Search This Blog

புதன், 25 ஏப்ரல், 2012

பயணிகள் கவனிக்கவும்

இரவு உணவின் போது சிறிது நேரம் கேபிள் தொல்லைக்காட்சி பார்க்கும் சூழ்நிலையை என்னால் தவிர்க்க இயலாது. அந்த சில நிமிடங்களில் ஒரு நிறுவனத்தின் விளம்பரம் சற்று கவனிக்க வைத்தது. CEAT டயர் நிறுவனத்தின் விளம்பரம்தான்.



1. நடக்க பழகும் குழந்தையை கவனிக்காமல் இரண்டு பெண்கள் சாலையின் ஓரத்தில் நின்று வம்பு பேசிக்கொண்டிருக்கும்போது அந்தக்குழந்தை சாலையின் நடுவே வந்து டிராபிக் போலீஸ் வேலை பார்க்க முயற்சிக்கும். அப்போது டூவீலர் ஓட்டி வரும் ஒருவர் திடீர் பிரேக் போட்டதும் சட்டென்று வண்டி நின்றுவிடும். அப்போது அந்த குழந்தையின் தாய், டூவீலர் ஓட்டி வந்தவரைப்பார்த்து, இடியட், குழந்தை இருக்குறது தெரியலை...என்று இஷ்டத்துக்கு திட்ட ஆரம்பிப்பார்.

2. கணவனும் மனைவியும் திரைப்படம் பார்த்துவிட்டு டூவீலரில் பேசிக்கொண்டு போவார்கள். இரவு நேரம். டிராபிக் இருக்காது. சிக்னலில் பச்சை விளக்கு எரியும். இவர்கள் அந்த சந்திப்பை கடந்து செல்ல முயற்சிக்கும் போது திடீரென்று குறுக்கே ஒரு கார் பாம்பு மாதிரி இஷ்டத்துக்கு நெளிந்து போகும்.(அப்படிக்கூட சொல்ல முடியாது. இன்னும் கேவலமாக) அப்போது சட்டென்று பிரேக் பிடித்து நிறுத்திய கணவரின் தோளில் கைவைத்து அவரது மனைவி பெருமூச்சு விடுவார் பாருங்கள்...நம் நிஜ வாழ்விலும் இப்படித்தான். ஒழுங்காக ரூல்சை மதிப்பவர்கள் இப்படி செத்துப்பிழைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் விதி மீறும் மதிகெட்ட மாந்தர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள்.


இன்னும் இரண்டு மூன்று பேட்டர்னில் இந்த விளம்பரம் ஒளிபரப்பானது. அவர்கள் நோக்கம், எங்கள் டயர் எப்படிப்பட்ட சூழலில் பிரேக் பிடித்தாலும் சாலையில் கிரிப்பை விடாது என்று மக்களுக்கு சொல்வது. அவர்கள் சொல்லியிருக்கும் இன்னொரு விஷயம், சாலையில் இப்படி நிறைய இடியட்ஸ் இருக்காங்க என்று நான் சிவப்பு எழுத்துக்களாக காட்டியிருக்கும் நபர்களைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அது உண்மைதான். நான் கல்லூரியில படிக்கும்போது ஒரு பேராசிரியர், உனக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியலன்னா என்ன சொல்லுவ? என்றார். எனக்கு தெரியாதுன்னு உண்மையை ஒத்துக்குவேன் என்றேன். அதற்கு அவர், நீ வேஸ்ட். உனக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியலன்னா எதிர் கேள்வி கேட்டு அவங்களை குழப்பி விட்டுடணும். இல்லை... வாயை மூட வெச்சுடணும். அப்படின்னு சொன்னார்.

நான் என்ன அரசியல் வியாதியாவா ஆகப்போறேன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டேன். செல்போன் பேசிகிட்டே குழந்தையை கவனிக்காம இருக்குறது மாதிரியான ஆளுங்க, அவங்க தப்பை நீங்க சுட்டிக்காட்டுறதுக்கு முன்னாலேயே  உங்களைத் திட்டி சேப்டியாயிடுவாங்க.

எச்சரிக்கை தேவை நண்பர்களே!

5 கருத்துகள்:

  1. /அவங்க தப்பை நீங்க சுட்டிக்காட்டுறதுக்கு முன்னாலேயே உங்களைத் திட்டி சேப்டியாயிடுவாங்க.
    /

    உண்மைதான். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  2. முதல்லே குரல் கொடுத்தா தப்பை அடுத்தவன்மேலே போட்டுடலாம் என்ற தற்காப்பு உணர்வுதான்.

    சென்னையில் 'என்னை நாய் கடிச்சுருச்சு'ப்பா!!!!

    பதிலளிநீக்கு
  3. http://thulasidhalam.blogspot.com/2009/12/blog-post_03.html

    கடிச்ச நாய் சுட்டி:-))))

    பதிலளிநீக்கு
  4. //நடக்க பழகும் குழந்தையை கவனிக்காமல் தொல்லைபேசியில் (செல்போன்) பேசிக்கொண்டே இருப்பாள் ஒரு பெண்.//
    நீங்கள் இரண்டு விளம்பரங்களை சேர்த்து குழப்பிக் கொண்டு விட்டீர்கள். ஒரு விளம்பரத்தில் இரண்டு பெண்கள் வம்பு பேசிக் கொண்டு நிற்க, ஒருத்தியின் குழந்தை ரோடுக்கு செல்லும்.

    இன்னொரு விளம்பரத்தில் ஒரு நாதாரி செல்போனில் பேசிக் கொண்டே குழந்தையின் கைவண்டியை தல்ளிக் கொண்டே ரோடை கிராஸ் செய்தவாறு செல்வான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  5. dondu(#11168674346665545885) said...

    //நடக்க பழகும் குழந்தையை கவனிக்காமல் தொல்லைபேசியில் (செல்போன்) பேசிக்கொண்டே இருப்பாள் ஒரு பெண்.//
    நீங்கள் இரண்டு விளம்பரங்களை சேர்த்து குழப்பிக் கொண்டு விட்டீர்கள். ஒரு விளம்பரத்தில் இரண்டு பெண்கள் வம்பு பேசிக் கொண்டு நிற்க, ஒருத்தியின் குழந்தை ரோடுக்கு செல்லும்.

    இன்னொரு விளம்பரத்தில் ஒரு நாதாரி செல்போனில் பேசிக் கொண்டே குழந்தையின் கைவண்டியை தல்ளிக் கொண்டே ரோடை கிராஸ் செய்தவாறு செல்வான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    *****************************
    நீங்கள் சொன்னது சரிதான் சார். நான்கு, ஐந்து வகை ஸ்கிரிப்டுடன் அந்த விளம்பரம் வருவதால் எனக்கு குழப்பமாகிவிட்டது. மேலும் நிறைய இடியட்ஸ் இப்படித்தான் செய்கிறார்கள் என்ற விஷயம் மட்டும் மனதில் பதிந்து விட்டது. அதனால்தான் இந்த குழப்பம். அடுத்து மின்வெட்டு காரணமாக இந்த விளம்பரங்களை ஓரிரு முறை மட்டுமே பார்த்திருப்பேன்.

    சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்தி விட்டேன்.

    பதிலளிநீக்கு