Search This Blog

புதன், 9 டிசம்பர், 2009

ஆளில்லா கடையில யாருக்கு டீ?


சட்டக் கல்லூரி சம்பவம் தொடர்பாக கைது செய்யப் பட்ட மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்,அவர்களை நூலகத்தில் படிக்கச் சொல்லி கட்டளை பிறப்பித்துள்ளது.

வாசிப்பின் மகத்துவத்தை நீதித்துறை உணர்ந்திருப்பதால்தான் இப்படி ஒரு உத்தரவு.வீடியோகேம்,கார்ட்டூன் சேனல் என்று நம் குழந்தைகளின் பொழுதுபோக்கு அம்சத்தை சுருக்கி அவர்களின் மனதை பொலிவிழக்கச் செய்ததை இனியாவது தவிர்த்து அவர்களை பண்புள்ளவர்களாகச் செய்ய வேண்டியது நம் கடமை.

வாசிப்பு என்றால் புத்தகம் படிப்பது மட்டும் அல்ல.

நம்மை சுற்றி உள்ள சூழ்நிலைகளையும் மனிதர்களையும் நமக்கு கிடைக்கும் அனுபவங்களையும் சுவாசத்தைப் போல் நேசித்தால் எளிமையான தீர்வுகள் கிடைக்கும்.தவறுகளை அடுத்தவர்கள் சுட்டிக் காட்டாமலேயே உணரக் கூட பல நேரங்களில் வாய்ப்பு கிடைக்கும்.


என்னங்க...பழைய பதிவு மாதிரி இருக்கேன்னு பார்க்குறீங்கிளா?...ஆமாங்க...சில மாசங்களுக்கு முன்னால எழுதுனதுதான். அப்ப என்னுடைய பிளாக் என்னைத் தவிர ஒரே ஒரு நண்பருக்குதான் தெரியும். ஆளில்லாத கடையில யாருக்குய்யா டீ ஆத்துனன்னு நீங்க சொல்றது புரியுது. அதனாலதான் ரிப்பீட்டு...

நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா ஒருத்தருக்கு ரிவிட்டு அடிச்சாலே தப்பில்லை...நான் ரிப்பீட்டுதான செய்யுறேன்...பொறுத்துக்குங்க...



அப்பவும் ரெண்டு மூணு பேர் இதைப் படிச்சுட்டு கருத்து சொல்லியிருந்தாங்க. அவங்களுக்கெல்லாம் என் நன்றிகள்.

3 கருத்துகள்:

  1. //நம்மை சுற்றி உள்ள சூழ்நிலைகளையும் மனிதர்களையும் நமக்கு கிடைக்கும் அனுபவங்களையும் சுவாசத்தைப் போல் நேசித்தால் எளிமையான தீர்வுகள் கிடைக்கும்.//

    நல்ல கருத்து.

    பதிலளிநீக்கு
  2. ராமலக்ஷ்மி கூறியது...

    //நம்மை சுற்றி உள்ள சூழ்நிலைகளையும் மனிதர்களையும் நமக்கு கிடைக்கும் அனுபவங்களையும் சுவாசத்தைப் போல் நேசித்தால் எளிமையான தீர்வுகள் கிடைக்கும்.//

    நல்ல கருத்து.


    உங்கள் வருகைக்கு நன்றிக்கா.

    பதிலளிநீக்கு