Search This Blog

வெள்ளி, 14 மே, 2010

வராத படிப்பை வா...வான்னு சொன்னா எப்படி வரும்?

திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்த திருவாரூரைச்  சேர்ந்த மாணவியான  கீர்த்திப்ரியா சிறப்புத்தமிழ்ப் பாடத்தில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருக்கிறார். இவரது மொத்த மதிப்பெண்கள் 1045. சிறப்புத்தமிழில் 191 எடுத்து மாநிலத்தில் முதலிடம்.
தந்தையை இழந்த அவருக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறப்போகும் இந்த நேரத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் இம்மாணவி மேற்படிப்பை சிரமமின்றி தொடர தமிழக முதல்வர் உதவுவார் என்று நாங்கள் நம்புகிறோம்.

******

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மாணவன் ரமேஷ் படித்தது பூந்தோட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில்.

தமிழ்-190,ஆங்-176,இயற்-198,வேதி-200,உயிரி-189,கணித-200,மொத்தம்-1153

கேள்வித்தாள் கடினமாக இருந்தும் இரண்டு பாடங்களில் இருநூறு எடுத்திருப்பது மிகப்பெரிய விஷயம். பூந்தோட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான் அறிந்த வரை தொடர்ந்து பிரமாதமான ரிசல்ட் கிடைத்து வருகிறது. கிராமப்பகுதியாக இருந்தாலும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் மாணவர்களின் அர்ப்பணிப்பும் பொருத்தமாக அமைந்தால் வெற்றிகள் தேடி வரும் என்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது.

இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பேரளம் அரசுமேல்நிலைப்பள்ளியும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இது மிகச்சிறிய உதாரணம் மட்டுமே. தமிழகம் முழுவதிலுமே இந்தப் பள்ளிகளை விடவும் சிறப்பாக செயல்பட்டு பெருமை சேர்க்கும் அரசு கல்விக்கூடங்கள் நிறையவே உள்ளன.
ஆனால் சிலரது அலட்சியத்தாலும் பல கல்வித்தந்தைகளின் சுயலாபத்துக்காகவுமே நிறைய அரசுப்பள்ளிகள் முடமாக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு லட்சக்கணக்கில் செலவழிக்கவேண்டிய அவல நிலையும் அதிகரித்து வருகிறது. கல்வி, சேவை என்ற நிலையை விட்டு வணிகம் என்ற குழிக்குள் விழுந்ததுமே அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சி திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது என்று உறுதியாக சொல்லலாம்.

அரசுப்பள்ளிகள் தடுமாற பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப்பற்றி எழுதத் தொடங்கினால் நெடுங்கதையாக நீளும்.

******

இந்த வாரிசுகள் தொல்லை தாங்க முடியலைப்பா. சினிமாவுலயாச்சும் பிடிக்காத முகம்னு தெரிஞ்சா தியேட்டர் இருக்குற ஏரியா பக்கமே போகாம ஒதுங்கிடலாம். வாரிசு அரசியல்வாதின்னா எதுவும் பண்ண முடியலையேன்னு புலம்பிகிட்டே ஒதுங்கிடலாம்.

ஆனா வாரிசு டாக்டருங்களால மக்களுக்கு நேரடி ஆப்பு உச்சி மண்டையிலதான் இறங்கும். அதுக்காக நாம எந்த டாக்டர்கிட்டயாவது சிக்காமயும் இருக்க முடியாது.
வராத படிப்பை வா...வான்னு சொன்னா எப்படி வரும் என்று சில சினிமாக்களில் வசனம் வருவதுண்டு. பல டாக்டர்கள் கொள்ளை அடிச்சு சம்பாதிச்ச பணத்துல பத்துமாடியில ஆஸ்பத்திரியைக் கட்டிடுறாங்க.எனக்கு பழக்கமான ஒரு டாக்டரோட பையன் மேனேஜ்மெண்ட் துறையில சாதிக்கணும்னு ஆசைப்பட்டான். அவன் பிளஸ் ஒன் சேரும்போதும் எவ்வளவோ கத்தினான் கதறுனான். ஆனா அவனோட அப்பா விடலையே. இருபது லட்ச ரூபாய் டொனேஷன் கொடுத்து ஒரு தனியார் கல்லூரியில அவனை மருத்துவப்படிப்புல சேர்த்துவிட்டார்.

இவனாச்சும் ஏதோ படிச்சுகிட்டு இருக்கான்னு நினைக்குறேன். எங்க ஊருலேயே இன்னொரு டாக்டர். அவரோட பையனோட கெப்பாசிட்டி என்னன்னு எனக்கு இது நாள் வரை தெரியாது. ஆனா அவரோட பையன் மருத்துவக்கல்லூரியில நாலு பாடத்துல அரியர் வெச்சதால அவனை பாஸ் போட சொல்லி லட்சக்கணக்குல லஞ்சம் கொடுக்கும்போது மாட்டிக்கிட்டாருன்னு பேப்பர்ல படிச்சதும் அவனோட லட்சணம் புரிஞ்சுடுச்சு.

என்ன கொடுமை சார் இது.

நாளிதழில் வெளிவந்த விடைத்தாள் மோசடி பற்றிய செய்தியைப் படிக்க இங்கே கிளிக்கவும்.

4 கருத்துகள்:

  1. //அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு லட்சக்கணக்கில் செலவழிக்கவேண்டிய அவல நிலையும் அதிகரித்து வருகிறது. கல்வி, சேவை என்ற நிலையை விட்டு வணிகம் என்ற குழிக்குள் விழுந்ததுமே அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சி திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது என்று உறுதியாக சொல்லலாம்.//
    This is very wrong Statement. Now a days thousands of teachers are appointed in govt schools without collecting even single ruppee.

    Most of the govt school teachers are more talented than the private school teachers,they can do lot of things if they get good students

    பதிலளிநீக்கு
  2. நீங்க template மாத்தி இருக்கீங்க. என்ன காரணத்தினாலோ, எனக்கு உங்கள் பதிவுகள் அப்டேட் ஆகவில்லை. ஆளையே காணோமே என்று பார்க்க வந்தால், இடுகைகள் இருக்குதுங்க. என்ன ஆச்சுன்னு தெரியல? திரும்ப follow கிளிக் பண்ணி இருக்கேன். பார்க்கலாம்.....!

    பதிலளிநீக்கு
  3. Chitra
    // நீங்க template மாத்தி இருக்கீங்க. என்ன காரணத்தினாலோ, எனக்கு உங்கள் பதிவுகள் அப்டேட் ஆகவில்லை. ஆளையே காணோமே என்று பார்க்க வந்தால், இடுகைகள் இருக்குதுங்க. என்ன ஆச்சுன்னு தெரியல? திரும்ப follow கிளிக் பண்ணி இருக்கேன். பார்க்கலாம்.....! //

    சில குடும்ப நிகழ்வுகள் காரணமாக சரியாக பதிவிடமுடியவில்லை. சமீபத்தில் இட்ட பதிவு கூட அப்டேட் ஆகவில்லை என்றால் என்ன காரணம் என்று தெரியவில்லை.

    (இளைய பாரதத்தைப் படிக்கிற நாலு பேருக்கும் செய்தி சரியாப் போய் சேராதோ?)

    பதிலளிநீக்கு