Search This Blog

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

நல்லது சொல்லும் விளம்பரங்கள்



மிட்டாய் தின்றால் அடுத்தவரின் மனைவியை அழைத்துச் சென்று விடலாம் என்ற கீழ்த்தரமான உள்ளடக்கத்துடன் வெளிவந்த விளம்பரம் போலவேதான் நிறைய இருக்கின்றன.

தன் நிறம் குறித்த தாழ்வுமனப்பான்மை, குறிப்பிட்ட பொருள் இல்லை என்றால் உடன் படிக்கும் பிள்ளைகள் கூட மதிக்காது என்று கூறி குடும்ப பொருளாதாரம் தெரியாமல் குழந்தைகளை அடம்பிடிக்கச் செய்தல், உடலுக்கு ஒவ்வாத பொருளை வாங்கித் தரச்சொல்லுதல், மற்றவர் மதிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த நேரத்தில் தேவையற்ற ஆடம்பரத்தால் பொருளாதார சுனாமியில் சிக்கிக் கொள்ளுதல் - இது போன்ற பல தீமைகளுக்கு விளம்பரங்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன என்ற எண்ணம் என் மனதில் அழுத்தமாகவே பதிந்திருக்கிறது.

நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் வரை எங்கள் வீட்டில் தொலைக்காட்சி கிடையாது. தெருவில் உள்ள பலரின் வீட்டிற்கும் சென்று நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன். அப்போது எங்களின் ஒரே விருப்பம், திரைப்படமும் புதிய பாடல்களும் மட்டுமே. விளம்பரம் தொடங்கிய நொடி வேறு சானலுக்கு மாறிவிடுவோம்.  பிறகு நான் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி ஆப்ரேட்டராக இருந்தபோதும் நான் படங்களின் இடையே விளம்பரத்தை ஒளிபரப்பினாலும் அந்த நேரத்தில் வேறு எதாவது பாடல்களையோ, படத்தையோதான் பார்ப்பேன். இந்த அளவுக்கு விளம்பரத்தின் மீது வெறுப்பு இருந்தது.

அதற்காக கொஞ்சம் கூட ரசனையே கிடையாது என்றும் சொல்ல இயலாது. முதன் முதலில் பொதிகை தொலைக்காட்சியில் சாலிடெர் டெலிவிஷனின் விளம்பரம்தான் என்னைக் கவர்ந்தது. இருக்கு இருக்கு இதில் எல்லாம் இருக்கு என்று தொடங்கும் பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடியிருப்பார். அவரது பெயரெல்லாம் அப்போது தெரியாது. ஆனால் அந்த பாடலும் நடனமும் மிகவும் பிடித்துப் போனதால் சென்னைத் தொலைக்காட்சியில் திங்கள்தோறும் அம்பிகாபதி என்ற தொடரைப் பார்க்கச் சென்று விடுவேன்.1992 அல்லது 1993 தொடக்கமாக இருக்கலாம். அந்த தொடர் ஆரம்பிக்கும் முன்பு மட்டுமே அந்த விளம்பரம் ஒளிபரப்பாகும்.

அடுத்தது, ஹமாரா பஜாஜ் விளம்பரம்.இது எந்த ஆண்டு என்று தெரியவில்லை. ஆனால் கோலத்தை அழிக்காமல் ஒதுங்கிச் செல்லுதல், கணவனின் தோள் மீது கை வைத்துக்கொண்டு டூவீலரில் செல்லும் பெண், வயதான தம்பதியரை எதிரில் பார்த்ததும் வண்டியில் உள்ள கைப்பிடியை பிடித்துக்கொள்ளுதல், என்று ஆறு ஏழு சீக்வென்ஸ் கொண்ட இந்த விளம்பரம் ஒரு சில முறைகள் மட்டுமே பார்த்திருக்கிறேன். அதனால் மற்ற சீக்வென்ஸ் நினைவில் இல்லை.

அடுத்தது செயிண்ட் கோபைன் கிளாஸ் விளம்பரம். ஒரு அம்மா, சாப்பிட உட்கார்ந்திருக்கும் தம்பதி மீது தண்ணீரை ஊற்ற வருவார். இவர்கள் பதறிப் போய் விலக, அவர்களுக்கு முன்னால் இருக்கும் கண்ணாடியை சுத்தம் செய்வார் அந்த பெண். இந்த விளம்பரங்களில் எல்லாம் ஓரளவு நம்பகத்தன்மை இருந்தது.


அதன்பிறகு நான் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் அரிதாகிப் போனதால் சில சர்ச்சைக்குரிய விளம்பரங்களைப் பற்றி நாளிதழ்கள், வாரஇதழ்கள் வாயிலாக தெரிந்து கொண்டதுடன் சரி.

அதிலும் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக கேபிள் இணைப்பை துண்டித்துவிட்டதால் எந்த வில்லங்க விளம்பரங்கள் மட்டுமின்றி நல்ல விளம்பரங்களையும் (வருகிறதா என்ன?) காணவில்லை.

பிறகு கடந்த ஆண்டு இறுதியில் டி.டி.ஹெச் ஆண்டனாவை அதற்குரிய டெக்னீஷியன் யாரும் வராததால் நானே பொருத்திவிட்டேன். கலைஞர், பொதிகை, மக்கள், மெகா ஆகியவைதான் தமிழ் சானல்கள்.

இதில் எதோ ஒரு சானலில் பெப்சோடண்ட் பற்பசைக்கான விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது. மூன்று ரூபாய் விலைகுறைவு என்ற விளம்பரம். விலை ஏற்றும்போது அதை லஞ்சம் வாங்குவதைப் போன்று அதிகம் வெளியே தெரியாமல் செய்யும் இவர்கள், விலை குறைப்பை மட்டும் நாடறிய வாக்குப்பதிவைப் போல் நடத்துவார்களே. இதில் எத்தனை கிராம் எடையைக் குறைத்திருக்கிறார்களோ என்றுதான் நினைத்தேன்.

ஆனால் விளம்பரத்தின் இறுதி வாசகம் "அட... இவங்களுக்கும் சமூகத்துமேல கொஞ்சூண்டு பொறுப்பு வந்துடுச்சே..."என்று நினைக்கத் தோன்றியது.

பத்து ரூபாய்க்கு பற்பசை வாங்கிய குழந்தை மீதி மூணு ரூபாய்க்கு ஐஸ்கிரீம் வாங்கி தின்னுட்டேன். என்று மழலை மொழியில் கூறும். உடனே ஒரு பின்னணிக் குரல்," என்ன வேணுன்னாலும் சாப்பிடுங்க...ஆனா உண்மையை சொல்லிடுங்க..." என்று ஒலித்தது.

இந்த அறிவுரை குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். குழந்தைகளை உண்மை சொல்ல வைப்பது அவ்வளவு சாதாரணமான காரியம் இல்லை. இது பற்றி தனிப்பதிவு விரைவில் இளைய பாரதத்தில்.

6 கருத்துகள்:

  1. ம்..விளம்பரங்களில் பல தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தினாலும், சில நல்ல கருத்துக்களோடு ஆழமாக வெளிவருவதில் மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  2. இன்று பள்ளி என்பதால் நேற்று என்னால் வாசிக்கவும் கமெண்டவும் முடியவில்லை


    இப்போ இருக்க vodafone, docomo ad லாம் மத்தவங்கள குறை கூறாமலும் தான் product பத்தி மட்டும் சொல்றதா இருக்கு

    பதிலளிநீக்கு
  3. @ angel

    // இன்று பள்ளி என்பதால் நேற்று என்னால் வாசிக்கவும் கமெண்டவும் முடியவில்லை


    இப்போ இருக்க vodafone, docomo ad லாம் மத்தவங்கள குறை கூறாமலும் தான் product பத்தி மட்டும் சொல்றதா இருக்கு//

    நான் எழுதுனது, அவங்க பொருளைப் பத்தி சொல்றதோட நம்ம கலாச்சாரம், சமூகத்துக்கு நல்ல செய்தி, அடிப்படை நாகரிகம் பற்றி எதையாவது சொல்றாங்களான்னுதான்.

    பதிலளிநீக்கு
  4. //மிட்டாய் தின்றால் அடுத்தவரின் மனைவியை அழைத்துச் சென்று விடலாம் என்ற கீழ்த்தரமான உள்ளடக்கத்துடன் வெளிவந்த விளம்பரம் போலவேதான் நிறைய இருக்கின்றன.

    தன் நிறம் குறித்த தாழ்வுமனப்பான்மை, குறிப்பிட்ட பொருள் இல்லை என்றால் உடன் படிக்கும் பிள்ளைகள் கூட மதிக்காது //

    இது போல் அல்லாமல். பிறர்க்கு உதவி செய்வதைவிட உபத்ரம் செய்யாமல் இருப்பது மேல் அல்லவா அதான் அப்பிடி சொன்னேன்

    பதிலளிநீக்கு
  5. @ angel

    //மிட்டாய் தின்றால் அடுத்தவரின் மனைவியை அழைத்துச் சென்று விடலாம் என்ற கீழ்த்தரமான உள்ளடக்கத்துடன் வெளிவந்த விளம்பரம் போலவேதான் நிறைய இருக்கின்றன.

    தன் நிறம் குறித்த தாழ்வுமனப்பான்மை, குறிப்பிட்ட பொருள் இல்லை என்றால் உடன் படிக்கும் பிள்ளைகள் கூட மதிக்காது //

    இது போல் அல்லாமல். பிறர்க்கு உதவி செய்வதைவிட உபத்ரம் செய்யாமல் இருப்பது மேல் அல்லவா அதான் அப்பிடி சொன்னேன்//

    நீங்கள் சொன்ன கோணத்திலும் யோசிக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். நரி இடம் போனால் என்ன, வளம் போனால் என்ன. மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி. அது போல் மனம் ஆறுதல் அடைய வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  6. என்ன சொல்ல வருகிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அபத்தங்களும் நிறைய இருக்கின்றன.
    கல்யாண் ஜ்வல்லர்ஸ் நம்பிக்கையான நிறுவனம் என்பதை விளக்க எடுத்துக் கொண்ட கரு ....பிரபு ,அப்பாவாக வருகிறார்.தன் மகள் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டும் விதமாக அமைந்த விளம்பரம் ஒரு சின்ன கதையோடு சொல்லப் பட்டிருந்தது.ஓகே

    பதிலளிநீக்கு