Search This Blog

சனி, 17 ஏப்ரல், 2010

கமல்ஹாசன் மீது தினமலருக்கு என்ன கோபம்?

எல்டாம்ஸ் ரோடுக்கு நடிகர் கமல்ஹாசனின் பெயரை வைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. இதைக் கண்டித்து 11.04.2010 அன்று வெளிவந்த தினமலர்-வாரமலரின் இது உங்கள் இடம் பகுதியில் ஒருவர் கடிதம் எழுதி ஆயிரத்து ஐநூறு ரூபாய் பரிசும் வாங்கியிருக்கிறார்.

அந்தக் கடிதம்,

சமீபத்தில் நடந்த ஒரு சினிமா கூட்டத்தில், சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள எல்டாம்ஸ் சாலைக்கு, நடிகர் கமலஹாசன் பெயரை வைக்க வேண்டும் என்று வழிமொழிந்து, முன்மொழிந்து, முதல்வரிடம் கோரிக்கையும் வைக்கும் அளவிற்கு போயிருக்கின்றனர். நடிகர் கமலஹாசன், நாட்டுக்கு உழைத்த தியாகியா, இல்லை உலகம் போற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமா? அவர் ஒரு சினிமா வியாபாரி. திறமையானவர்; மறுப்பதற்கில்லை.
நடிகர் கமலஹாசனின் வீட்டிற்கு, நான்காவது வீடு என்றால், உடனே, அடையாளம் கண்டு கொள்கின்றனர் என்று, 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில், ஒரு பெண் வழிந்திருக்கிறார்.
தன் சொந்த வீட்டை விற்று, புரஜெக்டர் வாங்கி, கேரளாவில் கிராமம் கிராமமாக தூக்கிச் சென்று மக்களுக்கு இலவசமாக சினிமா போட்டு காட்டினாரே ஜான் ஆப்ரகாம்... அவர் போல கமலஹாசன் மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா!
மனித குலத்துக்கு முரண்பாடான சிந்தனைகளை விதைக்கும் கூட்டத்தில் இவரும் ஒருவர். அவ்வளவுதான்!
'முள்ளும் மலரும்' என்ற அருமையான படமும், 'பதினாறு வயதினிலே' படமும், தமிழ் சினிமா வரலாற்றை, திசை திருப்பிய போது, மார்பை காட்டி ஏவி.எம்., கைக்குலுக்கலுடன், 'நான் தான் சகலகலா வல்லவன்...' என குலுக்கி, மீண்டும் படவுலகை கமர்ஷியல் பாதைக்கு திருப்பியவர். தேவைப்படும் போது இலக்கியவாதிகளின் (இதில் போலிகளும் அடக்கம்) தோளில் கைப்போட்டு, 'பீ அள்ளும் தாயம்மாள்...' என்று குமுத குழுமத்தில் கவிதை எழுதி, தன்னை என்னமோ தலித்களின் தலைவன் போல் காட்டிக் கொண்டவர்.
ஒரு தெருவிற்கு பெயர் வைக்கும் அளவுக்கு, இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
வியாபார படங்கள் வெளியிட்டு, 'துட்டு பார்க்கும்' ஜோலியை செய்து கொண்டிருக்கும் இவரின் பெயரை, தெருவிற்கு வைக்க இவர் என்ன, வாஜ்பாய் தேடிப் போய் காலில் விழுந்த சமூக சேவகியா?
இந்த வேகத்தில் போனால்... குஷ்பு தெரு, நயன்தாரா தெரு, சிவக்குமார் தெரு, விவேக் தெரு, வடிவேலு தெரு, ரம்பா தெரு, தமன்னா தெரு, ஜீவா தெரு, சின்னத்திரை சிங்காரிகள் தெரு, சரத்குமார் தெரு, ராதிகா தெரு என்று வைக்கக்கோரி, கோரிக்கை வைத்துக் கொண்டே போவர். தமிழ்நாடு எந்த அளவிற்கு போய்க் கொண்டிருக்கிறது என்பது, இவர்களது குறுகிய சிந்தனையில் பட்டவர்த்தனமாக தெரிகிறது.
— ஏ.ஸ்ரீதரன், கே.கே.நகர்.

இதில் உதாரணமாக சொல்லியிருக்கும் முள்ளும் மலரும் படத்தின் படப்பிடிப்பு 99 சதவீதம் முடிந்த நிலையில் தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லாமல் மீதமுள்ள படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்ய மறுத்துவிட்டாராம்.

சரத்பாபுவும் ஷோபாவும் சந்திக்கும் முக்கியக் காட்சியும் செந்தாழம்பூ பாடலும்தான் படம்பிடிக்க வேண்டிய காட்சிகள். படத்தின் முக்கிய ஜீவனான இந்தக் காட்சிகளை எடுக்காமல் படத்தை ரிலீஸ் செய்தால் என்ன ஆகுமோ என்று இயக்குனர் மகேந்திரன் தவித்து நின்றபோது மூவாயிரம் அடி பிலிமுக்கு ஏற்பாடு செய்து படப்பிடிப்பை நடத்த உதவியது கமல்ஹாசன்தான். இதை இயக்குனர் மகேந்திரனே "நானும் சினிமாவும்" என்ற நூலில் எழுதியிருக்கிறார்.

இது தவிர ஹீரோ என்றால் சூப்பர்மேனாக மட்டும்தான் இருப்பார் என்று இருந்து வந்த தமிழ் சினிமாவின் இலக்கணத்தை ஓரளவாவது உடைத்த ஆளாக கமல்ஹாசன் இருப்பார். அதற்காக அவர் பெயரை எல்டாம்ஸ் ரோடுக்கு வைக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை.

சினிமாவை பின்னுக்கு இழுத்தது என்று இவரை மட்டும் சுட்டிக்காட்டி இவ்வளவு காரசாரமான கடிதம் ஏன் என்பதுதான் என்னுடைய கேள்வி. மசாலா வாசனையில் ரசிகர்களை மயக்கி கோடி கோடியாக சம்பாதிக்கும் பெரியதலைகள் யாரும் தங்கள் படங்களை பரிசோதனை முயற்சியாக செய்ய வேண்டாம். ஆண்டுக்கு இப்படி ஒரு படம் தயாரிக்க கூட மனமில்லாமல் இருக்கிறார்கள். மக்கள் பணத்தைக் கொள்ளை அடிப்பவர்களுக்கு கூட மசாலா படங்கள் தயாரிப்பதில்தான் குறி.
 அவர்களைப் பற்றி எழுதினால் பின்விளைவுகள் அதிகமாகவே இருக்கும் என்று எழுதியவருக்கும் தெரியும். ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்தவர்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். அதனால்தான் பெயர்களைக் குறிப்பிடவில்லை.

12 கருத்துகள்:

  1. தினமலரையெல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்கப்பு.அந்துமணிக்கு கமலை கண்டால் ஆகாது. அவரு ஒரு அரை வேக்காடு.என்னவோ இவரை மதிச்சு, எல்லாப்பெண்களும் ஆலோசனை கேக்கிறாப்ல எழுதுவாரு வாரமலர்ல. கொஞ்சநாள் முன்னாடி நாறினாங்களே.மறந்துட்டீங்களா?(சன் டிவியில்)

    பதிலளிநீக்கு
  2. also i have seen in most of the days we can see letters both supporting and criticizing some of the articles in "ungal pakkam" experiences. moreover i have stopped reading tht newspaper aftr seeing the story"ella povum enake".

    பதிலளிநீக்கு
  3. ஆறு வருஷத்துக்கு ஒரு பொம்பளைய மாத்திகிட்டு இருக்கற கமல் போன்ற ஒரு பொறம்போக்கின் பெயரையா சாலைக்கு வைப்பது. அதை விட வெட்கக்கேடு வேறு இல்லை. அவன் வாழும் வாழ்க்கைக்கு அதிமேதாவித்தனமான ஒரு விளக்கம் அளிப்பான்.

    பதிலளிநீக்கு
  4. என்னைக் கேட்டா இந்த தினசரிகள் எதையுமே சீரியஸா எடுத்துக்காதீங்க..

    பதிலளிநீக்கு
  5. விடுங்க அப்பு......! அவரவர், அவங்கவங்க புளப்பை நல்லா பாக்குறாங்கன்னு தெரியுது......

    பதிலளிநீக்கு
  6. கமல்ஹாசன் என்றில்லை எந்த பிரமுகரின் பெயரையும் தெருவுக்கு வைப்பது கண்டிக்கதக்கது.

    பதிலளிநீக்கு
  7. அவர் சாதனையாளர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதனால் எல்லாம் ஒரு இடத்துக்கு அவர் பெயரை வைக்க வேண்டுமா என்ன? இதனால் கமலுக்கு எந்த புதிய பெருமையும் வந்துவிடப் போவதும் இல்லை

    பதிலளிநீக்கு
  8. ஹாஹா. இதெல்லாம் ஒரு விஷயம்னு, சின்ன பெட்டி நியூஸ்க்கெல்லாம், இலவச விளம்பரம் கொடுக்காதீங்க!

    அது சரி, கடிதம் எழுதினவரை விட்டுட்டு, நீங்க யாரையோ தாக்குறீங்களே, இது நியாயமா?

    அவங்களுகு தெரிஞ்சதை, அவங்க பண்றாங்க! தெரியாததை முயற்சி பண்ணி, சுட்டுகிட்டாலும் குறை சொல்வீங்க!

    சாதனைகளை பட்டியிலிடுவது என்பது, தொகுப்பவரைப் பொறுத்தது. எந்த கலைஞனையும், இன்னொருவரோடு ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாக இருக்காது. ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு விஷயத்திலும் சிறந்தே இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  9. செல்வன் சொன்ன கருத்தே என்னதும்.
    இது போன்ற நடிகர் நடிகைகளின் பெயர் வைப்பது சிலை வைப்பது போன்றவை கண்டிக்கத்தக்கது.

    பதிலளிநீக்கு
  10. இன்னும் தினமலர் - வாரமலர் படிக்குற அளவுக்கு அப்பாவியா நீங்க???!!!!!!!

    பதிலளிநீக்கு
  11. kamal is kamal.kamal is best.Ex.bhanumathi ramakrishna salai,sivajiganesan salai alraedy there.same cine page love.sivaj sir actor,producer,movie mall owner.madam bhanumathi actor,playback singar.BUT,above without sence groups listen...actor,singar,baby artist,asst dance master,producer,costume design,story.dioal,screenplay,direction,social service & reporter and others....no end for any ART...

    பதிலளிநீக்கு