Search This Blog

புதன், 26 மே, 2010

இவிங்களை திருத்தவே முடியாதா?

ஒருவனுடைய உடைமையை வலுக்கட்டாயமாக கவர்ந்து செல்வதை திருட்டு, வழிப்பறி, கொள்ளை என்று பல பெயரிட்டு அழைக்கிறார்கள்.இவை அனைத்துமே சட்டப்படி தவறுதான்.
ஆனால் திருவாளர் பொதுஜனம் நாள்தோறும் பல சுரண்டல்களைத் தாங்கிக்கொண்டும் பொதி சுமந்துகொண்டே இருப்பதற்கு பழகியாயிற்று. இப்போது நான் பட்டியலிடப்போகும் கொள்ளைகள் எந்த சட்டப்படி சரி?...ஏனென்றால் இந்த தவறுகளை செய்பவர்கள் யாரும் தண்டிக்கப்படுவதே இல்லையே? (இதெல்லாம் தப்புன்னு நீ எப்படி சொல்லலாம்னு என்னைய தண்டிக்க புறப்பட்டுடக்கூடாது.நல்ல புள்ளையா இதையெல்லாம் படிச்சுட்டு புலம்பிட்டு உங்க வேலையைப் பார்க்கப்போயிடணும். ஏன்னா இந்தியா பணக்கார நாடு. அவங்களுக்குதான் தன் இஷ்டப்படி வாழ உரிமை இருக்கு.எழுத்துப்பூர்வமாக இல்லாத சட்டம் இதுதான்.)

ஆம்னி பஸ் கொள்ளைக்காரர்கள் நலனுக்காக உருப்படியாக நாலு ரயில்களை இயக்குவது கிடையாது. அதிலும் இரட்டை ரயில் பாதையை அமைத்து விட்டால் சாமானிய மக்கள் நன்மை அடைந்து விடுவார்கள் என்பதால் கண்ணும் கருத்துமாக அதற்கு சாத்தியம் அவ்வளவு சுலபம் இல்லை என்று வருடக்கணக்காக பேட்டி கொடுத்தார்கள், கொடுக்கிறார்கள், கொடுப்பார்கள்.

ஆனால் நாலு வழிப்பாதை, ஆறுவழிப்பாதைக்கு மட்டும் நிலம் கையகப்படுத்தமுடியுதே...அது எப்படின்னுதானே கேட்டீங்க?...அடப்போங்க சார், ரோடுன்னா எல்லா வண்டியையும் நிறுத்தி சுங்கம் வசூலிக்கலாம். ரயிலை நிறுத்தி உங்க ஒவ்வொருத்தர் பர்த்துலயுமா வந்து கொள்ளை அடிக்க முடியும்?

மதுக்கடைகளை அரசாங்கம் எடுத்துகிட்ட மாதிரி சுங்கம் வசூலிக்கிறதையும் அரசாங்கமே எடுத்துகிட்டா கொஞ்சமாச்சும் திருப்தியா இருக்கும். பரவாயில்லை. நம்ம கிட்ட கொள்ளை அடிக்கிறது மன்னனாச்சே...மக்களுக்கும் நன்மைதானேன்னு சமாதானமாகலாம். நாலு கரைவேஷ்டி ஆளுங்க பேசி வெச்சுகிட்டு அம்பதாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து ஐநூறு கோடி அளவுக்கு கொள்ளை அடிக்கிறது என்னை மாதிரி சாதாரண ஆளுங்களுக்கும் புரியுறதால வர்ற வினைதான் இந்த புலம்பல்.

தனியார் கல்வி நிறுவனங்கள்ல அரசு கட்டணம் நிர்ணயம் செய்ததை ஒத்துக்காத வியாபாரிங்க, ஆசிரியர்களுக்கு ஒரு மாசம் சம்பளம் கொடுக்குறதுக்கே இந்தப் பணம் காணாதுன்னு புலம்புறாங்க. இன்னும் பல பள்ளிக்கூடத்துல ஆசிரியருக்கு ரெண்டாயிரம் ரூபாய்க்கு மேல சம்பளம் கிடையாது. டியூஷன்னு சொல்லி ஒரு பையனுக்கு சில நூறு தனியா கறந்துகிட்டு வாத்தியாருக்கு போனா போகுதுன்னு ஓவர்டைம்னு எதோ கொஞ்சம் காச கண்ணுல காட்டுறாங்க.
எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணு பொறியியல் கல்லூரியில விரிவுரையாளரா போனாங்க. எட்டாயிரம் ரூபாய்தான் சம்பளம். ஆனா இருபதாயிரத்துகிட்ட ஒரு தொகைக்கு வவுச்சர்ல கையெழுத்து வாங்கினதா சொன்னாங்க. அப்ப வருமான வரியைக் கட்டுறது யாருன்னு கேட்டேன். நிர்வாகம் ரொம்ப நேர்மையா, இந்த பொண்ணுக்கு பான் கார்டு வாங்கி அவங்களே, வரியையும் கட்டிடுவாங்களாம்.

இதுனாலதான் கல்விவியாபாரிங்க நாங்க ரொம்ப நல்லவங்கன்னு சொல்லிக்கிறாய்ங்களோ.

ஆனா இவங்களை மட்டும் குத்தம் சொல்றது தப்புன்னு எனக்கே புரியுது. கல்வியை வியாபாரிங்ககிட்ட ஒப்படைச்சுட்டு, கலகத்துக்கு காரணமான மதுவை அரசாங்கம் எடுத்துகிட்டப்பவே சாமானிய மக்களுக்கு நியாயம் கிடைக்காதுன்னு தெரிஞ்சுடுச்சு.

இன்னும் பல லட்சம் கிராமங்கள்ல குடிதண்ணீருக்கு வழி இல்லை. ஆனா கொக்கோ கோலா, பெப்சி கம்பெனிக்காரங்களுக்கும், மினரல் வாட்டர் வியாபாரிங்களுக்கும் எங்கிருந்துதான் தண்ணீர் கிடைக்குதுன்னு புரியவே மாட்டெங்குதுங்க.

ஆம்னி பஸ் அடாவடி ஒரு பக்கம்னா, எந்த பஸ்சுலயும் பாகுபாடு இல்லாம இன்னொரு விஷயம் நடக்குது. அதுதான், காட்டுக்குள்ள இருக்குற மோட்டல். அங்க அஞ்சுரூபா பொருள் எல்லாம் இருபது ரூபா, கூவத்தை விட மோசமா இருக்குற இடத்துக்குள்ள சிறுநீர் கழிக்க அஞ்சு ரூபா, அந்த இடத்துக்கு போகாம சாலை ஓரத்துக்குப் போனா மண்டையை உடைக்க ரவுடிங்க அப்படின்னு ரொம்ப பேருக்கு சுயவேலைவாய்ப்பை பெருக்கியிருக்காங்க.

இவிங்களைத் திருத்தவே முடியாது அப்படின்னு நான் நினைச்சுகிட்டு இருக்கும்போது இன்னொரு விஷயத்தையும் கவனிச்சேன்.

திருப்பத்தூர்-புதுக்கோட்டை சாலையில கீழச்சீவல்பட்டின்னு ஒரு ஊர் இருக்கு. சில பேருந்துகள் பிரதான சாலையை விட்டு நாலு கிலோமீட்டர் தூரம் உள்ளுக்குள்ள போய்ட்டுதான் வரும்.  அங்க ஒரு பள்ளிக்கூடத்துடைய அருமை பெருமையை சொல்லி நிறைய இடத்துல போஸ்டர் ஒட்டியிருந்தாங்க. முக்கியமா எந்த இடம்னு தெரியுமா?

பயணிகள் நிழற்குடை, பேருந்துகளின் கால அட்டவணை, அடுத்த ஊருக்கு எவ்வளவு தூரம்னு போட்டிருந்த போர்டு.

நல்ல புத்தியைப் போதிக்க வேண்டிய பள்ளிக்கூடத்து விளம்பர போஸ்டரே இப்படி தாறுமாறா ஒட்டியிருந்தா அந்த பள்ளிக்கூடத்துல படிக்கிற பசங்களுக்கு பாடப்புத்தகத்துல இருக்குறத  தவிர வேற நல்ல ஒழுக்கத்தை சொல்லித்தருவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்த சிக்கலுக்கெல்லாம் மிக முக்கிய காரணம் என்னன்னு இந்தியன் படத்துல ஒரு வசனம் எனக்கு புரிய வெச்சிடுச்சு.
நிழல்கள் ரவியைக் கொல்லும்போது கமல்,"முன்னேறிய நாடுகளிலும் லஞ்சம் இருக்கு. ஆனா அங்க எல்லாம் கடமையை மீறுறதுக்குதான் லஞ்சம். ஆனா இங்க கடமையை செய்யுறதுக்கே லஞ்சம்."என்று சொல்வார்.
******

4 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. ஊதுற சங்க ஊதுவோம், விழுவுரவங்க காதில விழட்டுமுன்னு எங்க ஊர்ல ஒரு பழ மொழி உண்டு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. i love ur post ...i too want to write same like this...it's right....best thinking...more kisses{i am not gay}..


    note ...i love kamaraj ...the real god...

    பதிலளிநீக்கு
  3. இவனுங்க எங்க திருந்தறதுக்க... செவிடன் காதுல சங்க ஊதுற கதைதான் தல...

    பதிலளிநீக்கு
  4. நிழல்கள் ரவியைக் கொல்லும்போது கமல்,"முன்னேறிய நாடுகளிலும் லஞ்சம் இருக்கு. ஆனா அங்க எல்லாம் கடமையை மீறுறதுக்குதான் லஞ்சம். ஆனா இங்க கடமையை செய்யுறதுக்கே லஞ்சம்."என்று சொல்வார்.


    ...... உண்மைதான்...... மக்களுக்கு விழிப்புணர்வு வந்து ஒற்றுமையுடன் போராட வேண்டும்..... But it is survival of the fittest range kku poikkittu irukku....... mmmmm....

    பதிலளிநீக்கு