Search This Blog

வியாழன், 8 மார்ச், 2012

என்ன கொடுமை சரவணன் ?-3


எனக்கு மட்டும் ஏன் இப்படி? - இந்த கேள்வி உங்களில் பலருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் உங்கள் மனதில் எழுந்திருக்கும்.

ஆயிரம் மர்பி விதிகள் இருக்கின்றன. இதில் 600வது தேறும். அந்த விதிகளை படித்தால் இதை எல்லாம் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொண்டு நம் பி.பி. ஏறாமல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க பழகிக்கொள்ளலாம்.

இதை படிச்சுட்டு இதான் எனக்கு தெரியுமே. புதுசா சொல்ல வந்துட்டியாக்கும் அப்படின்னு சண்டை போடப்பிடாது. இந்த விதிகள் எல்லாம் நெட்டுல இருந்து ஒரு புண்ணியவான் எனக்கு அனுப்பினது. உண்மையை சொல்லி நான் முதல்லேயே சரண்டர் ஆயிட்டேன்.
 
மர்பி விதிகள்
11. நீங்கள் எவ்வளவு அலைந்து கஷ்டப்பட்டு ஒரு பொருளை வாங்கினாலும் நீங்கள் வாங்கியவுடன் மலிவாக இன்னொரு இடத்தில் கிடைத்தே தீரும். அது உங்கள் மனைவியின் கண்களில் தான் முதலில் படும்.
12. ஒரு பொருள் சிறந்ததாக இருந்தால் அதை தயாரிப்பதையே நிறுத்தியிருப்பார்கள்.
13. ஒரு படகோட்டியை நதியைக் கடக்கும் வரை திட்டக்கூடாது.
14. இயந்திரங்கள் என்றால் வேலை செய்ய வேண்டும். மனிதர்கள் என்றால் சிந்தனை செய்ய வேண்டும். பெரும்பாலும் இரண்டுமே நடப்பதில்லை.
15. அடுத்தவரின் செலவு எப்போதும் ஊதாரித்தனமாகவும் தேவையில்லாததாகவும் இருக்கும்.

-விதிகள் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக