Search This Blog

திங்கள், 24 மே, 2010

நமக்கு நாமே ஆப்பு வைப்பது எப்படி?

108 ஆம்புலன்ஸ் சேவைக்கும்  மங்களூர் விமான விபத்துக்கும் என்னய்யா சம்மந்தம் அப்படின்னு நீங்க நினைக்கலாம். இங்க நடக்குற சம்பவம் எல்லாமே எதோ ஒரு வகையில தொடர்புடையதாத்தாங்க இருக்கு.
108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஐடியா யார் கொடுத்தாங்களோ...அதனால கிடைக்கிற நன்மைகளை சொல்லி யார் விளம்பரம் தேடுறாங்களோ...இதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும். ஆனா இது மாதிரி மக்கள் நலத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையா போய்ச் சேர விடாம தடுக்குறது யார் தெரியுமா? வேற யாரு...பொதுமக்கள்தான். ஒவ்வொருதுறையிலயும் வில்லங்கம் புடிச்ச அதிகாரிகளும் பணியாளர்களும் கொஞ்ச பேராச்சும் இருப்பாங்க.இவங்களுக்கு குறையாம  சேட்டை செய்யுறதுல பொதுமக்கள் சிலரும் மன்னர்களா இருக்குறதுதான் வேதனை.

108 சேவையை வேண்டி ஒரு நாள்ல சராசரியா வர்ற அழைப்புகளோட எண்ணிக்கை 33000. அதுல பத்து சதவீதம்தான் உண்மையிலேயே உதவி தேவைப்படுறவங்க கிட்ட இருந்து வருது. மற்ற தொலைபேசி அழைப்புகள் எல்லாம் குப்பைதான் அப்படின்னு ஒரு செய்தி வெளியாகி இருக்கு.இதுல முழு அளவு உண்மை இல்லைன்னாலும் இது இலவச அழைப்பா இருக்குறதால பலர் முறைகேடா நடந்துக்குறது உண்மையாத்தான் இருக்கும்.
பெண் குரல் கேட்டால் தவறா பேசுறது, குழந்தை தவறுதலா அமுக்கிட்டான்னு சொல்றது(இப்படி பேசி சமாளிக்கிற பெருசுதான் அமுக்கியிருக்கும்.), செருப்பு கடிச்ச காயத்துக்கெல்லாம் மருந்து போட கூப்பிடுறது அப்படின்னு பலர் 108க்கு போன் பண்றதுனால இந்த சேவைப்பணியில இருக்குறவங்களோட ஈடுபாடு குறைய மக்களே காரணமாயிடுறாங்க.

இப்படி தப்புசெய்யுறவங்களால உண்மையிலேயே உதவி தேவைப்படுறவங்களுக்கு சில நேரத்துல இந்த சேவை பயனில்லாம போறதுதான் என்னை வேதனைப்படுத்துற விஷயம்.

சின்ன விஷயத்துக்கு போன் செய்யுறவங்களைக்கூட விட்டுறலாம். ஆனா குழந்தை அமுக்கிடுச்சு, என் கை தெரியாம பட்டுடுச்சுன்னு சொல்றவங்களுக்கு எதாவது முறையில கடிவாளம் போட்டே ஆகணும். ஆனா அந்த வரைமுறைகள் உதவி அவசியம் தேவைப்படுறவங்களுக்கு தடையா அமையாத மாதிரி இருக்கணும்னா என்ன செய்யுறதுன்னுதான் எனக்குத் தெரியலை.

பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களை, பொது சொத்துக்களை நாசம் செய்யுறதுல பொதுமக்களுக்கும் பங்கு இருக்கு. அப்புறம் அது சரியில்லை. அரசாங்கத்துக்கு அக்கறை இல்லைன்னு கூப்பாடு போட்டு என்ன புண்ணியம்?
******
22.05.2010 அன்று மங்களூர் விமான விபத்து பெரிய அளவுல ஊடகங்களில் இடம்பிடிச்சுருக்கு.

இதில் பறிக்கப்பட்ட 158 உயிர்கள் எத்தனை கோடி ரூபாய்கள் கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாத அளவுக்கு விலை மதிப்பிட முடியாததுதான்.

ஆனால் தினம் தினம் சாலை விபத்துக்களால் எத்தனை ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள், காயம் அடைகிறார்கள், ஊனமடைகிறார்கள் என்று புள்ளி விவரங்களைப் பார்த்தாலே தலை சுற்றுகிறது. இப்படி புள்ளிவிவரங்களில் பதிவாகாமல் போகும் உயிர்கள் எத்தனையோ.

மனிதத்தவறுகள்தான் எந்த ஒரு விபத்திலும் முக்கிய இடம் பிடிக்கின்றன. உடனே நீங்கள் மங்களூர் விமான விபத்தில் பலியான விமானி ஏற்கனவே 19 முறை இங்கே வெற்றிகரமாக விமானத்தை தரையிறக்கி இருக்கிறார். 10200 மணி நேரம் விமானத்தை இயக்கியிருக்கிறார் என்று சமாதானம் சொல்லக்கூடாது.

இந்த இடத்தில் மனிதத்தவறு என்று நான் சொல்வது வேறு சில ஆட்கள் காட்டிக்கொண்டிருக்கும் அலட்சியத்தை.

மங்களூர் விமான நிலையத்தில் தரையிரங்குவதை டேபிள் டாப் லேண்டிங்க என்று சொல்வார்களாம். அதாவது விமான நிலையத்தின் ஓடுபாதையைக் கடந்து விமானம் ஓடினால் பள்ளத்தாக்கில் போய் விழ வேண்டியிருக்கும் புவி அமைப்புடைய பகுதியைத்தான் டேபிள்டாப் லேண்டிங் என்று கூறுவதெல்லாம் சரிதான்.

ஓடுபாதையின் துவக்கத்தில் இருந்து 1400 முதல் 1800 மீட்டருக்குள் விமானம் லேண்டிங் ஆனால் மட்டுமே சரியாக ஓடி நிற்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த விமானம் 3000 மீட்டர் தூரத்தைக் கடந்துதான் லேண்ட் ஆகியிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

ஒரு சைக்கிளையே நாம் நினைப்பது போல் சில நேரங்களில் ஓட்ட முடியாது. அப்படி இருக்கும்போது இது மாதிரியான சில சூழ்நிலைகள் விமான இயக்கத்தில் தவிர்க்க முடியாதுதான். சுற்றிலும் பள்ளத்தாக்கு இருக்கும் இடத்தில் மேலும் சில ஆயிரம் மீட்டர்கள் ஓடுபாதை இருப்பது போல் அமைக்காதது யார் தவறு?
நம் நாட்டில் மட்டுமா, அல்லது எல்லா நாடுகளிலுமா என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்து சில விஷயங்கள் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கிறது.

வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ற வகையில் சாலை விதிகள் அதிகரிக்கவில்லை. விலைவாசி பறக்கும் அளவுக்கு பொதுப்போக்குவரத்து வசதிகள் அதிகமாகவில்லை. 132 கி.மீ தொலைவு மட்டுமே (மதுரை-திருச்சி) உள்ள இரு நகரங்களுக்கு சென்று வரும் ஒரு பேருந்தில் மட்டும் ஒரு மாதத்துக்கு மட்டுமே 25,000 வரை சுங்கம் வசூலிக்கத் தெரியும் அளவுக்கு திறமையான ஓட்டுநர்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இது மாதிரி பற்றாக்குறையான விஷயங்களால் திருவாளர் பொதுஜனத்துக்குதான் ஆப்பு.
அதாவது நமக்கு நாமே ஆப்பு வைக்கவில்லை என்றால் பக்கத்தில் இருக்கும் ஒருத்தன் வச்சி நம்மை கவுத்துகிட்டேதான் இருக்கான்.

அது பக்கத்து வீட்டுக்காரன், பஸ்ஸ்டாண்ட் கடைக்காரன், அரசு அதிகாரி, கட்சி பேரை சொல்லி காண்ட்ராக்ட் எடுத்தவன்னு யாரா வேணுன்னாலும் இருக்கலாம்.

8 கருத்துகள்:

  1. விழிப்புணர்வைக் கோரும் நல்ல பதிவு சரவணன்.

    பதிலளிநீக்கு
  2. @ ராமலக்ஷ்மி

    உடனடி வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  3. விழிப்புணர்ச்சி உண்டாக்கும் நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  4. //நமக்கு நாமே ஆப்பு வைப்பது எப்படி?//

    இதோ இப்படி...

    http://thatstamil.oneindia.in/news/2010/05/24/pm-raja-nda-policy-telecom-licence.html

    பதிலளிநீக்கு
  5. அப்படிப் பட்ட இடத்தில் விமான நிலையம் அமைத்தது மிகத்தவறு. மனிதத் தவறு.

    பதிலளிநீக்கு
  6. நம்ம மக்கள் கிடைக்கிரத எப்பவும் சரியா பயன் படுத்திக்க மாட்டாங்க சரவணன்..

    இதுபோல பதிவுகள் தொடர வாழ்த்துக்களுடன்

    www.narumugai.com

    பதிலளிநீக்கு
  7. 108 சேவையை வேண்டி ஒரு நாள்ல சராசரியா வர்ற அழைப்புகளோட எண்ணிக்கை 33000. அதுல பத்து சதவீதம்தான் உண்மையிலேயே உதவி தேவைப்படுறவங்க கிட்ட இருந்து வருது.


    நல்ல தகவல் ...... நல்ல பதிவு

    பதிலளிநீக்கு