Search This Blog

வெள்ளி, 1 ஜனவரி, 2010

...............போட்டியாக பாஸ்போர்ட் அலுவலக வாசலிலும் பிடுங்கப்பட்ட வேட்டி...



காவலாளிகள் லஞ்சம் வாங்குவது அவர்கள் கடமையாம். நீங்கள் அதிர்ச்சி அடையாதீர்கள். இதை தட்டிக் கேட்ட பொதுமக்கள் மீது  தடியடி நடத்தினால் அப்படித்தானே அர்த்தம்.அரசு ஊழியர் பணி செய்வதை தடுத்தால் அவர்களை தண்டிக்க சட்டம் இருக்கிறது...இதைக் கேடயமாக பயன்படுத்திதான் பல அரசு ஊழியர்கள் தவறு செய்கிறார்கள்.
******

விண்ணப்பம் கொடுப்பதற்காக திருச்சிமண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 31.12.2009 அதிகாலைமுதல் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்திருக்கிறார்கள். காவலாளிகள், சிலரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு வரிசையை மீறி அவர்களை உள்ளே அனுப்பியதால்
குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. போலீசார் வந்து தள்ளு முல்லு செய்த பொதுமக்கள் மீது தடியடி செய்திருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தில்  திருவாரூர் பகுதி இளைஞர் ஒருவரின் வேட்டி உருவப்பட்டிருக்கிறது.

இது இன்றைய காலைக்கதிர் நாளிதழில் வெளிவந்த செய்தி.(01.01.2010)

மக்கள் இப்படி அவமானப்பட முக்கிய காரணம் அதிகாரிகள்தான்.

காவலாளிகளின் கடமையை செய்ய விடாமல் பொதுமக்கள் வம்பு செய்ததாக வழக்குப் பதிவார்கள்.

இல்லையா பின்ன...விண்ணப்பம் கொடுக்க பொதுமக்கள் அங்கே சென்றது சமூக விரோதம், மணிக்கணக்கில் காத்திருந்தவர்களைப் புறம் தள்ளி விட்டு அந்த நேரத்தில் வந்தவர்களை உள்ளே அனுப்ப காவலாளிகள் லஞ்சம் வாங்குவது தேச சேவை. இது புரியாத மக்கள் எதற்கு வெளி நாடு போக வேண்டும்.?

தகவல்தொழில்நுட்பஉலகம் அடைந்த முன்னேற்றத்தில் இப்போதும் அதிகாலை முதல் மணிக்கணக்கில் வரிசையில் நின்று டோக்கன் வாங்கி விண்ணப்பம் கொடுக்கவேண்டுமாம்... என்ன கொடுமை சரவணன்?

நிச்சயமாக செல்போன் இல்லாத ஆள் யாரும் அவ்வளவு எளிதில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கப் போவதில்லை. அதனால் குறுஞ்செய்தி மூலமாக விண்ணப்பித்தால்

குறிப்பிட்ட ரகசிய எண்ணை அனுப்பி ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த நேரத்தில் உரிய சான்றிதழ்களுடனும் இந்த ரகசிய எண்ணுடனும் அலுவலகம் வரவேண்டும் என்று எளிதாக நிர்ணயம் செய்துவிடலாமே.

கண்டவர்களும் ரயிலில் இடம்பிடிப்பதைப் போல் இதிலும் செய்துவிடாமல் இருக்கவேண்டும் என்றால் குடும்ப அட்டை எண்ணையோ வாக்காளர் அடையாள அட்டை எண்ணையோ சேர்த்துப் பதிவு செய்யும் முறையை ஏற்படுத்தினால் பிரச்சனை இருக்காது.

அரசு அலுவலகங்களில் தினமும் எவ்வளவு மனுக்கள் பெறப்பட்டன. உரிய காலகட்டத்தில் ஒரு பணியை முடிக்கவில்லை என்றால் ஏன் என்ற காரணத்தை அந்த அலுவலர் பதிவு செய்து பதிவேடு பராமரிப்பதை கட்டாயமாக்கினால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

எந்த முடிவும் தெரியாமல் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் காத்திருப்பதைக் காட்டிலும் ஒரு காரணம் தெரிந்தால் நல்லதுதானே. அலுவலர் சொல்லும் காரணம் நியாயமானதாக இருந்தால் திருவாளர் பொது ஜனத்துக்கு ஆப்பு. தவறாக இருந்தால் அதிகாரிக்கு வேட்டு.

எப்பூடி...

4 கருத்துகள்:

  1. எப்பூடி...

    சூப்பர் ஆனா work out????????????????

    பதிலளிநீக்கு
  2. @ angel

    //எப்பூடி...

    சூப்பர் ஆனா work out????????????????//

    நம்பிக்கையோட காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  3. I feel, the persons who were ready to bribe inorder to get "their" work done, with no consideration for others are to be equally blamed. No use in just blaming the Govt.staff. I agree that most of them live on bribe, but the common man must also realise that it is equally criminal to give bribe.

    பதிலளிநீக்கு
  4. @ Azhagan

    //I feel, the persons who were ready to bribe inorder to get "their" work done, with no consideration for others are to be equally blamed. No use in just blaming the Govt.staff. I agree that most of them live on bribe, but the common man must also realise that it is equally criminal to give bribe.//

    நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் குற்றம் செய்ய மனிதனின் மனம் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கத்தான் செய்கிறது. சட்டம் மற்றும் காவல் துறையிடமிருந்து தப்பவே முடியாது, நேர்மை மட்டும் தான் காப்பாற்றும் என்ற சூழல் வரவேண்டும் என்றால் அரசு ஊழியர்கள் மிகவும் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறேன்.

    தனியார் துறை சரியில்லை என்றால் நாம் ஒதுங்கி விடலாம். ஆனால் சட்டம் சார்ந்த அரசு அலுவலக வேலை என்றால் மக்களுக்கு வேறு எங்கும் புகலிடம் கிடையாது. இதனால்தான் அவர்களின் நடத்தை மிகவும் சரியாக இருக்க வேண்டும் என்று நான் மட்டுமல்ல, சாமானியர்கள் அனைவரும் எதிர்பார்ப்பதுவும் அதுவே.

    லஞ்சம் கொடுக்க நினைக்கும் மக்களுக்கும் நான் ஒரு செய்தி சொல்லி இருக்கிறேன். பதிவின் இறுதி வரிகளில் "அதிகாரி தட்டிக் கழிக்கும் காரணம் நியாயம் என்றால் மனு கொடுப்பவருக்கு ஆப்பு. தவறு என்றால் அதிகாரிக்கு வேட்டு" என்று சொல்லியிருந்தேன்.

    இது போன்ற ஆரோக்கியமான விவாதங்களை இளையபாரதம் எப்போதும் விரும்பும்.

    தங்களின் வருகைக்கு நன்றி அழகன்.தங்களின் தொடர் வருகையை இளையபாரதம் எதிர்பார்க்கிறது.

    பதிலளிநீக்கு