வியாழன், 21 அக்டோபர், 2010

தினமலர்-வாரமலர் டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டி 2010ல் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை - காதல்

கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால்தான் தாயைப் படைத்தான் என்று சொல்வார்கள். ஆனால் பெருகி வரும் முதியோர் இல்லங்களுக்கும் சிதைந்து வரும் குடும்ப உறவுகளுக்கும் முக்கிய காரணமாக இருப்பது ஒரு பெண்தான்...இல்லை...தாய்தான்.(மாமியாரோ மருமகளோ...அவளும் ஒரு தாய்தானே.)

நம் நாட்டில் உள்ள வளங்கள் உலக மக்கள் எவ்வளவு பேர் என்றாலும் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும். ஆனால் ஒரே ஒரு மனிதனி ஆசைகளைக்கூட நிறைவேற்ற போதாது என்று காந்தி சொல்லியிருக்கிறார். ஒரு மனிதனின் ஆசையையே நம் நாட்டில் உள்ள மொத்த வளங்களால் பூர்த்தி செய்ய முடியாது என்றால் பேராசையை சாதாரண வருமானம் உள்ள ஆணால் எப்படி நிறைவேற்ற முடியும்?... இந்தச் சிக்கலின் காரணமாக ஏற்பட்டதுதான் பல குடும்பங்களில் வயதானவர்களைக் கழித்துக் கட்டும் அவலம்.

பழங்காலத்தில் அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு கொஞ்சம் ஓவராகவே சகித்துக்கொண்டு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்போது பல ஆடம்பரத் தேவைகள் அத்தியாவசிய தேவைகளாக நாம் விரும்பியோ நம் மீது திணிக்கப்பட்டோ விட்டன. இதனால்தான் வீட்டில் உள்ள வயதானவர்களை கூடுதல் சுமையாக பலரையும் நினைக்க வைத்திருக்கிறது.

சுருக்கமாக சொன்னால் சுயநலம் - நம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. பரிசுபெற்ற கதையின் கரு எனக்குத் தோன்றக்காரணமான சிந்தனைகள்தான் இவை.
கதையின் நடை எனக்கே முழு திருப்தியளிக்கவில்லை. ஆனால் நான் கதைக்காக தேர்வு செய்திருக்கும் கருவின் வலிமைதான் எனக்கு இந்தப் பரிசைப்பெற்றுத் தந்திருக்கிறது என்பது என் கருத்து.

3 கருத்துகள்:

  1. சுருக்கமாக சொன்னால் சுயநலம் - நம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. பரிசுபெற்ற கதையின் கரு எனக்குத் தோன்றக்காரணமான சிந்தனைகள்தான் இவை.


    ......அக்கறையான கரு ஒன்றை எடுத்து அசத்தி இருக்கீங்க.... பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்!

    பதிலளிநீக்கு
  2. வலிமையான கருவே. பாராட்டுக்கள்.

    டி வி ஆர் நினைவுச் சிறுகதையில் ’பரிசு பெற்ற சிறுகதைகள்’ தொகுப்பில் இடம் பெற்றிருந்த ‘இந்திரா இ ஆ ப, கதையும் வாசித்தேன். மிக நன்று. தொடர்ந்து சாதிக்க வாழ்த்துக்கள் சரவணன்.

    பதிலளிநீக்கு