Search This Blog

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

ஷாக் ஆயிட்டேன்

'இந்த ஆண்டில் முதல்முறையாக கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி' அப்படின்னு நாளைக்கு பேப்பர்ல செய்தி வெளிவரும்னு நினைக்குறேன். பொதுவாவே இந்தியாவோட பைனல் டச் என்னன்னு தெரியுமா. முக்கா கிணறு தாண்டிட்டு முக்கி முக்கி முயற்சி செய்துட்டு பட்டுன்னு மண்ணைக்கவ்வுறதுதான்.  இன்னைக்கும் கடைசி ஒரு ரன் எடுக்குறதுக்குள்ள பசங்களுக்கு நாக்கு தள்ளிடுச்சுன்னு நினைக்குறேன். அவிங்க முடிச்ச மாதிரி 19.4 ஓவர்ல மேட்ச் வின் பண்ணினத பார்த்தா உள்ளுக்குள்ள சேம் கலர் விளையாடியிருப்பாங்களோன்னு தோணுது.

இந்த பதிவுக்கு அரசியல் அப்படின்னு லேபிள் ஏன் கொடுத்தேன் தெரியுமா? கிரிக்கெட் பணம் கொழிக்கவும் மற்ற விளையாட்டுக்கள் நடக்கவே சிரமப்படுறதுக்கும் வீணாய்ப்போன அரசியல்தான் காரணம்னு நான் சொல்ல தேவை இல்லை. எல்லாம் ஊரறிஞ்ச ரகசியம். இந்தியாவுல இருக்குற மக்கள் தொகைக்கு நியாயமான பயிற்சியும் தேர்வு முறையும் இருந்தா ஒவ்வொரு டூருக்கும் ஒவ்வொரு டீமை இறக்கி அசத்தலா ஜெயிக்கலாம்.   இப்படி கிரிக்கெட்டை திட்டுற நீ டி20 மேட்ச்ல வின் பண்ணினதுக்கு ஏன் பதிவு எழுதுறன்னு தானே கேட்குறீங்க.

நாளைக்கு திருவாரூர்ல காலை 8 மணியிலேர்ந்து மாலை 6 மணி வரை மின் தடை. (இப்பவே நாளைக்கு 40 தடவை கட் ஆகிட்டேதான இருக்குன்னு நீங்க சொல்றது புரியுது.) அதனால ஒரு நாளிதழுக்கு சில செய்திகளை மின்னஞ்சல் மூலமா அனுப்புறப்ப ஸ்கோர் பார்த்ததும் ஒரு பதிவுக்கு மேட்டர் கிடைச்சுடுச்சுன்னு நாலு வரி தட்டி போட்டுட்டேன். அவ்வளவுதான் விஷயம்.

1 கருத்து:

  1. /நியாயமான பயிற்சியும் தேர்வு முறையும் இருந்தா ஒவ்வொரு டூருக்கும் ஒவ்வொரு டீமை இறக்கி அசத்தலா ஜெயிக்கலாம்./

    உண்மைதான்.

    பதிலளிநீக்கு