Search This Blog

செவ்வாய், 29 டிசம்பர், 2009

அகன்ற கோணம் - நான் முதன் முதலில் வலைப்பூ ஆரம்பித்த போது சூட்டிய பெயர்



இதைப் பற்றிய சந்தேகம் இளைய பாரதம் வாசகர்களுக்கு வந்தது. அதற்கு மின்னஞ்சல் மூலமாக ஒரு வரியில்தான் விளக்கம் சொன்னேன். அப்பாடா...இந்த பதிவுக்கு ஒரு மேட்டர் கிடைச்சிடுச்சு.

தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பது குறுகிய பார்வை. நம்முடைய நலனுக்காக ஒரு செயல் நடைபெறும்போது யாருக்காவது நிச்சயமாக எதாவது ஒரு வழியில் சிறு பாதிப்பாவது இருக்கத்தான் செய்யும்.

அதைப் பற்றியும் யோசிப்பதே அகன்ற கோணம்.

நியாய விலைக் கடையில் எடை குறைவாகத்தான் பொருட்களை வழங்குவார்கள். சரியான எடை இருந்தது என்றால் அந்தப் பணியாளருக்கு மனதளவில் பிரச்சனை எதுவும் இருக்கக்கூடும். அவரிடம் கவனம் தேவை.

அங்கே, விவாதம் செய்து அல்லது சண்டை பிடித்தாவது சரியான அளவில் பொருள்களை வாங்குவது நம் உரிமை. இது சாதாரண பார்வை. நியாய விலைக் கடையில் உள்ள பணியாளர் ஏன் எடை குறைப்பு செய்கிறார்? மொத்தமாக பொருட்கள் கடைகளுக்கு வரும்போதே எடை குறைவாக இருக்கும். கடையிலும் எலி, மழை உள்ளிட்ட சில காரணங்களால் பொருட்கள் வீணாகலாம். அதை மேலதிகாரிகள் ஏற்க மறுக்கலாம்.

அல்லது வேறு சில காரணங்களுக்காக லஞ்சம் கேட்கலாம். இப்படி எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்.

நியாய விலைக்கடையின் பணியாளர் மட்டும் சரியாக இருக்க வேண்டும் என்பது குறுகிய கோணம். அவர் அப்படி நடக்கக் காரணமான அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என நினைப்பது அகன்ற கோணம்.

2010ம் ஆண்டு பொங்கலுக்குள் இது பற்றி விரிவான பதிவு எழுதுகிறேன்.

4 கருத்துகள்:

  1. //2010ம் ஆண்டு பொங்கலுக்குள் இது பற்றி விரிவான பதிவு எழுதுகிறேன்.//
    தொட‌ருங்க‌ள் ந‌ண்பா

    பதிலளிநீக்கு
  2. @க‌ரிச‌ல்கார‌ன்

    //தொட‌ருங்க‌ள் ந‌ண்பா//

    தங்கள் சித்தம் என் பாக்கியம்.

    பதிலளிநீக்கு
  3. //2010ம் ஆண்டு பொங்கலுக்குள்//
    //அந்தப் புதிரை 01.01.2010 அன்றுதான் விடுவிப்பேன்.//

    2010ஆம் ஆண்டு வீடு மாறுகிறீர்களா?
    எப்படி இருந்தலும் வீட்டுக்கு வர வேண்டிய ஆட்டோ கண்டிப்பாக வரும்(உங்கள் பராட்ட தான்)

    பதிலளிநீக்கு
  4. நல்ல சிந்தனை
    தொடரட்டும் உங்கள் பணி

    பதிலளிநீக்கு