Search This Blog

திங்கள், 9 ஏப்ரல், 2012

என்ன கொடுமை சரவணன் ?-7


எனக்கு மட்டும் ஏன்இப்படி? - இந்த கேள்வி உங்களில்பலருக்கும் வெவ்வேறுசூழ்நிலைகளில் உங்கள்மனதில் எழுந்திருக்கும்.

ஆயிரம் மர்பி விதிகள்இருக்கின்றன. இதில்600வது தேறும். அந்த விதிகளைபடித்தால் இதைஎல்லாம் டேக்இட் ஈஸிஎன்று எடுத்துக்கொண்டு நம் பி.பி. ஏறாமல் ஆரோக்கியம்கெடாமல் இருக்கபழகிக்கொள்ளலாம்.

இதை படிச்சுட்டு இதான்எனக்கு தெரியுமே. புதுசா சொல்லவந்துட்டியாக்கும் அப்படின்னுசண்டை போடப்பிடாது. இந்த விதிகள்எல்லாம் நெட்டுலஇருந்து ஒருபுண்ணியவான் எனக்குஅனுப்பினது. உண்மையைசொல்லி நான்முதல்லேயே சரண்டர்ஆயிட்டேன்.
 
மர்பி விதிகள்

36. நமது நண்பர்கள் ஏதேனும் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்த உடன் நமது நண்பர்கள் என்னும் பதவியில் இருந்து இறங்கி விடுவார்கள்.
37. காரின் விலையும், ஓட்டுநரின் நிதானமின்மையும் நேர்விகிதத்திலேயே இருக்கும்.
38. நம்மை விட குறைவான வேகத்தில் ஓட்டும் அனைவரையும் முட்டாள்கள் என நினைப்போம்.
39. நம்மை விட அதிகமான வேகத்தில் ஓட்டும் அனைவரும் நிதானம் தெரியாதவர்கள் என நினைப்போம்.
40. உங்களுக்கு பிடித்த திரைப்பாடல் பேருந்து வானொலியில் பாட ஆரம்பிக்கும்போது நீங்கள் போய்ச் சேர வேண்டிய இடம் வந்து விடும்.
-விதிகள் தொடரும்...

1 கருத்து:

  1. நாம தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பேருந்து, இன்னொரு நாள் நாம் வேறொரு பேருந்திற்கு நிற்கும் போது அங்குவரும்

    பதிலளிநீக்கு