Search This Blog

புதன், 7 மார்ச், 2012

என்ன கொடுமை சரவணன் ?-2

எனக்கு மட்டும் ஏன் இப்படி? - இந்த கேள்வி உங்களில் பலருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் உங்கள் மனதில் எழுந்திருக்கும்.

ஆயிரம் மர்பி விதிகள் இருக்கின்றன. இதில் 600வது தேறும். அந்த விதிகளை படித்தால் இதை எல்லாம் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொண்டு நம் பி.பி. ஏறாமல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க பழகிக்கொள்ளலாம்.

இதை படிச்சுட்டு இதான் எனக்கு தெரியுமே. புதுசா சொல்ல வந்துட்டியாக்கும் அப்படின்னு சண்டை போடப்பிடாது. இந்த விதிகள் எல்லாம் நெட்டுல இருந்து ஒரு புண்ணியவான் எனக்கு அனுப்பினது. உண்மையை சொல்லி நான் முதல்லேயே சரண்டர் ஆயிட்டேன்.


மர்பி விதிகள்
6. எந்த ஒரு வி­ஷயம் நிறைய பேருக்கு அசெளகரியத்தை தருகிறதோ அது நடந்தே தீரும்.

7. உள்ளூர்க்காரர்கள் தான் தாமதமாக வருவார்கள்.

8. ரகசியம் என்பது வதந்தியின் ஆரம்பம்.

9. ஒரு விஷ­யம் பற்றிய எந்த இரு மனிதர்களின் புரிதலும் சரிசமாக இருப்பதே இல்லை.

10. எந்த ஒரு அரசியல்வாதி ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு அதிகமாக செலவு செய்கிறாரோ அவரே தேர்ந்தெடுக்கப்படுவார். பிரச்சனை வருவதை முன்கூட்டியே அறிந்து அதை வரும் முன் களைய முற்படும் அரசியல்வாதியோ சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

-விதிகள் தொடரும்...

1 கருத்து:

  1. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    பதிலளிநீக்கு