Search This Blog

சனி, 26 பிப்ரவரி, 2011

தீக்குளிக்கிறது என்ன அவ்வளவு சுலபமா?

சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் சாவு என்று இன்றைய (26 பிப்.) தினத்தந்தி நாளிதழின் ஒரு பக்கத்தில் பத்து வரியில் ஒரு சிங்கிள் கால செய்தி வெளிவந்திருந்தது என் கவனத்தில் படக் காரணம் சம்பவம் நடந்தது நாங்கள் வசித்து வந்த பகுதியில்.

நாளிதழில் நான் பக்க வடிவமைப்பாளராக பணியாற்றியபோது வயிற்று வலியால் தூக்குப்போட்டுக்கொண்டது, சமையல் செய்யும் போது தீப்பிடித்து பெண் பலி போன்ற செய்திகளை 'இதுக்கெல்லாம் வேற எதாவது காரணம் இருக்கும்.' என்று இயல்பாக சொல்லிவிட்டு அந்த மேட்டரை சட்டென்று ஓரங்கட்டிவிடுவார்.
நைட்டி அணிந்திருந்த 30வயது பெண் தீக்காயங்களுடன் கிட்டத்தட்ட ஒரு மாதம் சிகிச்சை பெற்று (மரண அவஸ்தை பட்டு) உயிரிழந்திருக்கிறார். சமையல் செய்யும்போது விபத்து என்று கேஸ் முடிந்துவிட்டது. வெளி உலகுக்கு தெரிந்த செய்தி இவ்வளவுதான்.

இது போன்ற ஒவ்வொரு மரணங்களுக்குப் பின்னும் என்னென்ன ரகசியங்களோ. இன்றைய செய்தியில் இடம்பெற்ற பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையு உண்டு. அந்த பெண் குழந்தைக்கு இரண்டிலிருந்து மூன்று வயது இருக்கலாம். அக்கம்பக்கத்தில் வந்த வாய் வழித்தகவல் அந்த பெண் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு கொளுத்திக் கொண்டாதாக. அந்தப் பெண்ணின் கணவனுக்கு குடிப்பழக்கம் உண்டு என்ற தகவலில் இருந்து மற்றவற்றை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் உறவு வட்டத்தில் இருந்த பெண் இப்படித்தான் பத்து லிட்டர் மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்திக்கொண்டு, வேறு தொடர்பு வைத்திருந்த கணவனை மிரட்டத்தான் இப்படி செய்தேன். என்னைக் காப்பாத்துங்க எரிச்சல் தாங்க முடியலை அப்படின்னு ஆஸ்பத்திரியில கதறியிருக்கிறார்.

கடந்த சில வாரங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை என்று தொடர்கதையாக இருக்கின்றன. கல்வி இவர்களுக்கு எதைக் கற்றுக் கொடுத்தது என்று யோசித்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. எதையும் எதிர்த்துப் போராடலாம். ஆனால் அதற்கு உயிர் வேண்டும். உயிர் இருந்தா போதும். மத்ததெல்லாம் தூசு அப்படின்னு ஒரு தைரியத்தை வழங்காத கல்வி நம்ம சமூகத்துக்கு கண்ணுக்குப் புலப்படாத ஆபத்தை தந்துகிட்டே இருக்குன்னுதான் நான் சொல்வேன். (துரதிர்ஷ்டவசமா ஊழல் பேர்வழிகளும் கொள்ளக்காரங்களும்தான் இந்த தைரியத்தோட இருக்காங்க.)

உண்மையான கல்வின்னா அது திவ்யா மாதிரி சோதனைகளை சந்திக்கிறவங்க துணிச்சலோட உலகத்தை எதிர்த்துப் போராட கத்துக்கொடுக்கணும். அந்தப் பொண்ணைப் பார்த்து அவளோட தோழிகள் 'திருடி வர்றா...பணத்தை பத்திரமா வையுங்கன்னு ' சொன்னதாலதான் ரொம்பவும் அதிகமா மனசுடைஞ்சு போய் தவறான முடிவெடுத்துட்டதா நான் பத்திரிகைகள்ல படிச்சேன். அது உண்மையா இருக்குற பட்சத்துல இப்படி மனம் புண்படும்படியா (அதாவது பணம் அந்த பொண்ணுகிட்ட சோதனை போட்டு கிடைக்காதப்போ) பேசுறது தப்புன்னு சக தோழிகளுக்கு புரிஞ்சு நாகரிகமா நடந்துக்குறதுதான் கல்வியின் பயன் அப்படின்னு எனக்குத் தோணுது. இந்த அடிப்படை விஷயம் கூட தராத நம்ம கல்வி முறையில நிறைய மாற்றம் வேணும்னு மறுபடியும் எனக்கு சொல்லத்தோணுது.

3 கருத்துகள்:

  1. சமூகத்தில் வெற்றிபெறவேண்டுமென்றால் நிறைய சகிப்புத்தன்மை வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. "கல்வி இவர்களுக்கு எதைக் கற்றுக் கொடுத்தது என்று யோசித்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. எதையும் எதிர்த்துப் போராடலாம். ஆனால் அதற்கு உயிர் வேண்டும். உயிர் இருந்தா போதும். மத்ததெல்லாம் தூசு அப்படின்னு ஒரு தைரியத்தை வழங்காத கல்வி நம்ம சமூகத்துக்கு கண்ணுக்குப் புலப்படாத ஆபத்தை தந்துகிட்டே இருக்குன்னுதான் நான் சொல்வேன்."

    நிதர்சனமான வரிகள் ... சமுதாய மற்றம் என்பது பள்ளிகளிலே தான் தோன்ற வேண்டும்....

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான். அடுத்தவனை இழிவாப் பேசத் தயங்காத மக்கள் கூட்டம். எல்லோராலேயும் தொடைச்சுப் போட்டுட்டு இருக்கமுடியுதா? அதான் செத்துத் தொலையலாமுன்னு முடிவு எடுத்துடறாங்க சிலர்.

    நாங்கள் பூனா நகரில் இருந்தப்ப, நம்ம வீட்டுக்கு வேலை செய்யவரும் உதவியாளர், குடிகாரக்கணவனுடன் மல்லுக்கட்ட முடியாமல் தீவச்சுக்கிட்டாங்க. பிழைச்சு வந்துட்டாலும் முகத்தின் ஒரு பகுதி கருகிப்போச்சு. முகத்தை மூடி முக்காடு போட்டுக்கிட்டே வீட்டு வேலைக்கு வரும்போது நமக்கே வயித்தைக் கலக்கும்:(

    பதிலளிநீக்கு