Search This Blog

புதன், 9 மார்ச், 2011

மறைவில் ஒரு உதயம்

சிறுகதையோட டைட்டிலைப் பார்த்ததுமே என்ன சொல்ல வந்துருக்கேன்னு உங்களுக்கெல்லாம் புரிஞ்சிருக்கும். தெரியாதவங்க கதையைப் படிச்சு முடிக்கும்போது தெரிஞ்சுக்குவீங்க.

கிராமத்துல 'ஆடு பகை, குட்டி உறவா' அப்படின்னு ஒரு பழமொழி உண்டு. உறவுக்காரங்க யார் கூடவாவது சண்டை போட்டுட்டு ஈகோ காரணமா பேசிக்காம இருப்பாங்க. ஆனா மனசுக்குள்ள பாசம் இருக்கும். அதனால பகையா நினைச்சுகிட்டு இருக்குறவங்களோட புள்ளைங்ககிட்ட நல்லாவே பழகுவாங்க. இதுதான் அந்த பழமொழிக்கான விளக்கம். வெளி ஆள் இது பத்தி கேட்டா, அடப்போப்பா...எதோ கோபத்துல அவங்க அப்பனும் நானும் பேசாம இருக்கோம். இந்த புள்ளைக என்ன பண்ணும் பாவம்... அப்படின்னு ரொம்ப இயல்பா கேட்பாங்க.

அதெல்லாம் அந்தக்காலம். இப்போதைய காலகட்டத்துல குட்டிகளே ஆடுகளை பகையா நினைக்குது. ஆனா ஆடுகளோட சொத்தும், பணமும் வேணும். என்ன உலகம் இது.

மறைவில் ஒரு உதயம் சிறுகதை பக்கம் 1
மறைவில் ஒரு உதயம் சிறுகதை பக்கம் 2

கதையைப் படிச்சு முடிச்சவங்க இது என்னடா இவன், ஹிதேந்திரன் கதையை அடிப்படையா வெச்சு எழுதியிருக்கானேன்னு நினைக்கலாம். ஆனால் நான் 'மறைவில் ஒரு உதயம்'-இந்த டைட்டில்ல தேவி வார இதழ்ல ஒரு சிறுகதையை எழுதினேன்.அந்த கதை வந்து சில மாதங்களுக்குப் பிறகுதான் ஹிதேந்திரன் சம்பவம் நடந்துச்சு.

திரும்பவும் அந்த கதையை தூசி தட்டி வேற மாதிரி எழுதினேன். அதுதான் இப்ப உங்கள் பார்வைக்கு இருக்கு. தேவி வார இதழ்ல வெளிவந்த கதையை விரைவில் பதிவேற்றுவேன்.

உங்களுக்கெல்லாம் இன்னொரு சந்தேகம் வந்துருக்கும். இந்த கதை இருக்குற ரெண்டு பக்கமுமே எதோ ஒரு புத்தகத்துல வந்தது மாதிரியே வடிவமைக்கப்பட்டுருக்கேன்னு யோசிப்பீங்க. இது சும்மா நானா முயற்சி செய்து பார்த்ததுங்க. ஒரு பிரபல நாளிதழ்ல தினமும் பக்க வடிவமைச்ச பிறகு இந்த அளவுக்கு கூட பிளாக்-ல முயற்சி செய்து பார்க்கலைன்னா அது எவ்வளவு பெரிய கொடுமை சார். அதான் இந்த விபரீத முயற்சி.

இந்தப் பக்கத்தை இன்னும் குவாலிட்டியா பதிவு செஞ்சிருக்கலாம். ஆனா பலருடைய கம்ப்யூட்டர்ல திறக்க ரொம்ப நேரம் ஆக வாய்ப்புண்டு. அந்த அளவுக்கு பொறுமை இருக்காதுன்னுதான் சுமாரான தரத்துல jpeg பார்மெட்ல போட்டிருக்கேன். இது பிடிஃஎப் பைலா இருக்கும்போது இன்னும் தெளிவா இருக்கும். அந்த பார்மட்ல படிக்கணும்னு தோணுச்சுன்னா பின்னூட்டத்துல தெரிவியுங்க. மெயில்ல அனுப்பி வெக்கிறேன். (நல்லவேளை...நாங்க எஸ்கேப் ஆயிட்டோம்னு யாருப்பா குரல் கொடுக்குறது...)

1 கருத்து:

  1. உங்களுக்கெல்லாம் இன்னொரு சந்தேகம் வந்துருக்கும். இந்த கதை இருக்குற ரெண்டு பக்கமுமே எதோ ஒரு புத்தகத்துல வந்தது மாதிரியே வடிவமைக்கப்பட்டுருக்கேன்னு யோசிப்பீங்க. இது சும்மா நானா முயற்சி செய்து பார்த்ததுங்க. ஒரு பிரபல நாளிதழ்ல தினமும் பக்க வடிவமைச்ச பிறகு இந்த அளவுக்கு கூட பிளாக்-ல முயற்சி செய்து பார்க்கலைன்னா அது எவ்வளவு பெரிய கொடுமை சார். அதான் இந்த விபரீத முயற்சி.


    ......விபரீதம் இல்லை.... நல்ல முயற்சி. சூப்பரா வந்து இருக்குது... இன்னும் தூள் கிளப்புங்க!

    பதிலளிநீக்கு