Search This Blog

வியாழன், 4 மார்ச், 2010

வராக்கடன் திடீரென திரும்பக் கிடைத்தால்...

வராது என்று முடிவு செய்து நஷ்டக்கணக்கில் எழுதிய பணம் திரும்ப வசூலானால் அதை லாபம் என்று குறிப்பிட்டுதான் வரவு வைப்பார்கள்.எனக்கும் அவ்வப்போது அந்த நிலை வருவதுண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பதினைந்து கோயில்களுக்கு சென்று ஓரளவு தலபுராணங்களை சேகரித்தேன்.அவை அவ்வப்போது சில பத்திரிகைகளில் பிரசுரமானதும் உண்டு.அப்படி நான் மொத்தமாக தினகரன் ஆன்மீக மலருக்கு அனுப்பியவைகளில் ஐந்து மட்டும் 2008ல் மூன்று மாதங்கள் பிரசுரமாயின.

பிறகு அவ்வளவுதான் என்று நான் நினைத்திருந்தபோது தினகரன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆன்மிக மாத இதழில் இதுவரை மூன்று தல வரலாறுகள் பிரசுரமாயிருப்பது வராக்கடன் வசூலான கதைதானே.

இங்கே இருப்பது மார்ச் 2010 இதழில் பிரசுரமான கட்டுரை.

ஆனந்தவிகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாஷிகா கேமராவை வைத்து புகைப்படங்கள் எடுத்தேன்.அப்போதுதான் அந்த பதினைந்து கோயில்களையும் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
(படத்தின் மீது க்ளிக் செய்தால் தெளிவாகப் படிக்கலாம்.)இதே கட்டுரை பிறகு காலைக்கதிர் நாளிதழின் இணைப்பாக வெளிவரும் ஆன்மிககதிர் இதழிலும் வேறு வடிவில் பிரசுரமாகியிருந்தது.தினமலர் இணையதளத்திலும் நான் அனுப்பிய தகவல்கள்தான் இடம்பெற்றிருக்கின்றன.(மூலவருடைய புகைப்படத்தைப் பார்த்தால் தெரியும்.)  ஆனால்  copyright தினமலருக்காம்.அது சரி...பொது வாழ்வில் இதெல்லாம் சாதாரணமப்பா...

அமுதசுரபியில் முத்திரைக்கதை, தமிழ்நாடு அரசு குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையத்தின் சிறுகதைப்போட்டியில் முதல்பரிசு,தினமலர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப்போட்டியில் இரண்டு முறை ஆறுதல்பரிசு - இவை உட்பட பத்திரிகைகளில் பிரசுரமான சில படப்புக்களை திருவாரூர் டாக்கீஸ் வலைப்பூவில் வைத்திருக்கிறேன்.

7 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள். மனம் தளராமல் உழைக்கவும். அதற்கான அங்கீகாரம் நம்மை தேடி வரும்.

    பதிலளிநீக்கு
  2. அண்ணா, நீங்க பெரிய ஆளுங்கண்ணா ......... பெரிய பெரிய பத்திரிகையில் எல்லாம் கால் பதிச்சிட்டு தன்னடக்கத்துடன் நிக்கிறீங்க ...... நீங்க இமய மலை - நாங்க பரங்கி மலை.


    ஆன்மீக படங்கள் செய்திகள் எல்லாம் இந்த நேரம் ரிலீஸ் பண்ணாதீங்க அண்ணா. காட்சி நேரம் சரி இல்லை. கேமரா வீடியோ எல்லாம் பூட்டி வச்சுடுங்க. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

    பதிலளிநீக்கு
  3. கட்டுரை நன்று. பல பரிசுகள் பெற்றமைக்கும் தொடர்ந்து பல வெல்லவும் என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. என்றும் ஒரு நாள் உங்கள் உழைப்புக்கு தகுந்த ஊதியம் உங்களை தேடி வரும் .வாழ்த்துக்கள். மனம் தளராமல் உழைக்கவும்.

    பதிலளிநீக்கு
  5. சரவணன், எந்த பத்திரிகையும் இப்படித்தான். நான் அடுத்த சனிக்கிழமை வெளியிட இருக்கும் புதிய தமிழ் இணைய பத்திரிகைக்கு நீங்கள் உங்கள் படைப்புக்களை அனுப்ப வேண்டும் முகவரி editor.vezham@gmail.com .

    நன்றி
    LK

    பதிலளிநீக்கு
  6. நல்ல உழைப்புக்கு கிடைத்த ஊதியம் நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு