Search This Blog

சனி, 18 ஆகஸ்ட், 2012

ரா.கி.ரங்கராஜனுக்கு அஞ்சலி

ரா.கி.ரங்கராஜனுக்கு அஞ்சலி என்று இட்லிவடையில் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் இடப்பட்ட பதிவைப்பார்த்துதான் எனக்கு விஷயம் தெரியும்.

அவர் எப்போது இறந்தார் என்பது போன்ற தகவல்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை. இப்போது இவ்வளவு அவசரமாக ஒரு அஞ்சலி பதிவை எழுதக்காரணம், என்னைச்சுற்றி உள்ள நட்பு வட்டங்கள் ''கதா'' என்று என்னை அழைக்கும் அளவுக்கு சில சிறுகதைகள், ஒரு குறு நாவல், ஒரு கவிதை, கோவில்கள் பற்றிய தகவல் கட்டுரை என்று நான் எழுத அவர்தான் குரு.

ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது என்ற புத்தகத்தைப் படிதத பின்புதான் எனக்கு கதை எழுதுவதற்கு டெக்னிக்கலாக அதாவது கதையை எப்படி தொடங்கி எப்படி முடிக்க வேண்டும். எவை எல்லாம் இருக்க வேண்டும். எது கூடாது என்று எளிமையாக சொல்லித்தரும் கையேடு என்று கூறலாம்.

நான் 1995 வாக்கிலேயே 9ஆம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே கதை எழுத முயற்சித்தாலும் 2001ல் இவரது "எப்படி கதை எழுதுவது?" என்ற புத்தகம் படித்த பின்புதான் பத்திரிகைகளில் பிரசுரமாகும் அளவுக்கு நான் எழுத கற்றுக்கொண்டேன்.

கல்லூரி ஆண்டு மலரில் எழுதியதை தவிர்த்து, வெளி பத்திரிகைகளில் ஓரிரு கதைகள் பிரசுரமான சில மாதங்களுக்குள்ளேயே தினமலர் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு, அமுதசுரபியில் முத்திரைக்கதை, தமிழக அரசின் குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையமும், ராணி வார இதழும் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு ரூ.2500, இப்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினமலரில் 5 ஆயிரம் ரூபாய் பரிசு, 2003ல் திருச்சி மாலைமுரசு தீபாவளி மலரில் கவிதைக்கு வெள்ளி குங்குமச்சிமிழ் பரிசு, என்று வரிசை கட்டி நான் எழுதிய கதைகள், படைப்புகள் உருவாவதற்கு முக்கியமான மானசீககுரு ரா.கி.என்று சொல்லலாம்.

அவருக்கு என் அஞ்சலி.

5 கருத்துகள்:

  1. எனக்கும் இப்போதுதான் தகவல் தெரிந்தது..
    இவரும் ஜரா சுந்தரேசனும் எழுத்து உழைப்பாளிகள் என்று சுஜாதா குறிப்பிடுவார்..

    அவரை இவர்கள் எழுத்து ராட்சசன் என்பார்கள் ! :))

    பதிலளிநீக்கு
  2. ரா.கி.ரங்கராஜன் அவர்களுக்கு அஞ்சலி...

    பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. எனது அஞ்சலியும். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பாராட்டுகள்.

    இன்னும் பல பரிசுகளும் சிறப்புகளும் பெற வாழ்த்துகள் சரவணன்

    பதிலளிநீக்கு
  5. ரா.கி.ரவின் மறைவு மிகவும் வருந்தத்தக்கது, சிட்னி ஷெல்டனின் தமிழாக்கங்கள் அப்படியே தமிழில் எழுதப்பட்டது போல கொடுத்தவர், அவருக்கு எனது அஞ்சலி!

    பதிலளிநீக்கு