Search This Blog

வெள்ளி, 15 ஜனவரி, 2010

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...எந்திரன் - அசல் - சில தகவல்கள்.

அசல் படப்பிடிப்பில் உயிரிழந்த நகல் - ஒரு வேதனையான சம்பவம்.

மலேசியாவில் உள்ள டூரிஸ்ட் ஸ்பாட்டான ஈயக்குட்டையில ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்கியிருக்காங்க. இதுல அஜீத்துக்கு டூப் போட்டது 

மலேசியாவுல இருந்த சீன நீச்சல் வீரர். லாங் ஷாட், க்ளோசப் - ரெண்டு காட்சிகள்லயும் டேக் ஓ.கே ஆகியிருக்கு. மூணாவது தடவையா லோ ஆங்கிள்ல கேமராவை வெச்சு எடுத்தப்ப குட்டையில் டைவ் அடிச்ச நீச்சல் வீரர் ஷாட் முடிஞ்சதும் தண்ணீரில் போட்ட கயிற்றைப்பிடிக்க முடியாம அப்படியே உள்ள போயிட்டாராம்.

மூணு நாள் கழிச்சுதான்  சடலம் மேல வந்துருக்கு. அஜித், இறந்து போனவரோட இறுதிசடங்குக்கு உதவிசெஞ்சாராம். இது போதுமா?

படப்பிடிப்பு முடியாத நிலையில இது மாதிரியான சம்பவங்கள் நடந்தா அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும்னு ஒரு சென்டிமெண்ட் தமிழ்த்திரைப்பட உலகத்துல உண்டு. நீங்க மனவருத்தம் அடையாதீங்க-அப்படின்னு அஜித்தோட நண்பர்கள் அவருக்கு ஆறுதல் சொன்னாங்களாம்.இந்த கொடுமையை எங்க போய் சொல்றது.எவன் செத்தா எனக்கென்ன...என் கல்லாப்பொட்டி நிரம்பினாப் போதும்னு நினைக்குற இந்த மனோபாவத்தை வெச்சுகிட்டு திருட்டு வி.சி.டியப் பத்தி பேசுறாங்க.

அடப்பாவிகளா...நடிகருக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்குறீங்க. அந்த பணத்தை வெச்சு இறந்த நீச்சல் வீரருக்கு உயிர் கொடுக்க முடியுமா? இது மாதிரி படப்பிடிப்புகள்ல ஹீரோக்கள் பேர் வாங்குறதுக்காக நிறையபேர் உயிரையும் உடல் உறுப்புக்களையும் இழந்துகிட்டு இருக்காங்க.

ஆங்கிலப்படங்களோட கதையை சுடுற நம்ம ஆளுங்க அவங்களோட திட்டமிடலை மட்டும் திரும்பிக்கூடப்பார்க்குறது இல்லை. நாட்டைக் காப்பாத்த உயிர்த்தியாகம் செய்யுறதுலயாவது ஒரு பெருமை இருந்துச்சு. இந்த மாதிரி ஹீரோக்கள் பேர் வாங்க உயிரிழக்குற ஸ்டண்ட் நடிகர்கள் பற்றி வெளியே தெரியுறதே இல்லை. இனிமேலாச்சும்

எதையும் பிளான் பண்ணி செய்யுங்கப்பா.

ஹீரோ, ஹீரோயினுக்கு ஹோட்டல்ல ரூம் போடுறதுல காட்டுற அக்கறையை ஸ்டண்ட் நடிகர்களோட உயிரைக் காப்பாத்துறதுலயும் காட்டுங்க.

******

எந்திரன்...அடுத்து?
ரஜினி திடீர் முடிவு! - இந்த தலைப்பைப் படிச்சதும் "இவரு ஆரம்பிச்சுட்டாருப்பா"அப்படின்னுதான் நினைச்சேன். ஆனா இந்த தடவை வேற மாதிரி அறிவிப்பு கசிஞ்சிருக்கு.

"யூத்ஃபுல் அன்ட் கல்ர்ஃபுல்லா இந்தப்படம் அமையணும். இந்தப் படத்துக்குப்பிறகு நான் பண்ணும் படங்கள் எல்லாமே என் வயதிற்கேற்ப உள்ள கேரக்டர்கள் பண்ணவே விரும்புறேன்."அப்படின்னு ரஜினி சொல்லிட்டாராம்.

இத...இதத்தான் சார் நாங்க எதிர்ப்பார்க்குறோம். குறிப்பிட்ட வயசைத்தாண்டினதும் அமிதாப் இந்தப் பாதையில ரொம்பச்சரியா பயணம் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. ஆனா நம்ம நடிகர்திலகத்தை தமிழ்சினிமா, கடைசி பதினைந்து ஆண்டுகள் ரொம்ப நல்லபடியா பயன்படுத்திக்காம விட்டுடுச்சு. அதற்குக் காரணம் நம்ம யூத்து(?!) எல்லாரும் அவரு மேல காட்டின அதீத மரியாதைதான்.

அவருக்கு அந்த மதிப்பு கொடுத்தது சரிதான். ஆனா படப்பிடிப்புல அவர்கிட்ட அதிகமா வேலை வாங்கினா அந்த மகாகலைஞன் வருத்தப்பட்டிருப்பாருன்னா நினைக்குறீங்க... இல்ல...கண்டிப்பா சந்தோஷமாத்தான் ஒத்துழைப்பு கொடுத்திருப்பார்.

இது அவருக்கு மட்டுமில்லைங்க, ஒவ்வொருத்தர் வீட்டுல உள்ள பெரியவங்களுக்குமே நாம கொடுக்குற மரியாதையைக் காட்டிலும் அவங்களால நமக்கு இன்னும் பிரயோஜனம் இருக்குன்னு ஒரு உணர்வுதான் அவங்களுக்கு முக்கிய தேவை.

அதிகம் பழக்கமில்லாத ஒரு நண்பர் குடும்பத்து திருமணவிழாக்கு நீங்க போறீங்க. அங்க உங்க நடவடிக்கை எப்படி இருக்கும்?

உங்க உறவினர் அல்லது நண்பர் இல்லத்திருமணத்துல கல்யாண ஏற்பாடுகள்ளயும் பங்கெடுத்துக்குறீங்கன்னு வெச்சுகுவோம்.இந்த இடத்துல உங்க நடவடிக்கைகள் எவ்வளவு உற்சாகமா இருக்கும்? இந்த வேறுபாடு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

பெரியவங்களை சும்மா இருக்கவெக்கிறது மரியாதை இல்லை. அவங்களை நல்ல முறையில பயன்படுத்திக்கிறதுதான் உண்மையான மதிப்பு.அதுக்காக ஒரு சில குடும்பங்கள்ல மருமக சீரியல் பார்த்துகிட்டு, மாமியாரை மட்டும் சமையல் செய்யச்சொல்றதோ, கடைசிநாள்ல மாமனாரை மின் கட்டணம் செலுத்த அனுப்புறதோ தப்புங்க.

இனி வரும் காலங்கள்ல ரஜினியோட  வயசுக்குத் தகுந்த கம்பீரமான கேரக்டர் கொடுத்தா அதுவும் மறக்கமுடியாத படங்களா அமையும்.

ரஜினியை என்றும் இளமையா பார்க்க நினைக்கிற ரசிகர்களுக்காக பிளாஷ்பேக்ல ஒரு பதினைந்து நிமிடங்கள் மட்டும் அந்த மாதிரி கெட்அப்ல சில காட்சிகள் வெச்சிடலாம்.

நானே இவ்வளவு யோசிக்கிறப்ப நீங்களும் ஹோம் தியேட்டர விட்டு கொஞ்ச நேரமாச்சும் வெளியில வந்து யோசிங்கப்பா.

******

எந்த ஒரு இடத்திலும் விதிவிலக்குகள் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படி தமிழ்த்திரைப்படத்துறையின் முக்கியமான முன்னுதாரணமாக இருப்பது AVM Productions.

எதையும் பிளான் பண்ணியேதான் அவர்கள் செய்வார்கள் என்பதை புத்தகங்களில்தான்

படித்திருந்தேன். நேரில் உணர்ந்த அனுபவம் என்றால் தமிழகத்தையே ஓ போட வைத்த "ஜெமினி" படத்தின் பட பூஜையின்போதே ரிலீஸ் தேதியை அறிவித்தார்கள். நான் கூட ஆச்சர்யப்பட்டேன்.

இதெல்லாம் நடக்குற விஷயமான்னு எனக்கு வந்த சந்தேகம் நிரூபணமானுச்சு. சொன்ன தேதியில அவங்க ஜெமினியை ரிலீஸ் பண்ணலை. ஆமாங்க. ரெண்டு நாள் முன்னாலயே வெளியிட்டுட்டாங்க.

ஆனா அவங்களாலயே ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தோட ரிலீஸ் தேதியை சொல்லமுடியலைன்னுங்குறது விதிவிலக்குதான்.

அப்புறம் ஏ.வி.எம். சரவணனின் எளிமை எல்லாரும் கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒண்ணு. ஆனா சின்ன நடிகர்கள் கூட பந்தா பண்றதை என்னால தப்புன்னு சொல்லமுடியலை. அதுக்கு காரணமா மக்கள்தானே இருக்காங்க.

நடிகர், நடிகைகள் பொது இடத்துக்கு வந்தா ரயில் இஞ்சின் பின்னாலயே ஒட்டிகிட்டு இருக்குற பொட்டி மாதிரி கூட்டம் கூடுனா அவங்க இப்படித்தான் தெறிச்சு ஓடுவாங்க.

ஏ.வி.எம் நிறுவனம் தொடர்பா எந்த பத்திரிகையில செய்தி வந்தாலும் சம்மந்தப்பட்ட பத்திரிகைக்கு நன்றி சொல்றது சரவணன் சாருடைய வழக்கமாம். இதைக்கேட்டு நான் ரொம்பவும் வியப்படையலை. ஏவி.மெய்யப்பன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, மனதில் நிற்கும் மனிதர்கள், ஏ.வி.எம் 60 - இந்த புத்தகங்களை எல்லாம் படிச்சு முடிச்சதும் நான் கத்துக்க நிறைய நல்ல விஷயங்கள் இருந்ததைக் குறிப்பிட்டு கடிதம் எழுதினேன்.

மூன்று முறையும் அவர் கையெழுத்துடன் பதில் கடிதம் வந்தது. எல்லாரையும் மதிக்கிற இந்த பண்பும் நாம கத்துக்க வேண்டிய ஒண்ணுதான்.

ஏ.வி.எம் ஸ்டுடியோவுல அர்ஜூன் நடிச்ச "வாத்தியார்" படத்தின் எடிட்டிங் வேலை நடந்துகிட்டு இருந்தப்ப பீட்டாகேம் பிளேயர் எடுத்துகிட்டு அங்க போயிருக்கேன்.

******

ராமசாமி மெஸ் - சினிமாத்துறையில் இந்தப் பெயர் மிகவும் பிரபலம். ரஜினி, கமல்,

விக்ரம்,அஜித்,விஜய்  அப்படின்னு தொடங்கி இன்றைய நடிகர், நடிகை வரை இந்த மெஸ் சாப்பாட்டை ரொம்பவும் விரும்பி சாப்பிடுவாங்களாம்.

யார் யாருக்கு பிடிச்சதுன்னு ஒரு லிஸ்ட் போட்டுருக்காங்க. எனக்கு அந்த வெரைட்டிகள் பேர் எல்லாம் தெரியாது. தொலைக்காட்சி நிகழ்ச்சி போஸ்ட்புரொடக்ஷன் ஸ்டுடியோவுல வேலை செய்தப்ப பல நாட்கள் ராமசாமி மெஸ்லதான் சாப்பாடு வாங்கிட்டு வருவாங்க. மதிய சாப்பாட்டை (சைவம்தான்)ரொம்ப திருப்தியா சாப்பிட்டுருக்கேன்.

சூரியகதிர் - ஜனவரி 16-31, 2010 இதழில் வெளிவந்த தகவல்களை அடிப்படையா வெச்சுதான் இந்த கட்டுரையை எழுதியிருக்கேன்.

13 கருத்துகள்:

  1. //ஆங்கிலப்படங்களோட கதையை சுடுற நம்ம ஆளுங்க அவங்களோட திட்டமிடலை மட்டும் திரும்பிக்கூடப்பார்க்குறது இல்லை. நாட்டைக் காப்பாத்த உயிர்த்தியாகம் செய்யுறதுலயாவது ஒரு பெருமை இருந்துச்சு. இந்த மாதிரி ஹீரோக்கள் பேர் வாங்க உயிரிழக்குற ஸ்டண்ட் நடிகர்கள் பற்றி வெளியே தெரியுறதே இல்லை. இனிமேலாச்சும்
    எதையும் பிளான் பண்ணி செய்யுங்கப்பா.//

    சூப்பர் தல சரியா சொன்னப்பா. அவனுங்க எல்லாமே பக்கா பிளான்பண்ணி ஒரு விபத்துகூட நடக்காதமாதிரி எடுக்காருனுங்க.. இவனுங்க கல்லாவை நிரப்புறதுலேயே குறியா இருக்குறானுங்க... எப்பத்தான் திருந்துவானுங்களோ...

    எனக்கு ரொம்ப குழப்பா இருக்கே தல... இப்ப என்ன வேலை பார்க்கிறீங்க?

    பதிலளிநீக்கு
  2. @ நாஞ்சில் பிரதாப்

    //எனக்கு ரொம்ப குழப்பா இருக்கே தல... இப்ப என்ன வேலை பார்க்கிறீங்க?//

    என்னோட இ மெயில் writersaran@gmail.com

    உங்களுக்கு இதை ஏற்கனவே அனுப்பினேன். இன்வைட் பண்ணுங்க. தனியா பேசிக்குவோம்.

    பதிலளிநீக்கு
  3. //இனி வரும் காலங்கள்ல ரஜினியோட வயசுக்குத் தகுந்த கம்பீரமான கேரக்டர் கொடுத்தா அதுவும் மறக்கமுடியாத படங்களா அமையும்.//

    சிவாஜி, படையப்பா போன்ற கதைகள் ரஜினிக்கு ஏற்றவைதான். அவர் ஒரு நடிகர். இளமையாக நடிப்பதும் நடிப்புதான். அவரது சுறுசுறுப்பு, வேகம் ஆகியவை இன்றைய இளைஞர்களுடன் போட்டி போடும் அளவு இல்லையென்றால் மட்டுமே அவர் சற்று வயதான வேடங்களுக்குச் செல்லலாம். மற்றபடி அவரது சுறுசுறுப்பு இருக்கும்வரை அவர் நாயகனாகவே தொடரலாம். தொடரவேண்டும்.

    இன்றைய பல இளைஞர்களை விட அவர் சுறுசுறுப்பானவர் என்பதே எனது கருத்து. அவரது வேகத்தின் முன், சிம்பு, பரத், போன்றவர்கள் எல்லாம் தூசு என்பது என் கருத்து.

    உடல்மொழியிலும் ரஜினி இன்றைய இளம் நடிகர்களைவிட இளைமையாகவே இருக்கிறார். பிரசாந்த், அஜித் போன்றவர்களின் தொப்பையையும் ரஜினியின் வயிற்றையும் கொஞ்சம் பாருங்களேன்.

    விஷால் போன்றவர்களைவிட ரஜினியின் குரல் கம்பீரமாகவே ஒலிக்கிறது.

    அப்புறம் ஏன் ரஜினி தன் வயதிற்கு ஏற்ற பாத்திரத்திற்கு போக வேண்டும் என்கிறீர்கள்? அவரால் இளைஞனாக திரையில் நடிக்கமுடியும் வரை நடிக்கட்டுமே!

    பதிலளிநீக்கு
  4. @SUREஷ் (பழனியிலிருந்து)

    உங்களின் கருத்தும் ஏற்புடையதுதான்.

    ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால், சிவாஜி படத்தில் அவரது இளமைக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு திரைக்கதையில் கவனம் இல்லை என்பது என்னுடைய கருத்து.

    அவர் இதே கெட் அப்பில் நடிப்பதில் எனக்கு வயிற்றெரிச்சல் இருப்பதாக தவறாக எண்ணிவிட வேண்டாம். திரைக்கதையையும் அதே போல் வேகத்துக்கு ஏற்றவாறு அமைக்கவில்லை என்றால் ரசிகர்களுக்கு எதையோ இழந்தது போல் தோன்றுமே என்றுதான் சொல்கிறேன்.

    மேலும் மூன்று ஆண்டுகள் இடைவெளி என்று இருப்பதால் அவரது திறமை நிறைய பயன்படுத்தாமல் விடப்படுகிறதோ என்ற எண்ணம் என் மனதில் உண்டு.

    அவர் படங்கள் என்றால் திருவிழாதான். ஆனால் மூன்றாண்டுகள் வரை திருவிழா இல்லை என்றால் நன்றாகவா இருக்கும்.?

    பதிலளிநீக்கு
  5. தயக்கமில்லாமல் கருத்துக்களை நல்லா சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  6. தயக்கமில்லாமல் கருத்துக்களை நல்லா சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  7. ajith poi ஸ்டண்ட் நடிகர்களுக்கு ஹோட்டல்ல ரூம் போட்டு avankaloda work pannalam eana ajithu nadika theriyala atleast athai ya vathu seiyatum.........

    பதிலளிநீக்கு
  8. //இது மாதிரி படப்பிடிப்புகள்ல ஹீரோக்கள் பேர் வாங்குறதுக்காக நிறையபேர் உயிரையும் உடல் உறுப்புக்களையும் இழந்துகிட்டு இருக்காங்க.//

    இந்த கருத்தில் முற்றிலும் நான் வேறுபடுகிறேன்.

    ஹீரோக்கள் பெயர் வாங்க அல்ல.. அது அவர்கள் தொழில் அல்லது வேலை , அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். இதை அவர்கள் தெரிந்தே தான் செய்கிறார்கள் அப்படி இருக்கும் போது இதில் ஹீரோவை குறை கூற என்ன காரணம் இருக்கிறது.

    ஒரு உயிர் என்பது விலை மதிக்க முடியாதது தான் இதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்க போவதில்லை, ஆனால் அது ஹீரோ என்பவருக்காக செய்யும் வேலையினால் உயர்வோ தாழ்வோ அடைவதில்லை. இதே வேலையை வேறு பணிக்காக செய்தால் இதை யாரும் பெரிய குற்றமாக கருதுவதில்லை, பாவம் வேலை செய்யும் போது இறந்து விட்டார் என்று கூறுகிறார்கள் ஆனால் ஹீரோ டூப் என்பதால் இங்கே பழி ஹீரோ மேல் வருகிறது.

    நான் ஹீரோவிற்கு வக்காலத்து வாங்கவில்லை, இதற்கும் ஹீரொவிற்க்கும் சமபந்தம் இல்லை அவரது தொழிலை செய்யும் போது இறந்து விட்டார் அவ்வளவே! இதற்க்கு அஜித் கண்டிப்பாக அவருக்கு பொருளுதவி செய்து இருப்பார், அதை மட்டும் தான் செய்ய முடியும்.

    என்னதான் திட்டமிட்டு செய்தாலும் இதைப்போல உயிரழப்புகள் தவிர்க்க முடியாதது, யாரும் சாகட்டும் என்று நினைப்பதில்லை. அஜாக்கிரதையால் இறந்து இருந்தால் மட்டுமே குழுவினர் தவறாக கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  9. @ கிரி

    நான் சொல்லும் விஷயம் ஹீரோக்கள் பேர் வாங்குவதற்காக இப்படி டூப் போடும் நடிகர்களின் பாதுகாப்புக்காக தனி ஏற்பாடுகள் செய்திருந்தால் உயிர்கள் போக வாய்ப்பே இல்லை என்பதுதான்.

    அந்த குட்டை அறுநூறு அடி ஆழம் என்று சொல்கிறார்கள்.நிச்சயம் ஆங்கிலப் படப்பிடிப்பு என்றால் பதினைந்து அடி அல்லது இருபது அடி ஆழத்தில் குறிப்பிட்ட தூரத்திற்கு இரும்பு வலை அமைத்து ஆக்சிஜன் சிலிண்டர் சகிதமாக மீட்பு வீரர்கள் ஒரு சிலருடந்தான் களம் இறங்கி இருப்பார்கள்.இதற்கு பட்ஜெட் ஒத்துழைக்காது என்றால் ஸ்டன்ட் வீரர்களின் உயிரை மதிக்காத அலட்சியம் என்றுதானே அர்த்தம்.

    இது தல அஜித் அவர்களுக்கு மட்டுமின்றி மற்ற பெரிய நடிகர்களுக்கும் தெரியாது என்று மட்டும் சொல்லாதீர்கள். அந்த நீச்சல் வீரர் இரண்டு முறை படகில் இருந்த கயிறைப் பிடித்து மேலே ஏறி வந்திருக்கிறார். மூன்றாவது முறை உள்ளே போனதற்கு காரணம், மிகவும் சொர்வடைந்திருப்பதால் என்பதால்தான் இருக்கும்.

    நான் மேலோட்டமாக எழுதியிருப்பதாக நீங்கள் நினைக்கலாம். இது குறித்த விளக்கமான பதிவை நான் விரைவில் எழுதுகிறேன்.

    ஆனாலும் மிக நாகரீகமாக உங்கள் மறுப்பை பதிவு செய்த விதம் எனக்கு பிடித்திருக்கிறது. இது போன்ற ஆரோக்கியமான விவாதத்தை நாம் தொடருவோம். பதிவுலகத்துக்கு பல கருத்துகள் கிடைத்தால் நல்லதுதானே.மீண்டும் சிந்திப்போம் நண்பரே.

    பதிலளிநீக்கு
  10. //அந்த குட்டை அறுநூறு அடி ஆழம் என்று சொல்கிறார்கள்.நிச்சயம் ஆங்கிலப் படப்பிடிப்பு என்றால் பதினைந்து அடி அல்லது இருபது அடி ஆழத்தில் குறிப்பிட்ட தூரத்திற்கு இரும்பு வலை அமைத்து ஆக்சிஜன் சிலிண்டர் சகிதமாக மீட்பு வீரர்கள் ஒரு சிலருடந்தான் களம் இறங்கி இருப்பார்கள்.இதற்கு பட்ஜெட் ஒத்துழைக்காது என்றால் ஸ்டன்ட் வீரர்களின் உயிரை மதிக்காத அலட்சியம் என்றுதானே அர்த்தம்.//

    சரண் இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.


    பொதுவாக நம் நாட்டில் எந்த ஒரு வேலையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருக்காது, ஆனால் அதே சிங்கையில் மிகச்சிறப்பாக இருக்கும். பாதுகாப்பு சரியாக இல்லாமல் பணியிடத்தில் காணப்பட்டால் அந்த காண்ட்ராக்ட் எடுத்தவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். காரணம் இங்கே உயிருக்கு அதிக மதிப்பு கொடுக்கிறார்கள் நம்ம ஊரில் அது மிக மிக குறைவு, இதற்க்கு எடுத்துக்காட்டாக எந்த பாதுகாப்பு சாதானங்களும் இல்லாமல் கட்டிட்டத்தில் மிக உயரமான இடத்தில் வேலை செய்யும் நம்மவர்களை கூறலாம்.

    நான் கூற வருவது அவர்கள் செய்வது சரி என்று நியாயபடுத்தவில்லை இது அந்த ஒட்டு மொத்த குழுவினரின் தவறு , இதற்க்கு எளிதாக ஹீரோவை அனைவரும் குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே.

    "ஹீரோக்கள் பேர் வாங்குறதுக்காக நிறையபேர் உயிரையும் உடல் உறுப்புக்களையும் இழந்துகிட்டு இருக்காங்க." இதுல பார்த்தீங்கன்னா மொத்த பழியும் இவர் மேல வருது.

    //ஹீரோ, ஹீரோயினுக்கு ஹோட்டல்ல ரூம் போடுறதுல காட்டுற அக்கறையை ஸ்டண்ட் நடிகர்களோட உயிரைக் காப்பாத்துறதுலயும் காட்டுங்க.//

    இதுவே நியாயம்.

    //நான் மேலோட்டமாக எழுதியிருப்பதாக நீங்கள் நினைக்கலாம். இது குறித்த விளக்கமான பதிவை நான் விரைவில் எழுதுகிறேன்.//

    இதற்காக தனிப்பதிவு எழுத வேண்டிய அவசியமில்லை எழுதினால் நான் அதை மறுக்கவில்லை, காரணம் இங்கேயே அதை போதுமான அளவு விவாதித்து விட்டோம்.

    //ஆரோக்கியமான விவாதத்தை நாம் தொடருவோம். பதிவுலகத்துக்கு பல கருத்துகள் கிடைத்தால் நல்லதுதானே//

    இதையே நானும் விரும்புகிறேன் சரண். நன்றி விரிவான விளக்கத்திற்கு.

    குறிப்பு: நான் ரஜினி ரசிகன் அஜித் பிடிக்கும் அவ்வளவே. இது யாராக இருந்து இருந்தாலும் கேட்டு இருப்பேன்.

    பதிலளிநீக்கு
  11. சினிமா விஷயங்கள் ஆச்சரியமூட்டுகின்றன அதே நேரத்தில் இறந்து போன சண்டை நடிகரின் குடும்பத்திற்க்கு என்ன கைம்மாறு செய்தது திரையுலகம்? இனிமேலாவது சண்டைக்காட்சி நடிகர்கள் இன்சுரன்ஸ் பாலிசி எடுத்திருந்தால் மட்டுமே நடிக்கலாம் என்று சட்டம் போடலாம். பதிவுகள் பிரமாதம். பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு