Search This Blog

வெள்ளி, 1 ஜனவரி, 2010

வீட்டு வேலை செய்பவர்களும் மனிதர்களே!


என் நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர்கள் குடும்பத்துடன் உணவருந்திவிட்டு எழுந்த நேரம் அது.

அனைவரும், தட்டில் ஒதுக்கப்பட்டிருந்ததை எல்லாம், தனியே ஒரு குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, தட்டை லேசாக கழுவி, பாத்திரம் தேய்க்கும் இடத்திலேயே போட்டுவிட்டு வந்தனர்.

நான் காரணம் கேட்டேன்.

பாத்திரம் தேய்க்க ஆள் வெச்சிருக்கோம். அப்படி இருந்தாலும், நாம் தட்டுல மிச்ச மீதியை அப்படியே வெச்சு காயவிட்டுட்டா, தேய்க்கும்போது சிரமமாகவும், கழுவி ஊற்றும்போது, குழாயில் அடைப்பும் ஏற்பட்டு, நாற்றம் அடிச்சு, நமக்கே அதிக வேலை வைக்கலாம்.

அது மட்டுமில்லாம அவங்க என்ன சூழ்நிலையால வீட்டு வேலைக்கு வர்றாங்கன்னு சொல்ல முடியாது. நம்ம எச்சிலை வழிச்சு எடுத்துப் போடும் போது, அவங்க மனசு வேதனைப் படலாம்.

எல்லாத்துக்கும் மேல், வீட்டு வேலை செய்யறவங்க வராவிட்டாலும், அநாவசியமான டென்ஷன் இருக்காது...என்று விளக்கம் கொடுத்து என்னை வியக்க வைத்துவிட்டார். உங்களுக்கு ஆச்சர்யம் வரலையா?

4 கருத்துகள்:

  1. இது அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு அன்றாட அலுவல். ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.அதே நல்ல பழக்கம் தமிழ்நாட்டிற்குப் பய்ணம் வரும் போது செய்யும் போது,ஏதோ செய்யக் கூடாததைச் செய்துவிட்டது போலத் துடிப்பது தான் வேடிக்கை !

    பதிலளிநீக்கு
  2. என்னத்தல இன்னைக்க பதிவு ரொம்ப சின்னதா இருக்கு,,, இதுவாரமலர் இது உங்கள் இடம் பகுதிக்கு அனுப்பிவைக்கலமே,,, பரிசுகூட கொடுப்பாங்கப்பா...

    நல்லவிஷயம்தான் ஆனா எத்தனை பேரு வீட்டுல பண்றோம்,,,

    பதிலளிநீக்கு
  3. @ நாஞ்சில் பிரதாப்

    //என்னத்தல இன்னைக்க பதிவு ரொம்ப சின்னதா இருக்கு,,, இதுவாரமலர் இது உங்கள் இடம் பகுதிக்கு அனுப்பிவைக்கலமே,,, பரிசுகூட கொடுப்பாங்கப்பா...

    நல்லவிஷயம்தான் ஆனா எத்தனை பேரு வீட்டுல பண்றோம்,,,//

    இத வாரமலர்ல எழுதி பரிசும் வாங்கியாச்சு தல. அச்சு ஊடக பிரசுரங்கள் அப்படின்னு லேபில் கொடுத்தது அதனாலதான்.

    இந்த இளைய பாரதத்துல இருக்குற எல்லா பதிவுமே இன்னைக்கு போட்டதுதான். கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு அதிகமாவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. என் வழக்கம்.
    ஹெல்ப்பர் வருமுன் நான்,பத்து பாத்திரத்தில் மூன்றாவது அலசி கழுவி கவிழ்த்து வைத்திருப்பேன்...அவர்,வரும் போது அவருக்குத் தன் வேலைப்பளு குறைந்தாற்போல் ஒரு மகிழ்ச்சி கிட்டும்

    பதிலளிநீக்கு