Search This Blog

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

இரண்டரை லட்ச ரூபாய் போச்சே!...இந்திய ரூபாய்க்கான புதிய குறியீடு வடிவமைப்பு

ஊரோட ஒத்துப்போகாம எப்ப பார்த்தாலும் நீதி,நேர்மை,நடுநிலைமை அப்படின்னு பேசி வாய்ப்புக்களை இழக்குறதே அவனுக்கு வழக்கமாப் போச்சு.(அவன் வேற யாரு...நாந்தேன்.)
எல்லா விஷயத்துலயும் அயல்நாட்டு ஐடியாவைத்தான் சுடணுமான்னு ரொம்பவே யோசிச்சு நானே ஒரு குறியீட்டை வடிவமைச்சு போட்டிக்கு அனுப்புனேன்.

நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 1
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 2
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 3
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 4
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 5

தமிழகத்தைச்சேர்ந்த ஒருத்தர் வடிவமைச்ச குறியீடு தேர்வு செய்யப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் முதல்ல பெருமையாத்தான் இருந்துச்சு.ஆனா தொடர்ந்து வந்த தகவல்கள்,நான் எந்த அளவுக்கு விஷயம் தெரியாம இருந்துருக்கேன்னு வேதனைப்பட வெச்சது.

என்னோட வடிவமைப்பு எழுதுறதுக்கு கடினமா இருந்ததாலயோ, வேற காரணங்களாலயோ நிராகரிக்கப்பட்டிருந்தா பெருமையா இருந்துருக்கும்.ஹிந்தி தேசிய மொழியா அங்கீகரிக்கப்பட்ட ஒரே காரணத்தால அதை அடிப்படையா வெச்சி உருவாக்கப்பட்ட குறியீடு ஏக மனதா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு.

இது உதயக்குமாருக்கு சாத்தியமாகக் காரணம் அவருக்கு ஹிந்தி தெரிஞ்சதாலதான்.

என்னுடைய வருத்தம் என்னன்னா, தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகள்ல நான் கொடுத்த விளக்கம் யாருடைய கவனத்துக்கும் போகாமலேயே நிராகரிக்கப்பட்டிருக்கலாமோன்னுதான்.

ஹிந்தியை எதிர்க்குறோம்னு சொல்லி பல மத்திய அரசுப்பணிக்குரிய வாய்ப்பை நமக்கு கடினமாக்கி வெச்சிட்டாங்க. இப்போ இது மாதிரியான சாதனை முயற்சிகள் ஹிந்தி தெரியாத காரணத்தால வெளி உலகத்துக்கு தெரியாமலேயே போகுது. இந்த அவல நிலையை நினைச்சு பெருமூச்சு விடத்தான் முடியும். வேற என்ன செய்யுறது?

பத்திரிகையாளர் 'ஞாநி' ஓ பக்கங்களை குமுதத்தில் படிச்சதும் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. நான் வடிவமைச்ச குறியீட்டுக்கு  தேர்ந்தெடுக்கப்பட தகுதியில்லாம இருக்கலாம்.ஆனா நான் அதுல என்னென்ன விஷயங்கள் இருக்கணும்னு நினைச்சு உருவாக்குனேனோ அந்த கொள்கைகள் நடுநிலையானவைன்னு புரிஞ்சுடுச்சு.

நீங்களும் இந்த பக்கங்களைப் படிச்சுட்டு அமைதியா யோசிச்சுப் பாருங்க. உண்மை புரியும்.

ஆனா ஒண்ணுங்க...ரூபாய் நோட்டுல பதினெட்டு மொழிகள் இருக்கேன்னு பெருமையா நினைச்சு தமிழ்,ஆங்கிலத்துல மட்டும் விளக்கம் அனுப்பினது எவ்வளவு முட்டாள்தனம்னு நல்லாவே புரிஞ்சுகிட்டேன்.
வெட்டி நியாயம் பேசாம ஹிந்தி கத்துகிட்டா பல விஷயங்களுக்கு நல்லது.இல்லன்னா நம்மை இந்த நிலையில வெச்சிருக்குற அரசியல்வாதிகளோட புள்ளைங்க ஹிந்தியைக் கத்துக்கிட்டு வெளுத்து வாங்கிகிட்டு இருக்குறதை கட்டியிருக்குற கோவணத்தையும் இழந்துட்டு நாம வேடிக்கை பார்த்துகிட்டே இருக்க வேண்டியதுதான்.

ஓ பக்கங்கள் 1
ஓ பக்கங்கள் 2
ஓ பக்கங்கள் 3
ஓ பக்கங்கள் 4
ஓ பக்கங்கள் 5

12 கருத்துகள்:

  1. உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  2. பாஸ் கொஞ்சம் ஓவரா சிந்திச்சிட்டீங்களோ??? அதான் பயபுள்ளைங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன், அதுவும் 0 பார்த்ததும் அவிங்களையும் அவுங்க ஆட்சியையும் பார்த்து நீங்க மார்க் போட்டு இருப்பதாக நினைச்சிருப்பாய்ங்க பாஸ்:)))

    பதிலளிநீக்கு
  3. @ அமைதி அப்பா

    // உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. //

    ஊக்கத்துக்கு நன்றி...
    ******

    @குசும்பன்

    //பாஸ் கொஞ்சம் ஓவரா சிந்திச்சிட்டீங்களோ??? அதான் பயபுள்ளைங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன், அதுவும் 0 பார்த்ததும் அவிங்களையும் அவுங்க ஆட்சியையும் பார்த்து நீங்க மார்க் போட்டு இருப்பதாக நினைச்சிருப்பாய்ங்க பாஸ்:))) //

    அட... இது கூட நல்லா இருக்கே...

    பதிலளிநீக்கு
  4. ///ஹிந்தியை எதிர்க்குறோம்னு சொல்லி ///
    I don't know your profession.
    Assume you are a doctor or engineer or a software professional. Who asked you to take this career and job? Is it our government? You decided that. same way ypou shopuld have studied Hindi. who stopped you from reading Hindi?

    ///இது உதயக்குமாருக்கு சாத்தியமாகக் காரணம் அவருக்கு ஹிந்தி தெரிஞ்சதாலதான்///
    You could have studied Hindi like உதயக்குமாரு.

    Hindi is NOT our national language! by the way?

    read my blog it is for people like you..

    http://tamilkadu.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. //என்னுடைய வருத்தம் என்னன்னா, தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகள்ல நான் கொடுத்த விளக்கம் யாருடைய கவனத்துக்கும் போகாமலேயே நிராகரிக்கப்பட்டிருக்கலாமோன்னுதான்.

    ஹிந்தியை எதிர்க்குறோம்னு சொல்லி பல மத்திய அரசுப்பணிக்குரிய வாய்ப்பை நமக்கு கடினமாக்கி வெச்சிட்டாங்க. இப்போ இது மாதிரியான சாதனை முயற்சிகள் ஹிந்தி தெரியாத காரணத்தால வெளி உலகத்துக்கு தெரியாமலேயே போகுது. இந்த அவல நிலையை நினைச்சு பெருமூச்சு விடத்தான் முடியும். வேற என்ன செய்யுறது?
    //

    நீங்கள் இந்தி கற்பதற்கு யாராவது தடை செய்தார்களா

    பதிலளிநீக்கு
  6. மற்றப்படி உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது :) வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. :) ரொம்பவே ஒவரா யோசிச்சுட்டீங்க... இவரு யோசிச்ச அளவுக்கு போய் யோசிக்கும் நிலைமையில் தேர்வு குழு இருந்து இருக்காது. குறியீடு என்பது எளிமையாக இருக்க வேண்டும் என்ற முதல் சுற்றுலே இது அடி வாங்குது. உலகம் முழுக்க இந்த குறியீடு உபயோகப்படுத்தப்படும் என்பதை நினைவில் வைத்து இருக்க வேண்டும். அதை தவிர்த்து இதுக்கும் ஹிந்தி தெரியல அதனால் வட போச்சு என்பதுக்கும் சம்பந்தம் இல்லை. ஹிந்தி படிக்கல என்பது வர வர நம் மக்களுக்கு ஒரு தாழ்வு மனபான்மை ஏற்படுத்துகிறதோ என்ற ஐயப்பாடு உறுதியாகி கொண்டே வருகிறது.

    பதிலளிநீக்கு
  8. சரவணன், நல்ல முயற்ச்சி. நீங்க ஏற்கனவே உங்களின் (உங்களை) வடிவமைப்பை சுயமதிப்பீடு செய்துவிட்டீர்கள், சற்று கடினமான வடிவமைப்பு என்று. ஆனால் அதில் நீங்கள் கருத்தில் கொண்ட விசயங்கள் அதிகம். அதற்க்காக பெருமை பட்டுக்கொள்ளுங்கள். அடுத்த முறை வெற்றி நிச்சயம்.

    பதிலளிநீக்கு
  9. வெட்டி நியாயம் பேசாம ஹிந்தி கத்துகிட்டா பல விஷயங்களுக்கு நல்லது.இல்லன்னா நம்மை இந்த நிலையில வெச்சிருக்குற அரசியல்வாதிகளோட புள்ளைங்க ஹிந்தியைக் கத்துக்கிட்டு வெளுத்து வாங்கிகிட்டு இருக்குறதை கட்டியிருக்குற கோவணத்தையும் இழந்துட்டு நாம வேடிக்கை பார்த்துகிட்டே இருக்க வேண்டியதுதான்.


    ..... அப்படியா, ஜி?? :-)

    பதிலளிநீக்கு
  10. நல்ல முயற்சி பண்ணிருக்கீங்க தல... அதுவே பெரிய விசயம்...எனக்கு இந்த மேட்டரே தெரியாது... தெரிஞ்சிட்டாலும் அப்படீங்கறிங்களா... :))

    பதிலளிநீக்கு
  11. பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
    உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
    www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
    எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!

    பதிலளிநீக்கு