Search This Blog

செவ்வாய், 15 ஜூன், 2010

ரயில் தண்டவாளம் தகர்ப்பு - யாருக்கெல்லாம் ஆப்பு?

ரயில்களையும் தண்டவாளங்களையும் தகர்க்கும் கலாச்சாரம் இதுநாள் வரை வட இந்தியாவில்தான் அதிகம் என்று நினைத்ததற்கு வந்தது ஆப்பு.மிகப்பெரிய அரசியல் சூதாட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த தண்டவாள தகர்ப்பு என்று சொல்கிறார்கள்.இது பற்றி எல்லாம் எனக்கு விவரம் தெரியாது.
நான் பேசப்போவது இது மாதிரியான நாச வேலைகளால் நமக்கு என்னென்ன பாதிப்பு என்பதைப்பற்றிதான்.

நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பெரும்பாலான ரயில் பாதைகள் இருவழிப்பாதைகளாகி விட்டன.அந்தப் பகுதி மக்களை மட்டுமே குறி வைத்து அந்த ரயில்கள் இயக்கப்படுவதால்தான் தமிழகத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில் கூட பல ரயில்கள் நிற்காமல் செல்லும் வகையில் இயக்கப்படுகின்றன.

ரயில் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அந்தந்த மாநிலங்களும் கணிசமான தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்ற அறிவிக்கப்படாத கொள்கை முடிவுக்கு மத்திய அரசு வந்துவிட்டது. இந்த போக்கு சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.தமிழகத்தின் முக்கிய நகரங்களை இரட்டைரயில்பாதையால் இணைத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன்.
அதாவது, தொலைதூர ரயில்கள் அரைமணி நேரத்துக்கு ஒன்றாக புறப்பட்டால் இவ்வளவு பேருந்துகள் செல்ல வேண்டியது இருக்காது,இவ்வளவு எரிபொருள் செலவாகாது,சாலை விபத்துக்களில் நாள்தோறும் இவ்வளவு உயிர்கள் பலியாகாது,பேருந்துகள் வெளியிடும் புகையால் இந்த அளவு வளிமண்டலம் வெப்பமாகாது என்பது என் எண்ணம்.

ஆனால் இதைப் பற்றி நான் யாருடனாவது விவாதிக்கும்போது, இரட்டை ரயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் பெரிய அளவில் சிக்கல் வரும் என்று சொல்கிறார்கள். அது எப்படிங்க, நாலுவழிப்பாதை அமைக்க மட்டும் நிலம் கிடைக்குது?

அது சரி...நாலுவழிப்பாதைக்கு காண்ட்ராக்ட் விட்டு பத்து கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி வசூல் செய்யுற மாதிரி ரயிலை நிறுத்தி காசு வாங்க முடியாதே. அதனால இந்த பணிகள் மந்தமாத்தான் இருக்கும். அப்படின்னு என்னையே நான் சமாதானப்படுத்திகிட்டு இருக்கேன்.
இப்ப உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னு பழமொழி சொல்லுவாங்களே...அந்த மாதிரி இருக்குற ரயில் பாதைகளையும் இப்படி வெடி வேச்சு தகர்த்தா வேற யாருக்கு ஆப்பு?அப்பாவி பொது ஜனத்துக்குதான்.(லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், மாதம் கால் லகரம் ஊதியம் வாங்கும் தனியார் நிறுவன ஊழியர்கள், கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள்,தில்லுமுல்லு வியாபாரிகள் இந்த அப்பாவி பொதுஜனப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள்.)
******
போலி மருத்துவர்கள் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.திருவாரூரில் கூட ஐந்து பேர் கைது என்று நாளிதழ்களில் படித்தேன்.

நம்ம நாட்டுல என்ன ஸ்பெஷல்னா, சாதாரண மனுஷன் வாழ வழி இல்லாம எல்லா பாதையையும் அடைச்சுட்டு குரல்வளையையும் நெறிப்போம்.அதுல இருந்து நீங்களா தப்பிக்க வழியைப் பார்த்தீங்கன்னா அதுக்கும் விட மாட்டோம். செத்துடலாம்னு நீங்களா முடிவெடுத்தா அதையும் தப்புன்னு சொல்லி உள்ள போட்டுடுவோம். ஏன்னா அதுக்கு ரைட்ஸ் எங்களுக்குதான் இருக்கு.

என்ன குழப்பமா?
உடம்புக்கு கேடுன்னு சொல்ற பொருள் எல்லாம் காலையில இருந்து நடுராத்திரி வவரைக்கும் கிடைக்குது. ஆனா அரசு மருத்துவமனைகளில் காலை எட்டு மணியில இருந்து பதினோரு மணி வரைதான் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை, ஆக்சிடண்ட் கேசுன்னா பெரிய ஊர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போங்கன்னு எழுதிக்கொடுக்குறது மட்டும் இருபத்துனாலு மணி நேர சேவையா இருக்கே அத சொன்னேன்.
மருந்து கம்பெனிகளும் பல மருத்துவர்களும், மருத்துவமனைகளும், பரிசோதனைக்கூடங்களும் லாபம் சம்பாதிக்கிறதோட நிறுத்திக்காம கொள்ளை அடிக்கிறத கண்டுக்க மாட்டாங்க.குடிச்சுட்டு வாகனம் ஓட்டுறப்ப ஓட்டுனர் செய்யுற தவறாலயும், அவங்க அஜாக்கிரதையாலயும்தான் தொண்ணூறு சதவீத விபத்து ஏற்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கானவங்க செத்துகிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சதுக்கப்புறமும் இதைக் கட்டுப்படுத்த ஒரு நடவடிக்கையையும் காணோம். இப்ப மட்டும்................................................

3 கருத்துகள்:

  1. இந்த எழுத்து நடை, ஒரு துள்ளலுடன் இருக்கிறது.... பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  2. //நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பெரும்பாலான ரயில் பாதைகள் இருவழிப்பாதைகளாகி விட்டன.//

    நண்பரே...

    கேரளாகாரர்கள் தான் அதிகம் இரயில்வே பணியில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர் இதனால் அவர்கள் தான் அதிகம் அப்பணிக்கு செல்ல முடிகிறது, திட்டம் தீட்டுபவர்களும் அவர்களே அதானால் அவர்கள் ஏரியாவிற்கு அனைத்து சலுகைகளும் செல்கிறது. அதை நம் அரசியல்வாதிகள் அதிகம் தட்டிக்கேட்பதில்லை....

    பதிலளிநீக்கு