Search This Blog

செவ்வாய், 5 ஜனவரி, 2010

ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதில் உள்ள சிக்கல்கள்


அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் தமிழக அரசு நியமித்துள்ளது. அவர்களின் அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ளும் தற்காலிக ஏற்பாடுதான் இது என்று சமாதானம் சொன்னாலும் இப்படி சொல்லியே ஒவ்வொரு முறையும் அவர்களின் பணிக்காலத்தை நீட்டிப்பது ஒன்றும் அரசுக்கு கடினமான காரியம் இல்லை.

இதனால் அதிர்ந்து போய் இருப்பது படித்து முடித்து பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தை நம்பியிருக்கும் அப்பாவி இளைஞர்கள்தான்.

இந்தியா மாதிரி மக்கள்தொகை அதிகம் உள்ள ஒரு நாட்டில் அனைவருக்கும் ஓரளவாவது சமமான வாய்ப்பு கொடுக்கும் வகையில் ராணுவத்தைப் போல் இருபது ஆண்டுகள் மட்டும் பணிபுரிய வாய்ப்பு வழங்கலாம். பிறகு அவர்கள் திறனைப் பொறுத்து பணியை நீட்டிக்கலாம்.

ஆனால் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் மீண்டும் நியமித்து வாழவேண்டிய இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை யாரிடம் போய் முறையிடுவது என்றுதான் தெரியவில்லை.


ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மிக மெதுவாக கணிணியை இயக்குகிறாரே என்று வரிசையில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். அதைக் கேட்ட அந்த அலுவலர், நாங்க எல்லாம் இந்த வசதியைக் கேட்டோமா...ஓய்வு பெற வேண்டிய வயசுல எங்க நாங்க கணிணியை கத்துக்குறது? எப்பவும் போல எங்களை பதிவேடுகளோடயே வேலை பார்க்க விட மாட்டெங்குறாங்களே... என்று சலித்துக்கொண்டார். விதிவிலக்குகள் வேண்டுமானால் மிகச்சிறிய அளவில் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான அரசு ஊழியர்களின் மனோபாவம் இதுதான். இதில் எந்த அனுபவத்தை அரசு மறுபடி பயன்படுத்தப்போகிறதோ தெரியவில்லை. இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்யுமா?

6 கருத்துகள்:

  1. மிக சிறப்பானதொரு பதிவு.சாதனை பட்டியலை புரட்டிப்பார்த்தால் இளைஞ்ர்களின் பங்கு தான் அதிகமாக இருக்கிறது. முதியவர்களின் சிந்தனைகள் வீரியமாக இருந்தாலும் செயல்பாடுகள் காலதாமதமாகவே இருக்கிறது, வாழைமரங்கள் வழிவிடுவதைப்போல முதியவர்களும் விழிவிடுவதுதான் நல்லது.

    பதிலளிநீக்கு
  2. @ இடைவெளிகள்

    தங்களின் முதல் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பெரும்பாலான அரசு ஊழியர்களின் மனோபாவம் இதுதான். இதில் எந்த அனுபவத்தை அரசு மறுபடி பயன்படுத்தப்போகிறதோ தெரியவில்லை............ம்ம்மம்மம்ம்ம்ம்......... அரசு யோசிக்க வேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான அலசல்... முயற்சிக்கு வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
  5. ஒட்டுமொத்தமாக வயதான ஊழியர்களை குறைசொல்ல முடியாது,இளைஞர்களுக்கு வாய்ப்பு குறைகிறது என்றாலும் அனுபவம் ரீதியாக
    வயதானவர்களை மிஞ்சுவது மிக கடினம்.இருபக்கமும் நிறை/குறைகள் இருக்கத்தான் செய்கிறது நண்பா.இருப்பினும் இடுகை நன்று !!!

    பதிலளிநீக்கு
  6. @ Chitra

    //பெரும்பாலான அரசு ஊழியர்களின் மனோபாவம் இதுதான். இதில் எந்த அனுபவத்தை அரசு மறுபடி பயன்படுத்தப்போகிறதோ தெரியவில்லை............ம்ம்மம்மம்ம்ம்ம்......... அரசு யோசிக்க வேண்டிய விஷயம்.//

    நிறைய விஷயத்தில் மக்கள் மட்டும்தான் யோசிக்கவேண்டியிருக்கிறது டீச்சர்.
    *************
    @ அண்ணாமலையான்

    அருமையான அலசல்... முயற்சிக்கு வாழ்த்துக்கள்.....//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    *********



    அவர்கள் ஒய்வு பெறும் முன்பே இளைய தலைமுரயுயை நியமித்து பயிற்சி அளிக்க சொல்லலாமே. அதை விடுத்து ஒவ்வொரு முறையும் யாராவது மரணமடைந்தால் மட்டுமே விதிமுறைகளை பற்றி அரசு யோசிப்பது போலவேவா எல்லா காரியத்திலும் செய்ய வேண்டும்?

    ஆனால் ஒன்று நண்பா...உலகில் அனைவருமே வாழத்தான் நினைக்கிறார்கள். அதற்குத் தேவையான குறைந்தபட்ச பொருளாதாரத்தைக் கூட பெற முடியாத சூழல் என்றால் அதற்கு முக்கிய காரணம் வேலையின்மைதான். இட ஒதுக்கீடு என்பது சில விஷயங்களிலும் இருக்க கூடாது. ஆஸ்திரேலியா மாதிரி மக்கள் தொகை இல்லாத நாடுகளில் செய்ய வேண்டிய விஷயங்களில் இந்தியா மாதிரி மக்கள் தொகையே பிரச்சனையாகவும் பலமாகவும் இருக்கும் நாட்டில் இது தேவையா என்பதுதான் என் கேள்வி.

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பா.
    **********

    பதிலளிநீக்கு