்மா

    பதிலளிநீக்கு
  4. தாங்கள் சொன்ன அத்தனை கருத்துக்களையும் நான் வழிமொழிகிறேன் நண்பரே!

    இதை நடைமுறைக்கு கொண்டுவந்தால் விடிவுகாலத்தை எதிர்பார்க்கலாம்!

    நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  5. தாங்கள் சொன்ன அத்தனை கருத்துக்களையும் நான் வழிமொழிகிறேன் நண்பரே!

    இதை நடைமுறைக்கு கொண்டுவந்தால் விடிவுகாலத்தை எதிர்பார்க்கலாம்!

    நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. தெளிவா எழுதி இருக்கீங்க. உண்மையும் எதார்த்தமும் இது தான்.

    பதிலளிநீக்கு
  7. நம் ஊரில் எப்போதும் காய்ந்து கொண்டிருக்கும் வெய்யிலில் இருந்து மின்சாரம் எடுக்கும் நல்ல திட்டம் ஏன் செயல் படுத்த மாட்டேன் என்று புரியவே இல்லை. இந்த அளவு மின்சார பிரச்சனை இருந்தால் எந்த நாடும் செய்யக்கூடியது இது!
    இதற்கு நடுவில், இன்னும் பத்து ஆண்டுகளில் வல்லரசு, ஐந்து ஆண்டுகளில் நாடெங்கும் தடையில்லா மின்சாரம் என்று ஜோக் அடிக்கும் பிரதமர்! உருப்படுமா நம் ஊர்?

    பதிலளிநீக்கு
  8. நம் ஊரில் எப்போதும் காய்ந்து கொண்டிருக்கும் வெய்யிலில் இருந்து மின்சாரம் எடுக்கும் நல்ல திட்டம் ஏன் செயல் படுத்த மாட்டேன் என்று புரியவே இல்லை. இந்த அளவு மின்சார பிரச்சனை இருந்தால் எந்த நாடும் செய்யக்கூடியது இது!
    இதற்கு நடுவில், இன்னும் பத்து ஆண்டுகளில் வல்லரசு, ஐந்து ஆண்டுகளில் நாடெங்கும் தடையில்லா மின்சாரம் என்று ஜோக் அடிக்கும் பிரதமர்! உருப்படுமா நம் ஊர்?

    பதிலளிநீக்கு
  9. அருமையான கருத்துக்கள், அற்புதமான யோசனைகள், ஆனால் யார் கேட்பார். அரசியல்வாதிகள் சாமானியன் சொல்வதை செவிமடுத்து கேட்கமாட்டார்கள். இவ்வளவு ஏன் மின்சாரி வாரிய அதிகாரிகள் சொல்வதைக்கூட செவிமடுக்க மாட்டார்கள். நான் செல்வதை செய் என்று முடித்துவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு