Search This Blog

வெள்ளி, 23 மார்ச், 2012

திருவாரூர் பாபு இயக்கிய கந்தா படத்துக்கு திருவாரூர் சரவணனின் வாழ்த்துக்கள்!

நூற்றுக்கணக்கான சிறுகதைகள், பல குறு நாவல்கள் எழுதிய எழுத்தாளர் திருவாரூர் பாபு. இவரது தந்தை வைத்திருந்த தட்டச்சுப் பயிலகத்தில் அப்போதே கதைகளை தட்டச்சு செய்து தான் அனுப்புவாராம். இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைகளுக்கு தட்டச்சு செய்து அனுப்புவது எல்லாம் எல்லோராலும் முடியாத காரியம்.


தட்டச்சு செய்வதில் ஒரு சௌகர்யம். கையால் எழுதினால் 15 பக்கம் வரும் சிறுகதை தட்டச்சில் 3 பக்கத்தை தாண்டினால் அதிகம். அப்போது படிப்பவருக்கும் மலைப்பு தெரியாது. அந்த மூன்று பக்க சிறுகதையையும் அலுப்பு தட்டாமல் சொல்லும் உத்தி தெரிய வேண்டும்.

இதை எல்லாம் சரியாகச் செய்ததால்தான் திருவாரூர் பாபுவால் நூற்றுக்கணக்கில் சிறுகதைகளை எழுத முடிந்தது. தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்த இவர் பின்பு இயக்குனர் கே.வி.சரவணன் - அதாங்க அஜீத்தின் அமர்க்களம், அட்டகாசம் ஆகிய படங்களை இயக்கிய சரணிடம் ஜே.ஜே.,வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் திருவாரூர் பாபு.

இன்று அவர் இயக்கிய "கந்தா" திரைப்படம் ரிலீசாகிறது. ஒரே ஊர்க்காரர் என்ற பாசத்தினால் மட்டும் இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கவில்லை. அவரது சிறுகதைகளிலேயே நிறைய சமூக அக்கறை காணப்படும். படத்தின் கருவும் ஒரு நல்ல ஆசிரியரும், மாணவனும் சம்மந்தப்பட்ட கதை என்று கூறி இருக்கிறார். அந்த நம்பிக்கையுடன் படத்துக்காக காத்திருக்கிறேன்.

என்ன கொடுமை சரவணன் ?-5

மர்பி விதிகள்

21.மேலாளரைப் பொறுத்தவரை சாத்தியமில்லாதது என்று  எதுவுமே கிடையாது அவர் செய்து பார்க்கும் வரை.
22. நீங்கள் உங்கள் வாகனத்தை கழுவி முடித்ததும் மழை வந்து இன்னும் நன்றாக கழுவி விடும்.
23. மக்களை ஒரு விஷயத்தை நம்ப வைக்க வேண்டும் என்றால் அதை கிசுகிசுப்பாக சொன்னால் போதும்.
24.பொதுமக்கள் யாரென்றால் செய்தித்தாள்களில் பெயர் இடம்பெறாதவர்களே ஆவார்கள்.
25.நீங்கள் ஒரு வேலையை சரியாக செய்து கொண்டிருந்தால் அது யார் கண்ணிலும் படாது.
விதிகள் தொடரும்...

2 கருத்துகள்: