Search This Blog

சனி, 9 ஜனவரி, 2010

மதிப்பெண் என்னும் மாயத்தோற்றம்

என்ன வேணுன்னாலும் சாப்பிடுங்க...உண்மையை சொல்லுங்க என்று நல்ல செய்தி சொல்லும் விளம்பரம் என்று சில தினங்களுக்கு முன்புதான் பெப்சோடண்ட் பற்பசை விளம்பரத்தைப் பாராட்டி ஒரு பதிவு எழுதினேன். நாங்க அவ்வளவு சீக்கிரம் திருந்திடுவோமான்னு உடனே ஒரு ஆப்பு வெச்சுட்டாங்க.

இப்ப போடுற பெப்சோடண்ட் விளம்பரத்துல தேர்வு எழுதிட்டு வர்ற ஒரு மாணவனின் தாய்கிட்ட ஒரு நிருபர் உங்க பையன் ஃபெயிலாயிட்டானான்னு திரும்பத்திரும்ப கேட்குறதா காட்சி. இந்த மாதிரி விளம்பரங்களை சென்சார் வெச்சு தடை செஞ்சாதான் சரிவரும்.

நம்ம கல்விமுறையும் தேர்வுகளும் படுத்துறபாடு தாங்காம தற்கொலை செஞ்சுக்குற மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்கணும்னுதான் நிறைய பேர் போராடிகிட்டு இருக்கோம்.

இதுக்காக நான் தேர்வுகளே வேண்டாம்னு சொல்ல வரலை. இந்த தேர்வுகள்ல மார்க் வாங்கலைன்னா உலகத்துல வாழவே தகுதியில்லாத மாதிரி தற்கொலை

செய்துக்குறதுதான் கூடாதுன்னு சொல்றேன்.

எல்லாரும் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் எடுத்துடுற திறமையோட இருக்க மாட்டாங்க. கல்லூரியில என்னோட குறைவான மார்க் எடுத்த என் வகுப்புத் தோழன் எம்.காம், எம்.ஃபில் படிச்சு நெட் தேர்வும் எழுதி ஒரே தடவையில பாஸ் பண்ணிட்டான்.நிறைய பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகளுக்கு டியூஷன் எடுக்குறான். ஆனா நான் எழுத்து மேல உள்ள ஆர்வத்தால படிப்பை அதுக்கு மேல தொடரலை.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை. அதை வளர்க்குறதுதான் நம்மோட கடமையா இருக்கணும்.

3 கருத்துகள்:

  1. s . now days in active based learning(ABL) MARKS are not given. pupil go according to their learning level and no exam. but there is self evaluation and test that also for checking their learning . teachers can give grads for them.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை. அதை வளர்க்குறதுதான் நம்மோட கடமையா இருக்கணும். ............சரியா சொன்னீங்க. பரீட்ச்சையில் முதலிடம் என்றால், வாழ்க்கை பாடத்திலும் முதலிடம் என்று அர்த்தம் இல்லை.

    பதிலளிநீக்கு
  3. @ Chitra

    //ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை. அதை வளர்க்குறதுதான் நம்மோட கடமையா இருக்கணும். ............சரியா சொன்னீங்க. பரீட்ச்சையில் முதலிடம் என்றால், வாழ்க்கை பாடத்திலும் முதலிடம் என்று அர்த்தம் இல்லை.//

    இந்த விஷயங்களில் இன்றைய மாணவர்களை விட நேற்றைய மாணவர்களுக்குத்தான்(பெற்றோர்கள்) விழிப்புணர்வு தேவை.

    பதிலளிநீக்கு