Search This Blog

வியாழன், 21 ஜனவரி, 2010

தினமலருக்காக ஜெனிலியாவிடம் ஒரு பேட்டி - (ஒரு தமாசான கற்பனை)

பாய்ஸ் படம் வெளிவந்தபோது படத்தின் ஹீரோயின் ஜெனிலியாவிடம் ஒரு நிருபர் நேர்காணல் செய்கிறார்.



நிருபர்:
நீங்க படத்துல சித்தார்த்தோட பழைய குப்பைக்கூளங்கள் கிடக்குற ஒரு மோசமான ரூம்ல தங்கியிருந்தீங்க. நிஜ வாழ்க்கையிலயும் அப்படி ஒரு சூழ்நிலை வந்தா என்ன செய்வீங்க?

ஜெனிலியா:
அய்யய்யோ...படத்துல ஒரே ஒரு நாள் அப்படி இருந்ததுக்கே அந்த நாத்தம் பத்துநாள் என்னைய விட்டுப் போகலை. ஒரு தினமும் ஒரு பாட்டில் பினாயிலும் ரெண்டு பாக்கெட் பிளீச்சிங் பவுடரும் போட்டு குளிக்க வேண்டியதாயிடுச்சு. மறுபடியுமா? நெவர்.

நிருபர்:
நண்பர்களுக்காக படத்துல பாடுனீங்க. இப்ப யாராவது ஒரு விழாவுல உங்களைப் பாடசொன்னா சம்மதிப்பீங்களா?

ஜெனிலியா:
சார்...நீங்க கழுதைகள் கூட்டமா கூடுறதை பார்க்க ஆசைப்பட்டுதானே இப்படி கேட்குறீங்க?

நிருபர்:
படத்துல சிறையில அவதிப்பட்ட காட்சிகள்ல நடிச்ச அனுபவங்களை சொல்லுங்க.

ஜெனிலியா:
அந்தக் காட்சிகள்ல நடிச்ச பிறகு பல நாள் தூக்கம் வரலை. வாந்திதான் வந்தது. அதனால எனக்கு கிடைச்ச ஒரே பலன், வழக்கமா சாப்பிட்ட ரெண்டேகால் இட்லி ஒண்ணே முக்கால் இட்லியா குறைஞ்சுடுச்சு.

இதேபோல் இன்னும் சில கேள்விகளும் விடைகளும் எழுதியிருந்தேன்.எதுக்குன்னுதானே கேட்குறீங்க? தினமலர் குழுமம் ஒரு தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கிற உத்தேசத்துல ஆட்கள் தேவைன்னு விளம்பரம் செய்திருந்தாங்க. நானும் என்னோட தகுதிகளைக் (?!)குறிப்பிட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்தேன்.

திருச்சியில ஒரு ஹோட்டல்லதான் இண்டர்வியூ. முதலில் எழுத்துத்தேர்வு. அந்தக் கேள்வித்தாளைப் பார்த்ததும்தான் பத்திரிகைத்துறையைப் பொறுத்தவரை நம்மைச்சுத்தி நடக்குறத எப்படி வெளிப்படுத்துறோம்னுங்குறது மட்டும்தான் மிகப்பெரிய கல்வித்தகுதின்னு புரிஞ்சது.

பாய்ஸ் படத்துக் கதாநாயகி ஜெனிலியாகிட்ட படு தமாசா கற்பனைப்பேட்டி எடுங்கன்னு ஒரு கேள்வி வந்துருந்துச்சு. மேலே உள்ள கேள்வி பதில் அப்ப நான் கற்பனை செய்து எழுதினதுதான்.

என்னோட விடைத்தாளைப் பார்த்துட்டு,"நீங்க சினிமா கிசுகிசு எழுதுற வேலையை மட்டும்தான் ஒழுங்கா செய்வீங்க போலிருக்கே. ஆனா நாங்க இன்னும் எதிர்பார்க்குறோம்.உங்க தகுதிகளை மேம்படுத்திகிட்டு மறுபடி விண்ணப்பம் செய்ங்க."அப்படின்னு நேருக்குநேராவே சொல்லிட்டாங்க.

வேலை தேடிப்போற பெரும்பாலான இளைஞர்கள் எதிர்பார்க்குறது இதுதான். ஆனா நிறைய இடத்துல எதனால நிராகரிக்கிறோம்னே சொல்றது இல்லை.இன்னும்  பல இடங்கள்ல உடனடியா முடிவைக்கூட சொல்றது இல்லை. பல நாள் இந்த வேலை கிடைச்சுடும்னு நினைச்சு கடைசியா இல்லைன்னு தெரியவரும்போது ஏற்படுற வேதனை இருக்கே...அதை நான் ஆறு வருஷமா அனுபவிக்கிறேன்.

அன்னைக்கு வேலை இல்லைன்னு  உடனடியா சொன்னதும் கூட வந்திருந்த என் நண்பரும் நானும் திருப்தியா போய் ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு சோனா தியேட்டர்ல போய் படம் பார்த்துட்டுதான் ஊருக்குத்திரும்புனோம்.

என்ன படம்னுதானே கேட்குறீங்க.

"பாய்ஸ்"


படமே பார்க்காம எப்படி ஜெனிலியாவை கலாய்க்க முடிஞ்சதுன்னுதானே உங்களுக்கு சந்தேகம்? எல்லாம் பத்திரிகைகள்ல படத்தைப் பத்தி அப்பப்ப வந்த செய்திகள் செய்த உதவிதான்.

5 கருத்துகள்:

  1. கெட்டதுலயும் ஒரு நல்லது.
    அது சரி அவனுங்க கொடுத்த டெஸ்டே ஒரு மொக்கைத்தனமா இருக்கு அதுல எந்தமாதிரி அவங்க எதிர்பார்க்கறாங்களாம். இதெல்லாம் ஒரு இன்டர்வியு...? என்னத்தல இது?

    பதிலளிநீக்கு
  2. @ நாஞ்சில் பிரதாப்

    அந்த நேர்காணல் நடைபெற்ற நாளுக்கு முன்னாள் ஒரு வாரம் செய்தித்தாளை கூர்ந்து படித்திருந்தால் விடை அளித்திருக்கலாம் நண்பா. மொக்கை கேள்வி ஒன்னே ஒண்ணுதான். மத்த கேள்விகள்தான் என்னைய எழுப்பி விட்டுச்சு. தினமலரில் பணிபுரியும் சீனியர் நிருபர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு நண்பரானார். அவர் பல தகவல்கள் சொன்னதைப் பார்த்ததும் அவங்க இண்டர்வியூல கொடுத்த கேள்வித்தாள் சரியானது, நான்தான் அப்ப எந்த விஷயமும் தெரியாத ஆளா போய் இருக்கேன்னு புரிஞ்சது.

    பதிலளிநீக்கு
  3. ஆனா நிறைய இடத்துல எதனால நிராகரிக்கிறோம்னே சொல்றது இல்லை.இன்னும் பல இடங்கள்ல உடனடியா முடிவைக்கூட சொல்றது இல்லை.

    உண்மை தான் நண்பரே...

    பதிலளிநீக்கு