Search This Blog

புதன், 23 டிசம்பர், 2009

ரஜினி நடிச்சது குசேலன், கமல் வாழ்ந்தது ஆளவந்தான், விஜய் பறந்தது குருவி - இப்போ...ஒரு பிரமாண்டமான ஓப்பனிங்.



செல்போன் வாங்கின மூணு வருஷத்துக்குள்ள நாலு நம்பர் மாத்திட்டேன்.(ஏன்?...கடன் கொடுத்தவங்க தொல்லை தாங்கலையா...) ஆனா அந்த நம்பரை எல்லாம் எனக்குப் பழக்கப்பட்டவங்க கிட்ட கொடுக்குறதுல அக்கறை காட்டினது கிடையாது. ஆனா இளைய பாரதம் முகவரி மாற்றத்துக்கு இவ்வளவு பில்டப் தேவையான்னு என் மனசுலயே ஒரு கேள்வி உண்டு.

அதுக்காக ஒரு சிலர்கிட்ட ஆலோசனை கேட்கலாம்தான். நீங்களும் நல்ல வழியைத்தான் காட்டுவாங்க. ஆனா நம்மதான் ஒரு வேலையை பலூனை ஊதுற வேகத்துல தொடங்குனா அதை ஊசியால குத்தி உடைக்கிற வேகத்துல டமாராயிடுது...இது மாதிரி அனுபவங்கள் எனக்கு ரொம்பவே இருக்கு. அது தனி பதிவுல வரும்.

இளைய பாரதம் டெம்ப்ளேட்டுல ஃபாலோயர்ஸ் விட்ஜெட் சேர்க்க முடியாத காரணத்தால மறுபடியும் முதல்ல இருந்து புது URL முகவரியில என்னுடைய பதிவுகளைத் தொடங்க வேண்டிய நிலமை. இதுலயும் ஒரு நன்மைங்க. ஒவ்வொரு வருஷத்து பதிவையும் தனித்தனி வலைப்பூவுல வெச்சு பராமரிக்கிறதுனால எதாவது அக்கப்போர் பார்ட்டிங்க, (வேற யாரு...மால்வேர் புரோகிராம்கள்தான்) குறுக்க புகுந்து ஆட்டையைக் கலைச்சாலும் பெரிய பாதிப்பு இல்லாம தப்பிச்சுடலாம்.

உண்மைத்தமிழன் உட்பட சில பெரிய பிரபலங்களே இம்சை வில்லன்கள்கிட்ட சிக்கி தப்பிச்சுருக்காங்க. எனக்கு கணிப்பொறி பற்றிய தொழில்நுட்ப அறிவு பூஜ்யம். (உதாரணம்தானே...எனக்கு சமைக்கத் தெரியாது...நல்லா சாப்பிடத்தான் முடியும்னு சிலர் சொல்லுவாங்களே...அது மாதிரிதான்.) அப்புறம் எதாவது ஆயிட்டா வடை போச்சேன்னு புலம்பனும். இது தேவையா.

உன்னுடைய வலைப்பக்கத்துல வேற கெஜட் எதையும் சேர்க்கத் தெரியாதுன்னு சொல்லு... ஒத்துக்குறோம்... அதுக்காக மால்வேர் மேல எல்லாம் பழியைப் போடாதன்னு சொல்லாதீங்க.

இதுக்காக வடிவமைச்சிருக்குற பக்கத்துல ரஜினி, கமல், விஜய் எல்லாம் இருக்காங்க. ஓ.கே. கீழ ஏன் திருஷ்டி அப்படின்னுதானே கேட்குறீங்க. அதுக்கு காரணம் நம்ம நாஞ்சில் பிரதாப் சார்தான்.


நாம ஒரு படத்துல நடிச்சு, அந்தக் காட்சி எடிட்டிங்ல காணாமப் போகாம மக்களோட பார்வைக்கும் போயிருக்கு. அப்புறம் ஏன் நாம அந்த அனுபவங்களை எழுதக் கூடாது...எப்படின்னு மனசாட்சிகிட்ட இருந்து ஒரு குரல்.(அது அவலக்குரல் இல்லை)

ஜனவரி 1ந் தேதி புது URL முகவரியில இந்தப் பதிவை எழுதப் போறேன். அதுக்குதாங்க இந்த விளம்பரம்.

23 கருத்துகள்:

  1. நடத்துங்க நடத்துங்க... பேசாம டெம்ப்ளேட்டடை மாத்திடுங்க தல....
    ஆமா இப்ப என்ன ஷூட்டிங் போயிட்டுருக்கு...

    பதிலளிநீக்கு
  2. அக்கப்போர் பார்ட்டிங்க,

    enai than soldringalo ninaichen.

    பதிலளிநீக்கு
  3. ஜனவரி 1ந் தேதி புது URL முகவரியில இந்தப் பதிவை எழுதப் போறேன். அதுக்குதாங்க இந்த விளம்பரம்.


    kadavule sikram 1 thethi varanum nan sikram elaraym kalaikanum

    பதிலளிநீக்கு
  4. @ நாஞ்சில் பிரதாப்

    //நடத்துங்க நடத்துங்க... பேசாம டெம்ப்ளேட்டடை மாத்திடுங்க தல....//

    வலைப்பக்கத்துல இளையபாரதம் 2010 அப்படின்னு ஒரு சுட்டி இருக்கே...அதைப் பார்க்கலையா நீங்க?...பாலோயர்ஸ் கொண்டு வந்துட்டேன். சக்சஸ்.
    *************


    // ஆமா இப்ப என்ன ஷூட்டிங் போயிட்டுருக்கு..//

    பாஸ், நான் எல்லாம் காமெடி பீஸ்தான்.இவ்வளவு பில்டப் கொடுக்கும்போதே ஏதே வில்லங்கம் இருக்குன்னு நீங்க யோசிக்க வேணாமா?

    புது பதிவு ஆரம்பிக்கும் போதே ஆங்கிலத்துல டெம்ப்ளேட் தேர்வு செய்தால்தான் பாலோயர்ஸ் விட்ஜெட் வேலை செய்யுது. எல்லா பதிவையும் தூக்கிட்டு மாத்தி பார்த்தேன். ஒன்னும் நடக்கலை. அதனாலதான் புது url பதிவு பண்ணிட்டேன். இன்னொரு சவுகர்யம் என்னன்னா, இது நாள் வரை இளையபாரதம் பேர் நினைவு இருந்தாலும் முகவரியை நினைவுல வேச்சுக்குறது கஷ்டம். இனி நீங்க ilaiyabharatham.blogspot இந்த முகவரியை எளிமையா நினைவுல வெச்சுக்கலாமே. அதனாலதான்.

    பதிவுல சொன்ன மாதிரி ஒவ்வொரு வருஷத்துக்கும் ஒவ்வொரு தளம் வெச்சுட்டா பழைய பதிவைத் தேடித் போறவங்க மட்டும் அந்த தளத்தை திறந்து பார்க்கலாம். ஜனவரியில இருந்து வாரத்துக்கு ரெண்டு பதிவு மட்டும் போடலாம்னு இருக்கேன். பின்னூட்டத்துக்கு அதிக நேரம் தேவைப்படுதுப்பா... நான் நிறைய படிக்கணும் கொஞ்சமா எழுதனும்னுதான் நினைக்கிறேன். இப்ப வேலை இல்லாம வீட்டுலதான் இருக்கேன். பொருளாதார நெருக்கடி ரொம்பவே கழுத்தை நேரிக்குது. வேற வேலைக்கு போய்ட்டா நேரம் கிடைக்காது. அதனால வாரம் ரெண்டுன்னு இப்பவே ஒரு ஒழுங்கு முறைக்கு வர்றது நல்லதுதானே...

    நான் படத்துல தலையைக் காட்டுனது எல்லாரோட எதிர்பார்ப்பையும் ரொம்பவே எகிற விட்டிருக்குன்னு நினைக்குறேன். உண்மை தெரிஞ்சா ஒருத்தரும் என்னைய சும்மா விட மாட்டீங்க போலிருக்கே?

    மொக்க படத்துக்கு எல்லாம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பெரிய ஹீரோக்களே மண்ணைக் கவ்விகிட்டு இருக்காங்க. அவங்களை அப்படி கவுத்து விட்ட படங்களோட ஸ்டில்லா வெச்சிருக்கும்போதே யோசிக்க வேணாம்?

    என்ன பண்றது? எல்லாம் உங்க விதி.

    ஆனாலும் விஷயத்தை தெரிஞ்சுக்க நீங்க ஒன்னாம் தேதி வரை காத்திருக்கணும். நான் அந்தப் படத்துல இருக்குற காட்சியின் போட்டோ ஸ்டில்ல ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன். அந்த படத்தை எங்க பார்க்கலாம்?, ஷூட்டிங் அனுபவம் இது மாதிரி விரிவான விவரங்களோட அந்த பதிவு தயாராகுது.


    காத்திருங்க, ரசிகர்களே...

    ஆனா ஒன்னு பிரதாப் சார்...ரசிகர்மன்றத் தலைவர் பதவிக்கு உங்களுக்குத்தான் முன்னுரிமை.

    பதிலளிநீக்கு
  5. பிரதாப் சார்...ரசிகர்மன்றத் தலைவர் பதவிக்கு உங்களுக்குத்தான் முன்னுரிமை

    unga rasigaa mandrathuku ungala uncle sonavangaluku than thalaivar postnu kelvipaten

    பதிலளிநீக்கு
  6. also அதனால வாரம் ரெண்டுன்னு இப்பவே ஒரு ஒழுங்கு முறைக்கு வர்றது நல்லதுதானே...

    ipdila paningna veetuku auto anupadum enbathai panivu thalvu inum ithyathigal serthu solikiren amam

    பதிலளிநீக்கு
  7. @ angel

    // also அதனால வாரம் ரெண்டுன்னு இப்பவே ஒரு ஒழுங்கு முறைக்கு வர்றது நல்லதுதானே...

    ipdila paningna veetuku auto anupadum enbathai panivu thalvu inum ithyathigal serthu solikiren amam//

    உங்க ஊர்ல எல்லாரும் ஆட்டோ அனுப்புறதுல நிபுணர்களா?

    பதிலளிநீக்கு
  8. @ angel
    //பிரதாப் சார்...ரசிகர்மன்றத் தலைவர் பதவிக்கு உங்களுக்குத்தான் முன்னுரிமை

    unga rasigaa mandrathuku ungala uncle sonavangaluku than thalaivar postnu கேள்விப்பட்டேன்//

    அவங்க மட்டும் என்கிட்ட மறுபடி சிக்கினா நாடு கடத்திட்டுதான் மறு வேலை.

    பதிலளிநீக்கு
  9. உங்க ஊர்ல எல்லாரும் ஆட்டோ அனுப்புறதுல நிபுணர்களா?


    nibunaralam iruka venam enai mathri oru kutty rowdyah iruntha pothum

    பதிலளிநீக்கு
  10. அவங்க மட்டும் என்கிட்ட மறுபடி சிக்கினா நாடு கடத்திட்டுதான் மறு வேலை.


    my dear thiruvarur girls ine road la natula pathu ponga

    பதிலளிநீக்கு
  11. சரி சரி 1ம் தேதிக்கு வெயிட்டிங்க்!

    பதிலளிநீக்கு
  12. @ angel

    //nibunaralam iruka venam enai mathri oru kutty rowdyah iruntha pothum//

    அது என்ன படிச்சு வாங்கின பட்டமா...சொல்லும்போது ரொம்ப பெருமைப்படுற மாதிரி தெரியுது.

    பதிலளிநீக்கு
  13. @ எல்லா வாசகர்களுக்கும்

    நாளைக்கு புது பதிவு எதுவும் இருக்காது. நான் வெளியூருக்கு ஒரு வேலையா போறேன். ஒரு நாள் பதிவு போடமுடியாதேன்னு வருத்தப் பட்டேன். ஆனால் இன்னைக்கு ஒரே நாள்ல ஆயிரம் ஹிட்டைத் தாண்டி போய்கிட்டு இருக்கு. பதிவுல விஷயம் எதுவும் பெருசா இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். வேட்டைக்காரன் படத்தைப் பத்தி விமர்சனம்னு எதுவும் புலம்பலா இருக்கும்னு நினைச்சு வந்துட்டாங்கலோன்னு ஒரு சந்தேகம்.இவ்வளவு பேரா வேற வேலை இல்லாம இருக்காங்களான்னு யோசிச்சேன்.

    அப்புறம்தான் விஷயம் புரியுது. நாற்பத்து ஒரு மார்க் எடுக்குற ஆள் இல்லைன்னா நாற்பது எடுத்தவந்தானே முதலிடம் பிடிப்பான்.? என் கதையும் அதே.

    தமிழ்மணத்துல எதோ டெக்னிகல் பிரச்சனை போலிருக்கு. மதியத்துலேர்ந்து முதல் பக்கத்துல என் பதிவும் தெரிஞ்சுகிட்டே இருக்குறதால வேற வழி இல்லாம இளையபாரத்துக்கு வந்துகிட்டே இருக்காங்க. திரைப்படத்துக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து மிரட்சின்னு சொல்லுவாங்க. இன்னைக்கு இளையபாரத்துக்கு வந்துகிட்டே இருக்குற மக்களோட எண்ணிக்கையை பார்க்கும்போது எனக்கு பயமா இருக்கு

    @ அன்புடன் அருணா...

    //சரி சரி 1ம் தேதிக்கு வெயிட்டிங்க்!//

    ரொம்ப எதிர் பார்த்துடாதீங்க. ஆனா காமெடியோட நிச்சயம் ஒரு உருப்படியான செய்தி உண்டு. தங்களுக்கு பயன் தராத எதையும் ஒரு அளவுக்கு மேல யாரும் கவனிக்கிறது கூட இல்லைன்னு எனக்கும் தெரியும். அதனால இளையபாரத்துல எப்போதும் உருப்படியான விஷயம்தான் அதிகமா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. அது என்ன படிச்சு வாங்கின பட்டமா...சொல்லும்போது ரொம்ப பெருமைப்படுற மாதிரி தெரியுது.


    school la ketu parunga sir

    பதிலளிநீக்கு
  15. ஒரு நாள் பதிவு போடமுடியாதேன்னு வருத்தப் பட்டேன்.

    nan than feel pananum coz enaku kalaika yarum iruka matanga also aniyum kidayathu

    பதிலளிநீக்கு
  16. enaku oru doubt sir nan evlo than kalaichalum neenga serious ahve reply pandrenga en apdi???????

    பதிலளிநீக்கு
  17. @ angel
    திருத்துறைப்பூண்டி, திருவாரூர் எல்லாம் வந்துருக்கேன்னு சொன்னீங்க.வாகனத்தை விட்டு இறங்கியது உண்டா?

    பதிலளிநீக்கு
  18. @ angel

    // enaku oru doubt sir nan evlo than kalaichalum neenga serious ahve reply pandrenga en apdi???????//நீங்க கிண்டல் பண்றதா நான் நினைக்கலை. புது கோணத்துல யோசிக்க வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கீங்க. மதுரைக்கு போயிட்டு வந்து நீங்க தொவைச்சு காயப்போடுறது தொடர்பா ஒரு பதிவே எழுதுறேன்.

    பதிலளிநீக்கு
  19. Thankyou Angel... Happy christmas

    நீங்க மட்டும்தான் ஆங்கிலத்துல கமென்ட் போடணுமா? நாங்களும் செய்வோம்ல?

    பதிலளிநீக்கு
  20. தமிழில் நானும் கமெண்டுவேன்

    எப்புடி?

    இனிக்கு எதாவது போஸ்ட் பண்ணுங்க

    பதிலளிநீக்கு
  21. தமிழில் நானும் கமெண்டுவேன்

    எப்புடி?

    இனிக்கு எதாவது போஸ்ட் பண்ணுங்க

    பதிலளிநீக்கு
  22. @ angel



    // தமிழில் நானும் கமெண்டுவேன்

    எப்புடி?

    இனிக்கு எதாவது போஸ்ட் பண்ணுங்க//

    எதுக்கு இந்த கமென்ட் ரெண்டு தடவை? இன்னொரு தடவை சொல்லிட்டா நீதி மன்ற எபெக்ட் ஆயிடுமே

    நேற்று மதுரைக்கு போயிட்டு வந்த அனுபவம் இன்று மதியம் வலையுலக ரசிகர்கள் வாசிப்புக்கு கிடைக்கும்.

    பதிலளிநீக்கு