Search This Blog

செவ்வாய், 15 டிசம்பர், 2009

அப்பவே சொன்னோம்ல? - இப்ப எதுக்கு இந்த தலைப்புல பதிவு?


"அண்ணே...ஒரு விஷயமுமே இல்லாம நானே ப்ளாக் ஓப்பன் பண்ணிட்டேன். நீங்க எவ்வளவு பெரிய எழுத்தாளர்...(நிசமாலுமேங்க...) கண்டிப்பா நீங்களும் இந்த துறையில சாதிக்கணும் அப்படின்னு என்னைய உசுப்பேத்தி வலைப்பூ பற்றி எனக்கு அறிமுகம் செய்தது ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்.

2008 நவம்பரில் தொடங்கி ஏகப்பட்ட பூவை வரைஞ்சு வரைஞ்சு அழிச்சுட்டேன். நம்ம புத்திதான் ஒரு இடத்துல ஒழுங்கா நிக்காதே. இப்ப என்ன மாயமோ மந்திரமோ தெரியலை... இளையபாரதம்னுங்குற இந்த பூ குருட்டாம் போக்குல ஒரு மாசமா நிலைச்சு நிக்கிதுங்க. ஒரு வருஷம் நான் வெச்சிருந்த தளத்தை நானும் ஒரு நண்பரும் மட்டும்தான் அப்பப்ப பார்த்துகிட்டு இருந்தோம்.


பூ அட்ரஸ் திருப்தி அளிக்காம (இதுல நியூமராலஜி வேற) அடிக்கடி மாத்துனதுல எனக்கே சில சமயம் மறந்துடுச்சுங்க. அப்படி இப்படின்னு 2009 நவம்பர் கடைசி வாரத்துலதான் இணைய உலகத்துல நானும் இருக்கேன்னு சிலருக்கு தெரிஞ்சுது.

ஆனா கடந்த சில ஆண்டுகளாவே சிறுகதை, துணுக்கு அப்படி இப்படின்னு சமூக அக்கறை உள்ள ஆளாத்தாங்க அலைஞ்சேன்.

பத்திரிகைகள்ல பிரசுரமான இதை எல்லாம் வலைத்தளத்துல பதிக்கணும்னு தோணுச்சு.(நம்மால கல்வெட்டுல எல்லாம் செதுக்க முடியாதுங்க.)

இதுதாங்க இந்தப் பதிவோட வரலாறு.

அப்பவே சொன்னோம்ல? லேபிள்ல இந்த மாதிரி நான் சிந்திச்சதெல்லாம் தொடர்ந்து வரும் .

2 கருத்துகள்:

  1. வரலாறு ரொம்பபபப முக்கியம் மன்னா!!

    பதிலளிநீக்கு
  2. @ கலையரசன்
    //வரலாறு ரொம்பபபப முக்கியம் மன்னா!!//

    படம் சம்மந்தமா ஸ்டில்ல வெச்சுட்டு ஏமாத்திட்டேன்னு தல'க்கு கோபம் போலிருக்கே. கொஞ்ச கொஞ்சமா எரிச்சலூட்டுற விஷயத்தை ஒதுக்கிடுவோம் பாஸ்.

    பதிலளிநீக்கு