Search This Blog

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

கடைசியில என்னையும் இப்படி மாத்திட்டாங்களே!

முதல்வன் படத்தின் உச்சகட்ட காட்சியில் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றவுடன் அர்ஜூன்,"கடைசியில என்னையும் அரசியல்வாதியாக்கிட்டாங்களே!" என்று மணிவண்ணனிடம் சொல்வார்.
இப்போது "இப்ப என்னையும் ரசிகனாக்கிட்டாங்களே!"என்று நான் புலம்பவேண்டியதாயிடுச்சு.சீரியல் பார்த்து நேரத்தை தொலைச்சு உறவுகளை சிதையவிட்டுகிட்டு இருக்குற நிறைய தாய்மார்களை நான் கிண்டல் பண்ணினேன்.

ஆனா திங்கள் முதல் வியாழன் வரை இரவு பத்துமணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில ஒளிபரப்பாகுற விசாரணை தொடரை இரண்டு வாரமா
பார்த்துகிட்டு இருக்கேன்.

படத்துல ரெண்டு மணி நேரம் வில்லங்கத்தைக் காட்டிட்டு பத்து நிமிஷம் புத்திமதி சொல்றதையே தப்புன்னு சொல்றோம். ஆனா பல நெடுந்தொடர்கள்ல அஞ்சு வருஷம் அவ்வளவு தப்பையும் காட்டிட்டு கடைசி ஒரு எபிசோடுல மெசேஜ் சொல்றோம்னுதான் பில்ட்அப் பண்ணுவாங்க.

ஆனா விசாரணை தொடர் எல்லாமே குட்டிக்குட்டிக் கதைகள்.திங்கள் கிழமை ஆரம்பமாகுற கதை வியாழன் அன்னைக்கு முடிஞ்சுடும்.எல்லாம் கிரைம் ஸ்டோரிதான். ஒவ்வொரு கதையோட முடிவுலயும் ஒரு நல்ல மெசேஜ் உண்டு.இதுக்கெல்லாம் காரணம் யாரு...நம்ம கிரைம் ஸ்டோரி மன்னன் ராஜேஷ்குமார்தான்.

கதை வசனம் இவரே.பொதுவா ராஜேஷ்குமாரோட நாவல்கள்ல பல குற்றவாளிகள் ரொம்பவும் புத்திசாலித்தனமா தப்பு செய்வாங்க.ஆனா கதையோட முடிவுல கண்டிப்பா அவங்க மாட்டிக்கிற மாதிரிதான் எழுதியிருப்பார்.தொலைக்காட்சி தொடர்லேயும் இதே மாதிரிதான் கதை இருக்கு.இந்த சமூக அக்கறைதான் அவர்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சுது.

அப்புறம் ராஜேஷ்குமார் நாவல்களின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களான விவேக்,ரூபலா,விஷ்ணு -இந்த மூணு பேரும் இருக்காங்க.கதைகளோட, இந்த தொலைக்காட்சித் தொடர்ல விஷ்ணுவோட கதாபாத்திரம் பிரமாதமா சிரிப்பை வரவழைக்கிது.அது ஷ்யாம்கணேஷ்னு நினைக்கிறேன். நாளைக்கு கன்பர்ம் பண்ணிடலாம்.இந்த வகையில எழுத்தாளர் ராஜேஷ்குமார், வசனகர்த்தாவா வெற்றி அடைஞ்சுட்டார் அப்படின்னுங்குறது என் கருத்து.

சுஜாதாவின் படைப்பான கணேஷ், வசந்த் கதாபாத்திரங்களும் இதே சுவாரஸ்யத்தை தரும்.

ஆனா எனக்குள்ள ஒரு பயம். இந்த நிகழ்ச்சியின் இடையில மா.மா விளம்பரமும் (அதுதாங்க மானாட, மயிலாட.) ஒரு எசகுபிசகான மருந்துக்கான விளம்பரமும் மட்டும் தான் போடுறாங்க.
ஒண்ணு, அரைமணி நேரத்துல இருபத்து ஏழு நிமிஷம் விளம்பரத்தையும் பிகினிங் டைட்டிலையும் எண்ட் டைட்டிலையும் போட்டு சாகடிக்கிறாங்க. இல்லன்னா இப்படி மிகக்குறைந்த விளம்பரத்தை மட்டும்தான் போடுறாங்க.அதுக்கு நீ ஏன் பயப்படுற அப்படின்னுதானே கேட்குறீங்க...

ஸ்பான்சர் கிடைக்காம நிகழ்ச்சி நின்னுடுமோன்னுதான் நான் பயப்படுறேன்.பார்ப்போம்...விசாரணை எந்த அளவுக்குப்போகுதுன்னு.

******

திருவாரூரில் பார்த்து நான் தற்போது கவலைப்பட்ட விஷயம்.

தேரோடும் நாலு வீதியிலயும் சிமெண்ட் ரோடு போடப்போறாங்களாம்.பூமி பூஜை போட்டு மணல், ஜல்லி எல்லாம் வந்து இறங்கிட்டு.பொக்லைன் வெச்சு ஏற்கனவே இருந்த தார்ரோட்டுல கோடு போட்டு கிழிச்சுகிட்டு இருக்காங்க.

இதுனால வரப்போற நன்மை என்னன்னு எனக்கு தெரியாது.ஆனா சில தீமைகளை மட்டும் இப்ப சொல்லிடுறேன்.

மண் தரை இல்லாம போறதால மழை நீர் பூமிக்குள்ள போற நுண்துளைகள் அடைபட்டுப்போகும்.
வருஷத்துக்கு ஒன்பதுமாசங்கள் அனல் காத்து தாங்காம இந்த தெருவுல இருக்குற அணிக நிறுவனங்கள் வீடுகள்ல குளிர்சாதனப்பெட்டி, மின் விசிறியோட பயன்பாடு ரொம்பவும் அதிகமாயிடும்.

இப்படி பூமி மேல மேல வெப்பமாகுறதுக்கு கோடிக்கணக்குல செலவு பண்ணி திட்டம் போட்டுட்டு குடிமக்கள், வெப்பத்தைக்குறைக்கணும்னு சொல்றாங்க. என்ன கொடுமை சரவணன் இது.

பேசாம நானும் அரசாங்கப்பணிகளை டெண்டர் எடுக்குற ஒப்பந்தக்காரராயிருந்தா இப்போ சுவிஸ் பாங்க்ல பணம் சேர்த்துருக்கலாமோ.

8 கருத்துகள்:

  1. ம் அப்ப கூடிய சீக்கிரம் திருவரூரிலும் தண்ணீர் பஞ்சம் உண்டு...

    பதிலளிநீக்கு
  2. thts toooo good thn antha vivek ah nadikravaru rombah nala nadiparu + he looks good

    பதிலளிநீக்கு
  3. திருவாருர் பத்தி முதல்வரே கவலைப்படலை நீங்க ஏன் தல கலைப்படறீங்க???

    பதிலளிநீக்கு
  4. பேசாம நானும் அரசாங்கப்பணிகளை டெண்டர் எடுக்குற ஒப்பந்தக்காரராயிருந்தா இப்போ சுவிஸ் பாங்க்ல பணம் சேர்த்துருக்கலாமோ.


    ..........அப்படியெல்லாம், ஓபன் ஆ பேசப்படாது. ........he,he,he,....

    பதிலளிநீக்கு
  5. இப்ப எல்லா இடத்துகேயும் சிமண்ட் ரோடு தான்

    பதிலளிநீக்கு
  6. nalla sonniga,,ungala epadi thodarpu koluvathu..adiyaenum thiruvarur than

    பதிலளிநீக்கு
  7. //மண் தரை இல்லாம போறதால மழை நீர் பூமிக்குள்ள போற நுண்துளைகள் அடைபட்டுப்போகும்.//

    உண்மைதான். இந்த விஷயத்தில் தனிவீடானாலும் அப்பார்ட்மெண்ட் ஆனாலும் தங்கள் காம்பவுண்டுக்குள் இருக்குமிடம் முழுவதையும் பராமரிப்புக்காக சிமெண்ட் போட்டு விடுகிறார்கள். சிந்திக்க வேண்டும் எல்லோரும்.

    ஆனால் போக்குவரத்துக்கு என வரும்போது சிமெண்ட் சாலை அத்தியாவசியம் என்றாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  8. விசாரணை பற்றி மிக நன்றாகவே எழுதிருக்கீங்க பாஸ்.. ரெண்டு பேர்ன்னீங்க - ஏழு பின்னூட்டம் இருக்குல்ல... :-)))

    பதிலளிநீக்கு