Search This Blog

புதன், 6 ஜனவரி, 2010

திருட்டு டி.வி.டி - தவறுகள் எங்கே?


சமீபத்தில்  ஜக்குபாய் படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் வெளிவந்ததோடு டி.வி.டி யாகவும் வெளிவந்து திரையுலகினருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

இதே போல் சில ஆண்டுகளுக்கு முன்பு எதிரும்புதிரும் என்ற படமும் திரையரங்குகளுக்கு வரும் முன்பே வி.சி.டியாக வெளிவந்து கேபிளில் கூட ஒளிபரப்பானது.

இப்போதும் இங்கே பலரது சராசரி நாள் வருமானம் நூறு ரூபாய்க்கும் கீழேதான் இருக்கிறது.இந்த சூழ்நிலையில் குடும்பத்துடன் திரையரங்கிற்கு படம் பார்க்கச்சென்றால் சென்னை உட்பட பெரிய நகரங்களில் ஆயிரம் ரூபாய் வரை ஆகும். சிறிய ஊர்களில் என்றால் முன்னூறு முதல் ஐநூறு வரை.

90களின் பிற்பகுதியில் பத்து ரூபாய் என்ற அளவில் டிக்கட் விலை இருந்தபோது தினக்கூலித்தொழிலாளர்கள் பலர் ஒரே படத்தை நான்கு முறை கூட பார்ப்பார்கள்.ஹீரோக்கள் சிலருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுப்பதற்காக டிக்கட் விலையை தாறுமாறாக உயர்த்தியதன் பலன்தான் இப்போது இளைய சமுதாயத்தை மட்டும் திரையரங்குகள் நம்பியிருக்க முக்கியக் காரணம்.

மேலும் ஹீரோக்களுக்கு அள்ளிக்கொடுக்கும் படாதிபதிகள் படப்பிடிப்பில் பணியாற்றும் பல தொழிலாளிகளுக்கு தினப்படியைக் கூட நியாயமான அளவில் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

கிளைகளை சீர்செய்யும் முன் வேர்களில் உள்ள பிரச்சனைகளை திரையுலகினர் சரிசெய்வார்களா?

2 கருத்துகள்:

  1. என்றைக்கு திரையரங்குகள் ஏனைய வளாகங்களாகவும்,அரசியல் கொட்டாரங்களாகவும் மாற்றப் பட்டதோ அப்பொழுதே தமிழ் சினிமாவின் பொருளாதார வீழ்ச்சி துவங்கி விட்டது.பக்கத்துணையாக விஞ்ஞான மாற்றங்கள் வேறு.

    பல இலட்சங்களில் திருட்டு டி.வி.டி வியாபாரம் களை கட்டுவதும் கால மாற்றத்திற்கு தகுந்த மாதிரி குற்றங்களும் தம்மைப் புதுப்பித்துக் கொள்வதும் வியப்பை ஏற்படுத்துகின்றது.

    பதிலளிநீக்கு
  2. theatreக்கு சென்றால் அங்கு மனிதரகள் இடும் சத்தமே பலரை படம் பார்க்க விடாமல் செய்துவிடும் இது போன்ற காரணத்தால் தான் வி.சி.டியை பலர் விரும்புகின்றனர்

    பதிலளிநீக்கு