Search This Blog

புதன், 24 மார்ச், 2010

விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு - என் பார்வையில்...

என்ன இது ஒருத்தனையே காட்டி அறுத்துகிட்டு இருக்கானுங்க? விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைப் பார்த்து இப்படி கேட்டது வயதான பெண்மணி ஒருவர். நம்மில் பலருக்கு படம் என்றால் பழைய படங்கள் போல பெரிய குடும்பம் அல்லது இப்போதைய கே.எஸ்.ரவிக்குமார் படம் போல இருக்க வேண்டும் என்று மனதில் ஒரு பிம்பம் வைத்திருக்கிறோம்.
இப்போது காதலித்துக்கொண்டிருப்பவர்களும் காதலிக்க முடியவில்லையே என்று யோசிப்பவர்களும் பார்த்து ஃபீல் பண்ண வைத்தது வி.தா.வ படம். என்ன தொழில் செய்வது அல்லது என்ன வேலைக்குப் போவது (வேலையே கிடைக்காதவர்களுக்கு அது மட்டும்தான் பெரிய பிரச்சனை.) என்று நிறைய ஆண்கள் இன்று வரை தீர்மானமான முடிவு எடுக்காமல்தான் எதிலோ ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

பெண்களுக்கு திருமணம் அல்லது காதல் விஷயத்தில்தான் இந்த தடுமாற்றம் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.(பெண்ணின் மற்ற விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் ...............................களைப் பற்றி நான் சொல்வதற்கில்லை.)

எங்க அப்பா உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா நான் ரெடி. ஆனா நான் உங்களை விரும்புறதா சொல்ல மாட்டேன். என்று சொன்ன ஒரு பெண்ணை நான் பார்த்திருப்பதால் படத்தில் ஜெஸ்ஸியைப் பார்த்ததும் அதில் த்ரிஷா தெரியவில்லை. நிறைய பெண்களின் பிம்பமாகத்தான் பார்க்க முடிந்தது.

என்ன செய்யுறது...பத்து வயசுல இருந்து வேலை நேரம் போக கொஞ்சம் கொஞ்சம் படிப்புன்னு இருந்ததால ஊருல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ..................யை லவ் பண்ணினேன்னு கேட்க மனசு ரெடியாகலை.

இந்த மாதிரி ஒரு பொண்ணு லவ் பண்றதுக்கு கூட கொடுப்பினை வேணும்.அப்படின்னு பலரையும் புலம்ப வெச்சதுதான் இந்த படத்தோட வெற்றி.

ஆனா அந்த பொண்ணு ஜெஸ்ஸியோட கேரக்டர்...சான்சே இல்லை.

இந்தப் படம் வசதியான மற்றும் மிடில் கிளாஸ் இளைஞர்கள் ஒரு வித ஆர்வத்தோடயும் வறுமைக்கோட்டு லெவல்லயும் அதுக்கு கீழயும் இருக்குற இளைஞர்கள் ஐம்பது வருஷத்துக்கு முன்னால காரைப் பார்த்தமாதிரியும்தான் இந்தப் படத்தைப் பார்த்திருப்பாங்க.

ஏன்னா இவங்க வாழ்க்கையில வர்ற காதல் மோதல் மாதிரியான விஷயங்களை நிறைய தமிழ்ப்படங்கள் மித மிஞ்சிய மேக்கப்போடதான் காட்டியிருக்கு.

அடுத்து ரிலீசாகப்போற அங்காடித்தெரு - ரங்கநாதன் தெருவுல இருக்குற பளபளப்பான கடைகளில் இருக்குற ஊழியர்களின் வலி நிறைஞ்ச வாழ்க்கையை சொல்லும்னு நினைக்கிறேன். பார்ப்போம்.
ஒண்ணு படம் வந்து பல நாளைக்கப்புறம் விமர்சனம் எழுதுற...இல்ல படம் ரிலீசாகுறதுக்கு முன்னால டிரெய்லர் விட்டுப் பார்க்குறன்னு சொல்லி திட்டாதீங்க. நாம நினைக்கிறத நினைச்ச நேரத்துல எழுதி இம்சை கொடுக்குறதுக்குதானே பிளாக் இருக்கு?

5 கருத்துகள்:

  1. சர்தாங்க. அங்காடி தெருவில நடிச்சிருக்கிறவங்க, உங்களுக்கு தெரிஞ்சவங்களா? பில்ட்-அப் இருக்கே, அதான் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. நானும் சென்னையில போய் சரியான சாப்பாடு இல்லாம தூங்க இடம் இல்லாம இடம் கிடைச்ச பிறகும் தூக்கம் இல்லாம தவிச்ச நாட்கள் நினைவுக்கு வந்தது.

    உண்மையில் வி. தா. வ படம் பார்த்த பிறகு பழைய நினைவுகளுடன் இழந்த வசந்த காலங்கள் பற்றி எழுத தோணுச்சு. படம் வந்து நாலாயிட்டதால அங்காடி தெருவுக்குள்ள எட்டிப் பார்த்துட்டேன்.அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  3. வி.தா.வ என்னை பாதித்த படம். அதான் மூனு தபா பாத்துருக்கேன்..

    பதிலளிநீக்கு
  4. இடுகையை முடித்த விதத்தை ரசித்தேன்:))!

    பதிலளிநீக்கு
  5. புலிகேசி,

    Installation of Love Slovenian movie ஒரு தபா பார்த்தா போதும்.

    பதிலளிநீக்கு