Search This Blog

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 2

மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் திருவாரூர் அண்ணாசிலைக்கு மாலை போட இறங்கியதும் "வருங்கால முதல்வர் மூர்த்தி வாழ்க..."என்று வெற்றி மிகப்பெரிய குரலில் கோஷம் போட்டதும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்களும் சாலையில் போய்க்கொண்டு இருந்த பொதுமக்களும் ஸ்தம்பித்துப்போனார்கள்.
"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி திகைச்சுப்போயிட்டீங்க? நம்ம முன்னாள் ஜனாதிபதி ஐயாவே கனவு காணுங்கள்னு சொல்லியிருக்கார்.நாங்களும் ஆசைப்படுறதுல என்ன தப்பு?...வருங்கால முதல்வர் மூர்த்தி வாழ்க..." என்று மீண்டும் கோஷம் போட்ட வெற்றி, இன்ஸ்பெக்டர் அருகில் சென்று"சார்...நம்ம முதலமைச்சரே இந்த ஊர்ல படிச்சு வளர்ந்தவர்தானே. ஆசைப்படுறது தப்பு இல்லை. ஆனா அதை நேர்மையான வழியில அடைய முயற்சி செய்யணும்....

இப்படி நாங்க பேசுறதை நீங்க கேட்டுகிட்டு இருக்க காரணம் என்ன? மாணவர்கள் அப்படின்னுங்குற ஒரே தகுதிதான்.இந்த சமயத்துல இந்த மாதிரி எல்லாம் வாழ்ந்து பார்த்துடணும். படிப்பு முடிஞ்சுட்டா அப்புறம் நாங்க உலகத்தோட எந்த மூலையில என்ன செஞ்சுகிட்டு கிடப்போம்னு யாருக்கு தெரியும்?...நீங்களும் உங்களோட மாணவர் பருவத்தை மலரும் நினைவுகளா நினைச்சுப்பார்த்து எங்களை வாழ்த்துங்க சார்..."என்றான்.
இப்போது இன்ஸ்பெக்டர் முகத்தில் புன்னகை.

"நல்லா பேசுற தம்பி...யாருக்கும் துன்பம் செய்யாம உங்க மாணவர் பருவத்தை கொண்டாடுங்க..."என்று அவர் பச்சைக்கொடி காட்டி விடவே, இப்போது வெற்றியின் குரலில் மேலும் உற்சாகம்.

அடுத்த இரண்டு நாட்கள் திருவாரூர் முழுவதும் இந்த மாணவர்களைப் பற்றிய பேச்சுதான்.
***
அடுத்த நாள் வகுப்புக்கு வந்த பேராசிரியர் சாமிநாதன்,"என்னப்பா, வெட்டி...நேத்து ஒரே கலக்கலாமே...அதை எல்லாம் நல்லாவே செய்யுற...எழுந்து அக்கவுண்டன்சியில உள்ள கோல்டன் ரூல் என்னன்னு சொல்லு." என்றார்.

"கோல்டன் ரூலா? அப்படின்னா என்ன சார்..." இதைக்கேட்டதும் மாணவிகள் எல்லாரும் சிரித்தார்கள்.

அதைக் கவனித்த வெற்றி,'அப்பாடா...பசங்கள்ல ஒருத்தனுக்கும் இந்த கேள்விக்கு விடை தெரியாது போலிருக்கு...கம்பெனி கொடுக்க இருக்கானுங்க.'என்று தனக்குள்ளேயே முணுமுணுத்தான்.

"வெட்டி...கொரங்கு சேட்டை எல்லாம் பண்ணினா கூடப்படிக்கிற பசங்க, பொண்ணுங்க எல்லாம் சிரிப்பாங்கதான். ஆனா படிப்புலயும் பெரிய ஆளா இருந்தாதான் இவங்க கிட்டயே மதிப்பு இருக்கும். நான் உன்னை கேள்வி கேட்டா நீ என்கிட்ட எதிர் கேள்வி கேட்டு ஹீரோவாயிடலாம்னு பார்க்குறியா?

ஒழுங்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு."என்று முறைத்தார்.

"உங்களை காமெடி பீசா நினைச்சதா நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க சார்.உண்மையிலேயே எனக்கு பதில் தெரியாது.நீங்களே சொல்லிடுங்களேன்."என்ற வெற்றியை வகுப்பறை மொத்தமும் பரிதாபமாக பார்த்தது.

"அக்கவுண்ட்ல உள்ள அடிப்படை பாடம் தெரியாம நீ பிளஸ்டூவைத் தாண்டி காலேஜீக்கும் வந்துட்ட.இதுதான் நேரக்கொடுமை.அந்த ஆறு ரூல் ஒழுங்கா புரிஞ்சா உலகத்துல உள்ள எந்த நிறுவனத்து கணக்கையும் சரியா செஞ்சுடலாம். இதை உனக்கு பள்ளிக்கூடத்துல சொல்லிக்கொடுக்கலையா?" என்று சாமிநாதன் கேட்டபோது அவரது குரலில் முன்பிருந்த கடுமை இல்லை.

"சார் நான் பத்தாவதுல ரெண்டு அட்டை. பிரைவேட்டா அதை எழுதி பாஸ் பண்ணினதும் பிளஸ்டூவும் இப்படியே பிரைவேட்டாதான் முடிச்சேன்.நீங்க சொன்னது பதினோராம் வகுப்புல இருந்துருக்கலாம். நான் நேரடியா பிளஸ்டூ சார்."

"அது சரி...இனிமேலாச்சும் இது மாதிரி அடிப்படை விஷயங்களை ஒழுங்கா தெரிஞ்சுக்க வழி பாரு. அடிப்படை விதிகள் தெரியாம ஒருத்தன் ஒரு பாடம் படிச்சு கல்லூரி வரை வர்ற. நம்ம கல்வி முறையோட யோக்கியதை இப்படி இருக்கு.உன்னைக் குத்தம் சொல்லி என்ன ஆகப்போகுது."என்ற சாமி நாதன் வெற்றியை உட்கார சொன்னார்.

இப்போது மாணவிகளில் பலர் வெற்றியைப் பார்த்த பார்வையில் ஒருவித ஏளனம் தெரிந்தது. திருவாரூரில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து மிக அதிக மதிப்பெண்களுடன் இருபத்து எட்டு பேர் சேர்ந்திருந்தார்கள். மாணவர்களில் பலர் வெளியூர் பள்ளியில் படித்து வந்தவர்கள் என்பதால் இவனைப் பார்த்த பார்வையில் தவறாக எதுவும் இல்லை.

வெற்றி, மாணவிகளிடம் சென்று,"பஸ்சுல உட்கார்ந்தா என்ன, புட்போர்டு அடிச்சா என்ன? திருச்சி போற பஸ்சுல ஏறுனா சீட்டுல உட்கார்ந்து இருக்குறவங்களை மட்டும் சென்னைக்கா அழைச்சுட்டு போகப்போறாங்க? முதல்ல மனுஷனை மதிக்க கத்துக்குங்க..."என்று சீறினான்.

"ஹலோ...உங்க கிட்ட நாங்க எதாவது சொன்னோமா?...சும்மா கத்தாம போய் உட்காருங்க..." என்று ஒரு மாணவி பதிலளிக்கவும் அவள் தோழிகள்,"பேசாம இருடி..."என்றார்கள்.

"மிஸ் சந்தியா...கொஞ்சம் அடங்குங்க...நீங்க நூறுக்கு நூத்திப் பத்து மார்க் எடுத்தா அதை பத்திரமா நீங்களே வெச்சுக்குங்க.யார் கேட்டா? எல்லாரும் எல்லா வேலையும் செஞ்சுட முடியாது. அதை மனசுல வெச்சுகிட்டா போதும்." என்று அங்கிருந்து தன் இடத்தில் வந்து அமர்ந்தான்.

"சந்தியா...அவன் நம்ம புரொபசரையே மடக்கி பதில் சொல்ல விடாம திணற வெச்சுட்டான். அதனால இப்ப அவனை யாரும் கண்டுக்குறது இல்லை. ஆனா ஒரு வெறியோடதான் இருப்பாங்க.என்னைக்காவது வசமா சிக்கப்போறான் பாரு...அப்ப நாம வேடிக்கை பார்ப்போம். இப்ப நம்ம வேலையை மட்டும் பார்க்குறது நல்லது."என்று அவள் தோழி ஜெயந்தி சொல்லவும் சந்தியா அமைதியானாள்.

***
ஐம்பது இடங்களுக்கு ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து குவிந்தாலும் மூன்று முறை வெயிட்டிங் லிஸ்ட் போட்டும் ஒரு இடம் காலியாக இருந்தது. ஒரு அரசியல் பிரமுகர் மூலமாக அந்த இடத்தைக் கைப்பற்றியவன்தான் வெற்றி. அவன் முதலாமாண்டு வகுப்பில் சேர்ந்த சில தினங்களிலேயே பேராசிரியர்கள் யாரும் அவ்வளவாக கண்டுகொள்வது இல்லை.

இதற்குக் காரணமும் ஒரு பேராசிரியர்தான். புள்ளியியல் பாடம் நடத்த வந்த அவர், சரியான டேட்டா, தவறான டேட்டா என்பதற்கு ஒரு உதாரணம் சொன்னார். அதில் தவறான விஷயத்தை சொல்லிவிட, வெற்றி இந்த வார்த்தைகளை வைத்தே அந்த பேராசிரியரை மடக்கி விட்டான். அதிலிருந்து எல்லா பேராசிரியர்களும் எச்சரிக்கையாகி விட்டார்கள்.
அந்த பேராசிரியர், ஒரு நாள்,"ஒரு ஊரில் ஒரு லட்சம் பேர்கிட்ட நேரடியா நீங்க என்ன சோப் போட்டு குளிக்கிறீங்க அப்படின்னு கேட்டு தகவல் சேகரிக்கிறோம்னா அதுக்குப் பேர்தான் டேட்டா கலெக்ஷன். அதாவது தகவல் சேகரிப்பு.

அதுல மக்கள் உண்மையான தகவலை சொன்னா அதுக்குப்பேர் ரைட் டேட்டா.ஐ மீன் சரியான தகவல். இதுல நிறைய பேர் தப்பான தகவல் சொல்லவும் வாய்ப்பு இருக்கு."என்றவர் வெற்றிக்கு அருகில் அமர்ந்திருந்த ராம்குமாரை எழுந்து நிற்கச் சொன்னார்.

தயக்கத்துடனேயே அவன் எழுந்தான்.

"ஒண்ணும் பயப்படாத...இவனைக்கவனிங்க...இவன் இருக்குறதைப்பார்த்தா குளிக்கவே மாட்டான்னு நினைக்குறேன்.ஆனா இவன் கிட்ட சர்வே எடுக்கும்போது லக்ஸ் சோப் போட்டுக் குளிக்கிறேன்னு சொல்லிட்டான்னா அப்பதான் ரைட் டேட்டா ராங் டேட்டாவாயிடுது."என்று பேராசிரியர் சொன்னதும் வெற்றியைத் தவிர அனைவரும் சிரித்தார்கள்.

ராம்குமாரின் கண்கள் கலங்கி விட்டன.

'இந்த ஆள் ரத்த சோகை புடிச்சு வெளுத்துருக்காரு.அந்த திமிருதான் இப்படி பேச சொல்லுது.'என்று முனகினான்.

"ஏய் வெற்றி...என்ன வெட்டித்தனமா எதோ பேசிகிட்டு இருக்க..."

"ஒண்ணும் இல்ல சார்."

"நான் பார்த்தேன். எழுந்து நில்லு."

வெற்றி எதுவும் பேசாமல் எழுந்து நின்றான்.

"நீ எதுவோ சொன்ன.நான் திட்ட மாட்டேன். நீ என்ன பேசினன்னு மரியாதையா சொல்லிடு."

"நாங்க எதுவும் சொல்லலீங்க சார்."

"நீ மட்டும்தானடா பேசின...இப்ப நாங்க எதுவும் சொல்லலைன்னா என்ன அர்த்தம்."

"நீங்க மரியாதையா பேசுன்னு சொன்னதை நான் மதிக்கிறேன்னு அர்த்தம்."இதைக் கேட்டு மற்ற மாணவர்கள் மாணவிகள் சேர்ந்து சிரித்துவிட, பேராசிரியர் கோபமானார்.

"சரி...நீ என்ன சோப் போட்டு குளிக்கிற?"

"அது கொஞ்சம் காஸ்ட்லியான சோப்பு சார்."

"அதுதான் என்னதுன்னு சொல்லு. பேர் இருக்குல்ல?"

பேராசிரியரின் இந்தக் கேள்விக்கு வெற்றி விடை சொன்னதும் வகுப்பறையில் இருந்த வெற்றியையும் பேராசிரியரையும் தவிர மற்ற அனைவரும் சிரித்தார்கள்.

பேராசிரியரே ஒருசில நொடிகள் தடுமாறித்தான் போனார்.

2-தொடரும்.
******
திருவாரூரைப் பற்றி பெருமையாக உலகத்திற்கு அறிமுகம் செய்யும் விஷயங்கள் பெரிய கோயிலும் ஆழித்தேரும்தான்.ஐந்து வேலி பரப்பளவில் அமைந்திருக்கும் திருவாரூர் பெரிய கோயிலின் பெரிய சன்னதிகளில் ஒன்று அசலேஸ்வரர் கோயில்.தஞ்சை பெரிய கோயிலை நிலை நிறுத்தி தமிழர்களுக்கு பெருமை தேடித் தந்த ராஜராஜசோழன்  தன்னுடைய இளைமை பிராயத்தில் திருவாரூர் தியாகராஜரை வந்து வழிபட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்தக் கோயிலில் கீழராஜ கோபுரம், வடக்கு கோபுரம் என்று பல பகுதிகள் பிற்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றனவாம். ஆனால் இந்த ஆலயம் உருவான காலம் யாராலும் கணிக்கப்படவில்லை.

அசலேஸ்வரர் சன்னதிக்கும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த சன்னதியை இராஜராஜசோழனின் பாட்டி செம்பியன்மாதேவி திருப்பணி செய்ததாக வரலாறு உண்டு. நானும் பிறந்து வளர்ந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கும் திருவாரூரைப்பற்றிய வரலாறை முழுவதுமாக  பதிவிட்டால்   எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை.

இந்த அசலேஸ்வரர் சன்னதியின் விமான அமைப்பு ராஜராஜன் தஞ்சை பெருவுடையார் கோயிலின் கருவறை விமானத்தை அமைக்க தூண்டுகோலாக இருந்ததாகவும் ஒரு பேச்சு உண்டு.

இந்த ஆலய விமானத்தை நான் 2002ம் ஆண்டு நண்பரின் ஆட்டோ போகஸ் வசதியுள்ள யாஷிகா கேமராவால் படம்பிடித்தேன்.இந்த இடத்தை சூரியன் மறையும் நேரத்தில் பதிவு செய்த ஒளிப்படம் இணையத்தில் கிடைத்தது. அதைத்தான் ஜெயம்ரவி, ஜோதிகா உருவங்களுக்குப் பின்னணியாக்கியிருக்கிறேன்.

நாளை திருவாரூர் திருவிழாவின் மூன்றாவது அத்தியாயத்தில் சந்திப்போம்.

பின் குத்தாத குறிப்பு:வழக்கம் போல்தான். ஒளிப்படங்களைப் பெரியதாக பார்க்க படங்களின் மீதே  க்ளிக் செய்யவவும்.

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1

9 கருத்துகள்:

  1. "இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி திகைச்சுப்போயிட்டீங்க? நம்ம முன்னாள் ஜனாதிபதி ஐயாவே கனவு காணுங்கள்னு சொல்லியிருக்கார்.நாங்களும் ஆசைப்படுறதுல என்ன தப்பு?...வருங்கால முதல்வர் saravanan வாழ்க..." முதல்வர் saravanan வாழ்க..." eluthu ulaga appidnu chola vanten saravanan..

    nala eruku unga padivu..

    nalvalathukal...

    பதிலளிநீக்கு
  2. @ Complan Surya said...

    // "இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி திகைச்சுப்போயிட்டீங்க? நம்ம முன்னாள் ஜனாதிபதி ஐயாவே கனவு காணுங்கள்னு சொல்லியிருக்கார்.நாங்களும் ஆசைப்படுறதுல என்ன தப்பு?...வருங்கால முதல்வர் saravanan வாழ்க..." முதல்வர் saravanan வாழ்க..." eluthu ulaga appidnu chola vanten saravanan..

    nala eruku unga padivu..

    nalvalathukal...//

    ஆஹா...தேரை இழுத்து தெருவுல விட்டுருவீங்க போலிருக்கே...முதல்ல நான் வேலைக்கு போற இடத்துல ஒழுங்கா சம்பளம் வாங்குற வழியைக் கண்டு பிடிக்கணும். மத்ததெல்லாம் அப்புறம்தான்.

    பதிலளிநீக்கு
  3. நல்லாதான் எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க தொடர்ந்து வருகிறோம்..

    பதிலளிநீக்கு
  4. //"அது சரி...இனிமேலாச்சும் இது மாதிரி அடிப்படை விஷயங்களை ஒழுங்கா தெரிஞ்சுக்க வழி பாரு. அடிப்படை விதிகள் தெரியாம ஒருத்தன் ஒரு பாடம் படிச்சு கல்லூரி வரை வர்ற. நம்ம கல்வி முறையோட யோக்கியதை இப்படி இருக்கு.உன்னைக் குத்தம் சொல்லி என்ன ஆகப்போகுது."என்ற சாமி நாதன் வெற்றியை உட்கார சொன்னார்.//

    இதனால் தான் உங்கள இனி உலகின் மிக நல்லவர்ங்கற பட்டத்தை தருகின்றோம்.

    பதிலளிநீக்கு
  5. @ Complan Surya said...

    // "இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி திகைச்சுப்போயிட்டீங்க? நம்ம முன்னாள் ஜனாதிபதி ஐயாவே கனவு காணுங்கள்னு சொல்லியிருக்கார்.நாங்களும் ஆசைப்படுறதுல என்ன தப்பு?...வருங்கால முதல்வர் saravanan வாழ்க..." முதல்வர் saravanan வாழ்க..." eluthu ulaga appidnu chola vanten saravanan..

    nala eruku unga padivu..

    nalvalathukal...//

    நல்ல யோசிங்க எழுத்துலக ஜனாதிபதின்னு எதையும் பெரிதாக யொசிக்க வேண்டுமாம் அப்போ தான் அது கண்டிப்பா அடைவோம்

    பதிலளிநீக்கு
  6. "அதுதான் என்னதுன்னு சொல்லு. பேர் இருக்குல்ல?"


    ம்ம்ம்ம்ம் நான் சொல்லவா

    ம்ம் டாக் சோப்
    பி.கு. நான் அதுல குளிக்க மாட்டேன்

    பதிலளிநீக்கு
  7. மேல காருல நீங்க தான் lift கேட்டதா தெரியுது

    பதிலளிநீக்கு
  8. @ angel

    வாங்க வாங்க...உங்களைத்தான் எதிர்பார்த்துகிட்டு இருந்தோம்.

    பதிலளிநீக்கு