Search This Blog

சனி, 6 மார்ச், 2010

பட்டத்துடன் பறக்கும் உயிர்...

வானொலியில் தொகுப்பாளராக இருக்கும் கண்மணி, வடசென்னைப்பகுதியில் மாஞ்சா தடவிய நூலால் கழுத்து அறுபட்டு மறுபிறவி எடுத்த செய்தியை மார்ச் 1-15 தேதியிட்ட தேவதை இதழில் படித்தேன். பட்டம் விடுவது சட்டப்படி குற்றம் இல்லை என்பதால் இந்த மாஞ்சா தடவிய நூல் கலாச்சாரத்தை தடுக்காமல் இருக்கிறார்களாம்.
நம் பதிவுலக நண்பர் புலவன் புலிகேசி மேற்குமாம்பலம் பகுதியிலேயே மாஞ்சா நூல் வில்லங்கத்தால் ஆபத்தில் சிக்கி மீண்டிருக்கிறார்.அவர் விரைவில் குணமடையட்டும்.

அரசியலில் பெரிய புள்ளியாக இருப்பவர்கள் வீட்டில் மாஞ்சா நூலால் இழவு விழுந்தால்தான் சட்டத்திருத்தம் கொண்டுவருவார்களா?
******
வெறிநாய்க்கடியால் ஏழைகள் பலர் உயிரிழப்பது தொடர்கதையாகிக் கொண்டிருக்கும்போது சில அரை லூசுகள் நாய் உயிர் ரொம்ப முக்கியம் என்று கோர்ட்டில் தடைவாங்கி வைத்திருக்கின்றன.சில இயற்கை வளங்களை சேதாரப்படுத்தாமல் வாழமுடியும் என்ற நிலை இருப்பதை பொருட்படுத்தாமல் அவைகளுக்கு வேட்டு வைக்கிறோம்.

மனித உயிர்களுக்கு ஆபத்து என்று உறுதியாக தெரிந்த பிறகும் அதை தடை செய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை.அதுசரி... டென்னிஸ் பந்தில் கூட கிரிக்கெட் விளையாட விடாமல் மெரினா பீச்சை அழகு படுத்துவர்களிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்கமுடியும்.

ஒரு ஸ்மால் டவுட்டு....

இலவசம்னு குச்சி ஐசை கொடுத்துட்டு மது வியாபாரத்தின் மூலம் கோவணத்தையும் உருவிடுறவங்க கிட்ட போய் ஆதங்கமா பேசுற என்னைய லூசுன்னு நினைப்பாங்களோ...

4 கருத்துகள்:

  1. // டென்னிஸ் பந்தில் கூட கிரிக்கெட் விளையாட விடாமல் //
    ஏனுங்க, வேகமா வர்ற டென்னிஸ் பந்து ஒரு குழந்தை மேல படக்கூடாத இடத்துல பட்டாலும் ஆபத்துதானே? கடற்கரையில கைப்பந்து, கபடி, ஓடியாடுதல் இப்படி விளையாடலாமே. மத்தபடி நீங்க சொல்லுற மாஞ்சா ஆபத்து பெரிய இடத்துக் கழுத்தை அறுத்தாதான் தொலையும்.

    பதிலளிநீக்கு
  2. நண்பரே காயங்கள் இப்போது சரியாகிக் கொண்டிருக்கிறது. நலம்..இந்த அரசாங்கத்தைப் பத்தி பேசி எழுதி அலுத்துப் போச்சு தல...இவனுங்களுக்கு இப்ப நித்யனந்தர்தான் நல்ல விளம்பரம்...

    //இலவசம்னு குச்சி ஐசை கொடுத்துட்டு மது வியாபாரத்தின் மூலம் கோவணத்தையும் உருவிடுறவங்க கிட்ட போய் ஆதங்கமா பேசுற என்னைய லூசுன்னு நினைப்பாங்களோ...//

    ஜாக்கிரதையா இருங்க தல..சொன்னாலும் சொல்வானுங்க

    பதிலளிநீக்கு
  3. ஆதங்கப்பட மட்டுமே இயலுகிறது:(!

    பதிலளிநீக்கு
  4. னு குச்சி ஐசை கொடுத்துட்டு மது வியாபாரத்தின் மூலம் கோவணத்தையும் உருவிடுறவங்க கிட்ட போய் ஆதங்கமா பேசுற என்னைய லூசுன்னு நினைப்பாங்களோ...


    ...............நினைக்கிறது என்ன? முடிவே பண்ணிடுவாங்க. அரசியல் நடப்பு அப்படி.

    பதிலளிநீக்கு