Search This Blog

திங்கள், 21 டிசம்பர், 2009

என்னது?...மூணு மணி நேரத்துல அறுபதாயிரமா...



நிறைய பெண்கள் கொடூரமான நெடுந்தொடர்களால குடும்பத்துல நிம்மதியை இழந்து தவிக்கிறாங்க. இது தெரிஞ்சும் அந்த போதையை விட முடியாம பலர் அவதிப்படுறதை யாரும் மறுக்க முடியாது.

அது எப்படி தொலைக்காட்சி பார்க்காம இருக்க முடியும்? எங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு இந்த தொடர்கள்தானே.அப்படின்னு சில பெண்கள் சொல்லுவாங்க. இவ்வளவு தொடர்களைப் பார்த்தா என்ன ஆகும்...அவங்களை அறியாமலே ஆழ்மனசுல ஒரு அச்சத்தை விதைச்சுடும். இது புரியாம குடும்ப உறுப்பினர்கள் கிட்ட வார்த்தை வன்முறையைப் பயன்படுத்தி தனித்தீவாகிடுவாங்க.

நிறைய குடும்பங்கள்ல என்ன பிரச்சனை தெரியுமா? இன்றைய பெண்களுக்கு அன்றாட குடும்ப வேலைகளே மிகப் பெரிய பணிச்சுமையா தெரியுது. உண்மையில் அவ்வளவு வேலை இல்லை.

பின்ன ஏன் அந்த உணர்வு?

வேலைக்குப் போகும் பெண்களுக்கு மற்றவங்க சின்ன சின்ன வேலைகளைக் கூட செய்யாம இருக்குறாங்களேன்னு ஆத்திரம் வரும். வீட்டுலேயே இருக்குறவங்களுக்கு பகல் நேரத்துல மட்டும் குறைந்தது ஐந்து தொடர்களைப் பார்க்க முடியாத நிலை வரும்போது கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு கோபம் வரும்.

போதைப் பழக்கத்துக்கு அடிமையானவங்க அது கிடைக்கலைன்னா எப்படி வெறிபிடிச்சு அலையுவாங்களோ...அதுக்கு கொஞ்சமும் கொடுந்தொடர் போதை குறைஞ்சது இல்லை.

என்ன...இவங்க கோபம் குடும்பத்துக்குள்ள கொஞ்சமும் நியாயமே இல்லாத வழியிலதான் வெடிக்கும். அதை எதிர்கொள்ளும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு இவ என்ன இந்த அநியாயம் பண்றா...அப்படின்னு புரியாமயே விரோதத்தை அதிகமாக்கிடுவாங்க.

இதன் ஒரு பகுதிதான் தன் பிறந்த வீட்டு சொந்தம் தவிர கணவரோட அப்பா அம்மாவுக்கு கூட எதுவும் செய்யக்கூடாதுன்னுங்குற பிடிவாதம்.

அப்ப வீட்டுக்குள்ள இருக்குற அந்தப் பொட்டியை என்னதான் செய்யுறது? அதனால நல்லதே இல்லையா? அப்படின்னு நீங்க கேட்குறது புரியுது.

இந்த கிரீமைப் பூசிகிட்டா நீங்க சிரிச்சுகிட்டே போய் அந்தக் கிணத்துல விழுந்து சாவீங்க. ஆனா உலகம் முழுவதும் பிரபலமாயிடுவீங்கன்னு சொன்னா நாம செய்வோமா?

நிச்சயம் மாட்டோம். ஆனா பல விளம்பரங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் சில விஷயங்களை - நமக்கு தீமை தரக்கூடியதுன்னு தெரிஞ்சும் விட முடியாத அளவுக்கு நம்ம மனசை கட்டிப்போட்டு வைக்கிற வேலைகளை செய்துகிட்டு இருக்கு.

நேரடியா எந்த பாதிப்பும் இல்லை. அதாவது நான் உங்க குடும்பத்துக்குள்ள வந்து நெரடியா சண்டை போட்டா அது குற்றம். அப்படி பண்ணாம நான் உங்க மனசை என்னவோ பண்ணி நீங்களே உங்க குடும்பத்துக்குள்ள அடிச்சுக்குங்கன்னு விட்டுட்டா...அதுக்குப் பேர் என்ன?...

என்ன?...

இதுதாங்க எனக்கும் புரியலை.

இப்ப விஷயத்துக்கு வர்றேன்...(அடப்பாவி அப்ப இது வரைக்கும் வெட்டியாத்தான் பேசிகிட்டு இருந்தியா?)

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு உதாரணம் சொல்லணும்னா வாகனத்தை ஒப்பிடலாங்க.

வண்டியில ஆளையும் ஏத்தலாம்...ஆள் மேல வண்டியையும் ஏத்தலாம்.(எப்படி நம்ம பஞ்ச் டயலாக்கு?...

இது புரிஞ்சா நீங்க சூப்பரு...புரியலைன்னா...எப்படியாச்சும் போங்க.

சாக்லெட் படத்து ஸ்டில் இருக்கு. அந்த மேட்டருக்கு இன்னும் வரலியேன்னு நீங்க எல்லாம் பொறுமை இழக்குறது தெரியுது. வர்றேன்...வர்றேன்...


16 - 31 டிசம்பர் 2009ந் தேதியிட்ட தேவதை மாதமிருமுறை இதழ்ல (ஆங்...நம்ம ராமலக்ஷ்மி அக்காவோட வலைப்பக்கம், ரம்யா அக்காவோட தன்னம்பிக்கை பத்தி எழுதியிருந்தாங்களே...அதேதான்.) ஒரு சகோதரி, மூணுமணி நேர வேலையில 60,000.00 ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது பத்தி சொல்லியிருந்தாங்க.

ஒரு கிலோ சாக்லெட் தயாரிச்சு விற்பனை செய்தா 200 ரூபா லாபம் கிடைக்குதுன்னு சொன்னதோட மூலப்பொருள் எங்க வாங்கலாம், செய்முறை என்ன அப்படின்னு எல்லாம் ஓரளவு விபரம் இருக்கு. சாக்லெட் கலர்லேயே மூணு பக்கம் இந்தக் கட்டுரை வந்திருக்கு.

அறுபதாயிரம் ரூபாய் வருமானம்னுங்குறதை விட இன்னொரு விஷயம்தான் இந்தக் கட்டுரையை எழுத தூண்டுகோலா இருந்துச்சு.

அவங்க சாக்லெட் செய்ய ஆரம்பிச்சது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துதானாம்.

தொலைக்காட்சித் தொடர்களால் குடும்பத்தையே பாதாளத்துக்கு கொண்டு செல்லும் பெண்கள் சிகரம் நோக்கி முன்னேறும் இந்த சகோதரியையும் கவனிப்பது நல்லது.

ஊதுற விசிலை ஊதிட்டேன். இனிமே உங்க விருப்பம்.

நன்றி: தேவதை 16-31 டிசம்பர் 2009 இதழ்

3 கருத்துகள்:

  1. நல்ல தொழிலா இருக்கே நண்பா. நம்மளும் ஆரம்பிச்சிடுவோமா?? :-)

    பதிலளிநீக்கு
  2. @ ரோஸ்விக்

    //நல்ல தொழிலா இருக்கே நண்பா. நம்மளும் ஆரம்பிச்சிடுவோமா?? :-)//

    திருமணம், பிறந்தநாள் விழாக்கள், இது மாதிரி நமக்கு பழக்கமான வட்டத்துல வியாபாரம் செய்தாலே போதும். கடையில வாங்குற பொருளைவிட வீட்டு தயாரிப்பு பெரும்பாலும் ஆரோக்கியமானதா இருக்கும்னு ஒரு நம்பிக்கை உண்டு. அது உண்மையும் கூட. தாராளமா ஆரம்பிங்க.

    பதிலளிநீக்கு
  3. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அதே மாதிரி தான் டிவி பார்ப்பவர்களும். அவர்களா மாறினாதான் உண்டு.

    பதிலளிநீக்கு