Search This Blog

திங்கள், 15 பிப்ரவரி, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழலும் பயிற்சி முடித்த ஆசிரியைகளும்...

மிக அதிகபேர் எழுதக்கூடிய தேர்வுமுடிவுகள் வெளிவந்த நேரத்தில் கூட இவ்வளவு பரபரப்பு இருப்பது சந்தேகம்.ஆனால் அவற்றுக்கு உரிய சான்றிதழ்கள் கிடைத்ததில் இருந்து ஒரு வாரகாலத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் நிரம்பி வழியும்.
பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கியபிறகு மாணவர்களும் மாணவிகளும் அதைப்பதிவு செய்வதற்குள் வெந்து நொந்துவிடுகிறார்கள்.இப்போது இந்தப் பட்டியலில் புதியதாக சேர்ந்திருக்கும் கோர்ஸ், ஆசிரியர் பயிற்சி படிப்பு.

சில வாரங்களுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் ஓரிரு தினங்களுக்கு முன்புதான் சான்றிதழ்களை வழங்கியிருப்பார்கள் போலிருக்கிறது.

இன்று திருவாரூரிலும் மாணவிகள் மிக நீ............ண்ட வரிசையில் காத்திருந்தார்கள்.பொன்னை (பொண்ணு இல்ல) வைக்கிற இடத்துல பூவை வைக்கிறதா சொல்லுவாங்க. ஆனா பல பொண்ணுங்க டயட் அது இதுன்னு ஐம்பது கிலோ எடை இருக்கவேண்டிய நேரத்துல முப்பத்தஞ்சு கிலோதான் இருப்பாங்க.(முப்பது சதவீதம் தள்ளுபடி?)

இந்த லட்சணத்துல பல மணி நேரம் காத்திருத்தல் அவங்களை மேலும் பலவீனப்படுத்தும். கணிணி வந்த பிறகு இப்படி கால் கடுக்க காத்திருக்குறது நேரத்தைக்கொல்றது மாதிரி.

பதிவு செய்யுற வரிசையை வெச்சுதான் வேலைக்கு கூப்பிடுவாங்களாம். என்ன கொடுமை சார் இது.ஒரு லட்சம் கோடி ரூபா காண்ட்ராக்டை ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொடுத்துட்டு முதல்ல வந்தவங்களுக்கு கொடுத்துட்டோம்னு ரொம்ப கூலா சொன்னாங்க.இது என்ன சினிமா டிக்கட்டா?அப்புறம் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்.

தேர்வு முடிவு வெளிவந்த தேதியை பதிவு பண்ணின தேதியா எடுத்துகிட்டு அந்த அந்த கல்வி நிறுவனங்களிலேயே போய் எல்லா சான்றிதழ்களையும் பதிவு பண்ணிடலாம். அது கஷ்டம்னா, சுழற்சி முறையில வந்து பதிவு பண்ண வைக்கலாம்.தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதிதான் பதிவு செய்த தேதியா கணக்கு வெச்சுகிட்டா என்ன பிரச்சனை?

இதுல பல நடைமுறை சிக்கல் இருக்குன்னு சொல்லுவாங்க. இஷ்டப்பட்டா எதுவும் சிக்கல் இல்லை. மனசுக்கு விருப்பம் இல்லைன்னாதான் தட்டிக்கழிக்க ஆயிரம் காரணம் இருக்குறதா தெரியும்.

இன்னைக்கு மெகா டி.வி செய்தியில விருதுநகர், திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துல கூடி நின்ன கூட்டத்தைக் காட்டினாங்க. நாளைக்கு பேப்பர்ல எவ்வளவு தள்ளுமுள்ளு, தடியடி, உடம்புல வலு இல்லாம மயங்கி விழுந்தது எத்தனைபேர் - இந்த விவரங்கள் எல்லாம் வரும்.

திருவாரூர்ல கொஞ்ச நாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்துல வேலை வாய்ப்பு அலுவலகமும் இயங்கி வந்தது.மத்திய பல்கலைக்கழகம் இயங்க தற்காலிக கட்டிடம் வேணும்னு அங்க இருந்த எல்லா அரசு அலுவலகங்களையும் தட்டி விட்டதுல திருவாரூர் கால்நடை மருத்துவமனைக்கு எதிர்ல வந்து வேலைவாய்ப்பு அலுவலகம் விழுந்துடுச்சு.

ஒரே நாள் பதிவுமூப்புன்னு ரெண்டுலட்சம் பேர் இருந்தாலும் அதுல தகுதி படைச்சவங்களைத் தேர்வு செய்ய வேறு வழிமுறையை உருவாக்கணுமே தவிர, கோயில்ல பொங்கல் கொடுக்குற மாதிரி முதல்ல பதிவு பண்ணினாதான் வேலை அப்படின்னு சொல்றது மிக மிக முட்டாள் தனம்.

இது மாதிரி பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, ஆசிரியர் பயிற்சி தேர்வு எல்லாம் சனிக்கிழமை எழுதி திங்கள் கிழமை சான்றிதழ் கொடுத்து அவங்க செவ்வாய் கிழமை பதிவுபண்ண கூடிடுறாங்களா?

இல்லையே...ஒவ்வொரு வருஷமும் இந்த கூத்துதானே நடக்குது. ஒரு மா நாடு போட பல மாசங்களுக்கு முன்னாலேயே திட்டமிடுற ஆட்சியாளர்கள், இது மாதிரி நிரந்தர பிரச்சனைகளுக்கு தீர்வு காணுற முயற்சியே எடுக்குறது இல்லையே.

இதுல பொது மக்கள் செய்ய ஒண்ணும் இல்லை.அதிகாரிகளையும் அரசியல்வாதிகள் அல்லது வியாதிகள்தான் ஆட்டி வைக்கணும்.
இந்த கோரிக்கையை வெச்சு இளைஞர்கள் போராடினா, அவங்களையே, பணி செய்ய விடாம தடுத்ததா சொல்லி உள்ள வெச்சிடுவாங்க.

டென்த், பிளஸ்டூவை பள்ளிகள்லேயே பதிவு பண்ற வசதி கொண்டு வந்ததா சொன்னாலும் இந்த முயற்சியும்  தொடர்ந்து நடைபெறணும்.

ஆசிரியர் பணி - புனிதப்பணி. இப்படி எல்லாம் அவங்களை அலைக்கழிச்சா அது நாளைக்கு ஆசிரியரான பிறகு இந்த  கோபம் அவங்களை அறியாமலேயே பிள்ளைங்க மேல திரும்பலாம். இது மாதிரி எல்லாரும் இருப்பாங்கன்னு சொல்லலை. ஒரு சில ஆசிரியர்கள் மோசமா நடந்துக்குறதை பார்த்தா, அவங்க வளர்ந்த சூழ்நிலையும்  பட்ட  வடுக்களும்   கூட இதுக்கு காரணமோன்னு நினைக்கத் தோணுது.

5 கருத்துகள்:

  1. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. ஒரு சில ஆசிரியர்கள் மோசமா நடந்துக்குறதை பார்த்தா, அவங்க வளர்ந்த சூழ்நிலையும் பட்ட வடுக்களும் கூட இதுக்கு காரணமோன்னு நினைக்கத் தோணுது.

    ...........இருக்கலாம். நம்ம ஊரு சிஸ்டம் - "survival of the fittest" உக்கு ஏத்த மாதிரிதான் அமைஞ்சு இருக்கு. வேதனையான விஷயம்.

    பதிலளிநீக்கு
  3. yaarukkaaka employment office il kaaththiruntheerkal. muthal naal maduraiyil nikkuraangka theriyumaa. veliyillaa thindaattam thaan ellaaththukkum karanam. teachers kurai solluvathai vetuvittu suya velai vaaippai erpattuththum kalvi murai tharum arasu amaippom. or uruvaakkuvom.

    பதிலளிநீக்கு
  4. //ஆசிரியர் பணி - புனிதப்பணி. இப்படி எல்லாம் அவங்களை அலைக்கழிச்சா அது நாளைக்கு ஆசிரியரான பிறகு இந்த கோபம் அவங்களை அறியாமலேயே பிள்ளைங்க மேல திரும்பலாம். இது//

    திரும்பிருச்சி தல..ரொம்ப நாளாச்சு..

    பதிலளிநீக்கு
  5. @ புலவன் புலிகேசி

    //ஆசிரியர் பணி - புனிதப்பணி. இப்படி எல்லாம் அவங்களை அலைக்கழிச்சா அது நாளைக்கு ஆசிரியரான பிறகு இந்த கோபம் அவங்களை அறியாமலேயே பிள்ளைங்க மேல திரும்பலாம். இது//

    திரும்பிருச்சி தல..ரொம்ப நாளாச்சு..//

    அப்படியே வடிவேலு பாணியில "திரும்பிடுச்சுப்பா...திரும்பிடுச்சுப்பா..."ன்னு சொன்னா நல்லாத்தான் இருக்கு.ஆனா வேதனைப்பட வைக்கும் விஷயம்.

    பதிலளிநீக்கு