Search This Blog

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

இலவசம் பெற்றுத்தந்த புத்தகக்கண்காட்சி.


இது 2007ம் ஆண்டு நடைபெற்ற புத்தக கண்காட்சி தொடர்பான அனுபவங்கள். இந்த ஆண்டு நிகழ்வை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். நான் சென்னையில் தங்கி வேலை செய்த நாட்கள் அவை. அதற்கு முதல் ஆண்டு வரை எழும்பூர் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் நடைபெற்று வந்தது. நான் தங்கியிருந்த கெல்லீஸ் பகுதியில் இருந்து ஓரளவு பக்கம் தான் என்றாலும் அரை நாள் விடுப்பு எடுக்க வேண்டுமே என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

ஆனால் அந்த ஆண்டு பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளியில் கண்காட்சி நடைபெறும் என்று தெரிந்ததுமே எனக்கு ரொம்பவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. அப்போ தினமும் போய் அட்டனன்ஸ் கொடுத்தியா என்றுதானே கேட்குறீங்க?

2007ல் நடந்ததைப் பற்றி மூன்று வருஷம் கழித்து எழுதும்போதே என்னுடைய சுறுசுறுப்பு உங்களுக்கு புரியலையா?

2006 தீபாவளி முதல் 2007 பொங்கல் பண்டிகை வரை புதிய ஆவடி சாலை அருகில் ஒரு சிறிய தெருவில்தான் பணி. ஒரு கட்டிடத்தில் மின்சார உபகரணங்களைப் பொருத்தும் ஒப்பந்தப் பணியை திருவாரூரில் இருந்து வந்து சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் என் நண்பர்தான் ஏற்றிருந்தார்.

அதனால் நான் அன்று மாலை நான்கு மணிக்கெல்லாம் புத்தக கண்காட்சிக்கு செல்வதாக சொல்லியிருந்தேன். கிளம்பும் நேரத்தில் வில்லனாக ஒரு கும்பல் வந்தது. வேறு யாரும் இல்லை. ஒரு தனியார் தொலைக்காட்சியின் டி.டி.ஹெச் இணைப்பு கொடுக்க வந்தவர்கள்தான் அவர்கள்.

டிஷ் ஆண்டனாவிலிருந்து வரும் ஒயர், வெளிப்படையாகத்தான் வரும் என்று அவர்கள் சொல்ல, கட்டிட உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஒப்பந்தம் செய்திருந்த என் நண்பர், சுவற்றுக்குள் உள்ள குழாய் வழியே நான் கொண்டு சென்று காட்டுகிறேன் என்று சம்மதித்து விட்டார்.

சவாலாக நினைத்து அவர் அந்த வேலையை செய்து முடிக்கும் வரை நானும் உடன் இருக்க வேண்டியதாயிற்று. வேலை முடிந்த நேரம் இரவு ஏழரை.  தொடக்கமே ஏழரையானா என்ன செய்வது என்று என்னுடைய கண்காட்சி விஜயத்தை அடுத்த நாளுக்கு ஒத்திவைத்தேன்.

மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் ஏ.டி.எம் அட்டையின் மூலம் பணம் எடுக்கலாம் என்று அபிராமிமெகாமால், குமுதம் அலுவலகங்களுக்கு எதிரில் இருந்த ஒரு வணிகவளாகத்தில் அமைந்திருந்த மெஷினில் முயற்சிசெய்தேன். கார்டு, தனியார் நிதிநிறுவனத்தில் போட்ட பணமானது. நான் பதறிப்போய் செக்யூரிட்டியிடம் சொன்னேன்."உனக்குதான்யா இது புதுசு. எனக்கு இதெல்லாம் காபி, டீ குடிக்கிறமாதிரி."என்ற கோணத்தில் மருத்துவமனை ஊழியர்களிடம் இருக்குமே ஒரு அலட்சியம், அந்த மாதிரி ஒரு பார்வையுடன் புகார் செய்யும் பதிவேட்டை எடுத்துக் கொடுத்தார்.

அதைப் பார்த்ததும் என் முதுகு எனக்கே தெரிஞ்சதுங்க. தினமும் கலெக்டர் ஆபீசுல மனு வாங்குற மாதிரி ஏடிஎம் மெஷின் ஏகப்பட்ட கார்டுகளைப் புடுங்கி வெச்சிருந்தா அதிர்ச்சி அடையாம என்ன பண்றது?

அந்த வங்கியின் மண்டல அலுவலகம் கிரீம்ஸ் ரோட்டில் இருப்பதாக சொன்னதும், நண்பரிடம் லீவு சொல்லிவிட்டு அங்கே அலைந்தேன். அந்த வங்கி முழுவதும் இருந்த அழகான பெண்களைப் பார்த்ததைத் தவிர வேறு எந்த வேலையும் ஆகலை.

பயபுள்ளைங்க மூச்சுவிடாம இங்கிலீஷ்ல பேசுதுங்க. இது ஆவுறது இல்லைன்னு நான் கணக்கு வெச்சிருந்த வங்கியின் அண்ணாசாலை கிளைக்கு வந்து விசாரிச்சா, செக் புத்தகம் இல்லாததால இங்க பணம் எடுக்க முடியாது. உங்க கிளைக்கு லெட்டர் எழுதுங்க. அப்படின்னு அட்வைஸ் பண்ணினாங்க.

இப்ப ஒருத்தர் டெல்லிக்கு எழுதுற லெட்டர் மாதிரியெல்லாம் இல்லைங்க.நான் எழுதின கடிதத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். பத்து நாள்லயே எந்த அலைச்சலும் இல்லாம புது கார்டு கிடைச்சது. மெஷின்லதான் கோளாறுன்னுங்குறதால (உன் மண்டையில ரிப்பேர் ஆகி பின் நம்பர் ஒண்ணும் தப்பா அழுத்தலை அப்படின்னு வங்கியில இருந்து சான்றிதழ்?) கட்டணம் எதுவும் வசூலிக்கலை.

அப்புறம் நண்பர்கிட்ட இருந்து சம்பளப்பணத்துல ஐநூறு ரூபாய் வாங்கிட்டு கண்காட்சி ஆரம்பிச்ச ரெண்டாவதுநாள்தான் போனேன். சில புத்தகங்களை வாங்கிட்டு திருவிழாவுல காணாம போன மாதிரி சுத்திகிட்டு இருந்தேன். அப்போ குமுதம் ஸ்டால்ல அந்த நிறுவன சேர்மன் டாக்டர்.ஜவஹர்பழனியப்பன் எழுதிய புத்தகம் ஒன்றை அவர் கையெழுத்துடன் இலவசமா தரப்போறதா சொன்னாங்க. விட்டுறுவோமா? சட்டுன்னு வரிசையில நின்னுட்டேன்ல.

அந்த சமயம் குமுதம் பக்தி ஸ்பெஷல்ல நான் எழுதி அனுப்பியிருந்த சில கோவில்கள் பற்றிய தகவல்கள்ல நாலு கட்டுரை பிரசுரமாகியிருந்துச்சு. அதையெல்லாம் குமுதம்

சேர்மன் கிட்ட சொல்லி அந்த நேரத்து ஹீரோவாயிட்டியான்னுதானே கேட்குறீங்க...அதெல்லாம் ஒண்ணும் இல்லை. சத்தம் எனக்கே கேட்காத அளவுக்கு நன்றி சொல்லிட்டு வந்தேன். அவ்வளவுதான்.

இலவசமா கிடைத்த புத்தகம் என்னன்னுதானே கேட்டீங்க? டாக்டர்.ஜவஹர் பழனியப்பன் எழுதிய இணையற்ற இளையாற்றாங்குடி என்ற செட்டிநாட்டுக்கோயில்கள் பற்றிய புத்தகம்.

6 கருத்துகள்:

  1. //எழும்பூர் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் நடைபெற்று வந்தது. //
    //பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளியில் கண்காட்சி//

    no feelings வாழ்க்கையில் இதெல்லாம் சாதரணம் ok

    பதிலளிநீக்கு
  2. //நானும் உடன் இருக்க வேண்டியதாயிற்று.//

    இல்லினா சிக்கிரம் முடிஞ்சு இருக்குமோ

    பதிலளிநீக்கு
  3. // அந்த வங்கி முழுவதும் இருந்த அழகான பெண்களைப் பார்த்ததைத் தவிர வேறு எந்த வேலையும் ஆகலை//

    இதுக்கு no comments

    பதிலளிநீக்கு
  4. //என் முதுகு எனக்கே தெரிஞ்சதுங்க.//

    அதுக்கு அப்புறம் மயக்கம் போட்டு விழுந்தத சொல்லல?

    பதிலளிநீக்கு
  5. இலவசமோ, இரவலோ, புத்தகம் படிக்கிறது தான் முக்கியம்

    பதிலளிநீக்கு
  6. @ சங்கர்

    //இலவசமோ, இரவலோ, புத்தகம் படிக்கிறது தான் முக்கியம்//

    அச்சச்சோ... நான் காசு கொடுத்து புத்தகங்கள் எல்லாம் வாங்கிட்டு வரும்போதுதாங்க இலவசத்துக்கான வரிசையில நின்னேன்.

    ******

    @ angel

    //எழும்பூர் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் நடைபெற்று வந்தது. //
    //பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளியில் கண்காட்சி//

    //no feelings வாழ்க்கையில் இதெல்லாம் சாதரணம் ok//

    இப்படிதான் உண்மையை வெளிச்சம் போடுறதா

    ******

    @ angel

    //நானும் உடன் இருக்க வேண்டியதாயிற்று.//

    //இல்லினா சிக்கிரம் முடிஞ்சு இருக்குமோ//

    இப்படிதான் உண்மையை சொல்றதா

    ******
    @ angel

    //என் முதுகு எனக்கே தெரிஞ்சதுங்க.//

    //அதுக்கு அப்புறம் மயக்கம் போட்டு விழுந்தத சொல்லல?//

    பக்கத்துல நின்னு தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டது நீங்கதானா.

    ******

    @ angel

    // அந்த வங்கி முழுவதும் இருந்த அழகான பெண்களைப் பார்த்ததைத் தவிர வேறு எந்த வேலையும் ஆகலை//

    //இதுக்கு no comments//

    இதுக்குப்பேர்தான் கமெண்ட்.

    பதிலளிநீக்கு