Search This Blog

வெள்ளி, 5 நவம்பர், 2010

இந்த ஆண்டு தீபாவளி எப்படி?

நேயர்களே... இது ராசிபலன் அல்ல.

ஒரு காலத்துல சின்ன ஊரா இருந்தாலும் அஞ்சு தியேட்டர் இருக்கும். அதுல ரெண்டு அல்லது மூணுலதான் கொஞ்சம் பெரிய பேனர் படங்களா வெளியிடுவாங்க. மற்ற தியேட்டர்கள்ல சாதாரண நாட்கள்ல அஞ்சரைக்குள்ள வண்டி மாதிரியான படங்களைத் திரையிட்டு சமாளிச்சாலும் தீபாவளின்னு வந்துட்டா தியேட்டர் கிடைக்காம முடங்கிக்கிடந்த எதோ ஒரு தமிழ் படத்தை திரையிட்டுடுவாங்க.

ரஜினி,கமல் மாதிரி பெரிய ஆளுங்க படத்துக்கு டிக்கட் கிடைக்காது. சரி அப்படியே வீட்டுக்கு திரும்பி போனா அக்கம்பக்கத்துல இருக்குறவங்க என்ன நினைப்பாங்கன்னு இவங்களா கவலைப்படுவாங்க.(நகரத்துல பெரும்பாலான மக்கள் அடுத்த வீட்டுக்காரனுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நமக்கு என்னன்னுதான் போவாங்க. ஆனா ஒருத்தர் புதுசா வாங்கின பொருள், உடைகள் இது மாதிரியான விஷயங்களை மட்டும் பொறாமையுடன் புறம் பேசுறதை ரொம்ப தெளிவா செய்வாங்க.) இந்த மாதிரி ஆளுங்களுக்களை நினைச்சு ரஜினி படத்துக்குதான் டிக்கட் கிடைக்கலை. எதோ ஒரு படத்தைப் பார்த்துட்டு போவோம்னு எஞ்சியிருக்குற துக்கடா தியேட்டர்ல ஒரு படத்தை பார்த்துட்டு வந்துடுவாங்க. ஆக மொத்தம், சுமாரான தியேட்டர்ல 'பிளாப்' ஆன படத்துக்கும் ஒரு வாரம் நல்ல வசூல் கிடைக்கும்.
 அதெல்லாம் அந்த காலம். இப்போ டிக்கட் கிடைக்கலைன்னா டிவிடியை வாங்கிட்டு வந்துடுறாங்க. இதை நல்லா புரிஞ்சுகிட்ட சன் பிக்சர்ஸ் எந்திரன் படத்தை திரும்பின பக்கமெல்லாம் திரையிட்டு ஒரே வாரத்துல வசூலை மூட்டை கட்டுற மார்க்கெட்டிங் உத்தியை பயன்படுத்திடுச்சு.

நானும் இப்படி தீபாவளி அன்னைக்கே படம் பார்க்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். அது அவ்வளவு சீக்கிரம் நிறைவேறலை.

1996-ம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி, 1997-தி லாஸ்ட் வேர்ல்டு, 1998-டைட்டானிக், 1999-முதல்வன், 2000-தெனாலி,2001- , 2002-ரமணா, 2003-பிதாமகன். அதோட நான் தீபாவளி அன்னைக்கு படம் பார்க்குறத விட்டுட்டேன். அதுக்கப்புறம் வேலையில பிசியாயிட்டோம்ல. இப்படியெல்லாம் பொய் பேசாத அப்படின்னு சொல்லாதீங்க.

எனக்கு சினிமா மேல இருந்த ஆர்வம் போனதுக்கு முக்கிய காரணம் ஒண்ணே ஒண்ணுதான். தியேட்டர்ல ஆப்ரேட்டருக்கு உதவியாளரா இருந்த கொஞ்ச நாட்கள்லேயே சினிமா மேல இருந்த பிரமிப்பு போயிடுச்சு. ஒருநாள் ஆப்ரேட்டர் திடீர்னு வேலைக்கு வர முடியாத சூழ்நிலையில என்னையே படத்தை திரையிட சொல்லிட்டாங்க. அப்போ எனக்கு பதினஞ்சு வயசு. (தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேல வெற்றி நடை போட்ட அந்த மெஷின் இயக்கம் வழக்கொழிந்து வர்றதால அது பற்றி எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை ஆவணப்படுத்துற விதமா அப்பப்ப பதிவு எழுதுறதா சொல்லி இருந்தேன். நேரமின்மையால சில வாரங்களா சரியா பதிவு எழுத முடியலை. அந்த விஷயங்களை ஒரே பதிவா சீக்கிரம் வெளியிட முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்.)

இப்ப ஒரு நாளிதழ்ல லேஅவுட் டிசைனர் வேலைக்காக புதுசா சேர்ந்துருக்கேன். நான் தனியா பக்கம் வடிவமைக்க எவ்வளவு நாள் ஆகும்னு புரியாம தட்டுத்தடுமாறி பயிற்சி எடுத்துகிட்டு இருந்தேன். திடீர்னு போன வாரம் வழக்கமான கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வாரலீவு போட்டுட்டார். அவருக்கு மாற்று ஆளும் கடைசி நேரத்துல வரலை. உடனே என்னையே 3 பக்கங்கள் வடிவமைக்க சொல்லிட்டாங்க. நெருக்கடியான நேரத்துலதான் நம்மளால என்ன செய்யமுடியும்னு தெரியுது. சந்திரமுகி படத்துல ஒரு பாட்டுல வர்ற வரி...நீருக்குள் அமிழ்த்தப்பட்ட பந்து மேலெழும்பி வந்தே தீரும்.

எல்லா விஷயத்துக்கும் இது பொருந்தும்.

இளைய பாரதத்துக்கு வருகை தர்ற எல்லாருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

3 கருத்துகள்:

  1. போன தீபாவளி தனியே தன்னந்தனியே. இந்த தீபாவளி வலை உலகத்துடன்,

    இந்த தீபாவளிக்கு நாங்களும் ஒரு வலைப்பூவை உருவாக்கி, பதிவராக "தலை"யெடுத்து இருக்கிறோம். அந்தவகையில் எங்கள் வலைப்பூவிற்கு இது 'தல" தீபாவளி. இந்த இனிய வேளையில் அனைத்து வலைப்பதிவர்களுக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    http://bharathbharathi.blogspot.com/2010/11/blog-post_02.html

    பதிலளிநீக்கு
  2. //சந்திரமுகி படத்துல ஒரு பாட்டுல வர்ற வரி...நீருக்குள் அமிழ்த்தப்பட்ட பந்து மேலெழும்பி வந்தே தீரும்.

    எல்லா விஷயத்துக்கும் இது பொருந்தும். //

    இந்தத் தெளிவு இருக்கிறதே. அது போதும். உயரத்துக்கு வந்துடுவீங்க.

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்:)!!!

    பதிலளிநீக்கு
  3. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு