Search This Blog

புதன், 16 பிப்ரவரி, 2011

வண்டி மூவ் ஆக மாட்டெங்குதே...






2010 அக்டோபர்ல இருந்து வில் போன்னு சொல்ற கிராமத்து வயர்லெஸ் போன் மூலமா இண்டர்நெட் கனெக்ஷன் வாங்கியிருந்தேன். ஒரு டேப் திறந்து பிளாக்ல என்ட்ரி  போடுறப்ப இன்னொரு டேப்ல வேறொரு இணைய தளத்தை ஓப்பன் பண்ணி ரெப்ரஷ் கொடுத்துகிட்டே இருந்தாதான் இணைய இணைப்பு துண்டிக்கப்படாம இருக்கும். இந்த இம்சையில இருந்து எப்படி வெளிய வர்றதுன்னு புரியல. லேண்ட்லைன் இணைப்பு வாங்கி அன்லிமிட்டெட் பிளான் இணைய இணைப்பு கொடுக்க ஆசைதான். ஆனா அந்த போனை பிக்ஸ் பண்ண வர்ற லைன்மேனுக்கு முதல் தடவை காசு கொடுக்குறது கூட பரவாயில்லை. ஆனா அடிக்கடி லைன் ரிப்பேராகும். அவங்களுக்கு அப்பப்போ காசு கொடுக்குறதுக்கு ஊழல் வாதிகளோட பினாமியா இருந்தாதான் முடியும்னு தயங்கினேன்.

இந்த நேரத்துலதான் 3G டேட்டா கார்டு விற்பனைக்கு வந்தது. வாங்கி ஒரு மாசம் சரி ஸ்பீடு. அப்புறம் ஒரு மாசம் அட்டகாசம் பட காமெடிதான்.
ஆட்டோ ஸ்டார்ட் ஆகுது. கியர் விழுகுது. ஆனா வண்டி மூவ் ஆக மாட்டெங்குதுன்னு கருணாஸ் புலம்புவாரே. அப்படி ஆயிடுச்சு என் நிலமை.

இணைய இணைப்பு கனெக்ட் ஆகும். GMail மட்டும் வெல்கம் ஸ்கிரீன் மட்டும் ஓப்பன் ஆகும். பாஸ்வேர்ட் கொடுத்த பிறகு பிராஸசசிங் ஆகிகிட்டே இருக்கும்.

பல பேர்கிட்ட கேட்டும் சரியான விடை கிடைக்கலை.

அப்புறம் திருச்சி பிஎஸ் என் எல் அலுவலக ஊழியர் ஒருத்தர் நெட்ஒர்க் செலக்ஷன்ல ஒரு மாற்றம் செய்ய சொன்னார். ஆட்டோமேடிக் மோடுல இல்லாம மேனுவலா வெச்சு UMTS/HSDPA வை டிக் செய்யணும். GPRS மோடுல இருந்தா மொபைல்லதான் ஒர்க் ஆகும். கம்ப்யூட்டர்ல இணைய இணைப்பு ஓப்பன் ஆகாதுன்னார்.

ஆக மொத்தத்துல அந்த மாச டேட்டா எனக்கு டாட்டா காட்டிட்டு பயன்படாமலேயே போயிடுச்சு. கிட்டத்தட்ட அறுநூறு ரூபா வேஸ்ட்.

போனா போகட்டும்னு இந்த மாசம் அன்லிமிட்டெட் பிளான்ல பணம் கட்டினேன். ஒரு MBக்கு ஒரு ரூபா வழிச்சுகிட்டு போனப்ப இருந்த வேகம் இப்போ சுத்தமா அவுட். ரெண்டு மூணு இணைய தளத்தை திறந்து வேலை பார்க்குற நேரத்துக்குள்ள ஹேங்க் ஆயிடுது. அப்புறம் பிரௌசரையும் மோடத்தையும் க்ளோஸ் பண்ணிட்டு மறுபடியும் முதல்லேர்ந்து தொடங்க வேண்டியிருக்கு.

அன்லிமிட்டெட் பிளான் அப்படின்னா வேகம் குறையுறது இயல்புதான். ஆனா அஞ்சு நிமிஷத்துக்கு ஒருதடவை மோடத்தை நிறுத்தி நிறுத்தி ரீஓப்பன் பண்ற மாதிரி இருக்குறது எந்த ஊர் நியாயம்னு தெரியலை.

ஒரு ஜி.பி ரெண்டு ஜி.பின்னு போடுற பிளான்ல எவ்வளவு டேட்டா மீதி இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னா டேட்டா கார்டுல இருந்து சிம் கார்டை கழட்டி ஒரு போன்ல போட்டு வாய்ஸ் மெசேஜ் மூலமா கண்டு பிடிக்க வேண்டியிருக்கு. இதுல என்ன சிக்கல்னா அந்த மாசத்துக்குள்ள இலவச டேட்டா காலியாயிட்டா மெயின் பேலன்ஸ் ல இருக்குற தொகை ஒரு எம்.பிக்கு ஒரு ரூபாய்னு புடுங்கிகிட்டு போயிடுது.

இந்த உபயோகம் எல்லாம் எளிமையாக இன்னும் எவ்வளவு நாள் ஆகும்னு தெரியலையே.

அன்லிமிட்டெட் பிளானா இருக்குறதாலதான் அஞ்சு நிமிஷத்துல ஹேங்க் ஆயிடுதா இல்ல வேற காரணமான்னு எனக்கு தெரியல. உங்கள்ல யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க. புண்ணியமா போகும்.

2 கருத்துகள்:

  1. ஒரு ஜி.பி ரெண்டு ஜி.பின்னு போடுற பிளான்ல எவ்வளவு டேட்டா மீதி இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னா டேட்டா கார்டுல இருந்து சிம் கார்டை கழட்டி ஒரு போன்ல போட்டு வாய்ஸ் மெசேஜ் மூலமா கண்டு பிடிக்க வேண்டியிருக்கு. இதுல என்ன சிக்கல்னா அந்த மாசத்துக்குள்ள இலவச டேட்டா காலியாயிட்டா மெயின் பேலன்ஸ் ல இருக்குற தொகை ஒரு எம்.பிக்கு ஒரு ரூபாய்னு புடுங்கிகிட்டு போயிடுது.


    ......இது என்ன கொடுமை? கம்ப்யூட்டர் உபயோகிப்பவர்கள் பெருகி வரும் நேரத்தில், நிச்சயமாக எளிதான பயனுள்ள வழி வர வேண்டும்!

    பதிலளிநீக்கு