Search This Blog

செவ்வாய், 22 டிசம்பர், 2009

சாரி அங்கிள்...அய்யய்யோ...வயசாகிப்போச்சா? (இது ஒரு மழைக்காலம்)

போனவாரத்துல யாராவது புயல் மையம் கொண்டிருக்குன்னு சொன்னா எங்க உங்க வீட்டு வாட்டர் டேங்க்லயான்னு நக்கலா கேட்டேன். திருவாரூர்ல அப்போ விடாம மழை பெய்தாலும் காத்து இல்லீங்க...ஒரு வழியா வார்டு எபிசோடு முடிஞ்சுது.

இப்ப ரெண்டு நாளைக்கு மழைதான் இருக்குன்னு சொன்னாங்க. ஆனா இன்னைக்கு மதியம் நம்மளையே தூக்கிட்டுப் போய் செல்போன் டவர் உச்சியில மாட்டி வெச்சுடுற அளவுக்கு காத்து அடிச்சுதுங்க. நான் கொஞ்சம் எடை குறைவுதான். பர்ஸ், செல்போன் மாதிரியான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எதையும் சேர்க்காம 65 கிலோ மட்டுமே.

என்னையே அவ்வளவு உயரத்துக்கு லிப்ட் உதவி இல்லாம தூக்குற வேகத்துக்கு காத்து அடிச்சுது. இதுல டயட் கண்ட்ரோல்ல இருக்குறதா சொல்லிட்டு ஒரு வேளைக்கு ஒண்ணேமுக்கால் இட்லி மட்டுமே தின்னுட்டு முப்பது கிலோ மட்டுமே(தூக்கில்லாம் பார்க்கலைங்கோ.) இருக்குறவங்க நிலமை என்ன ஆகும்னு ஒரே கவலையாப் போச்சுங்க.(உன்னை மாதிரி யூத்து எல்லாம் இப்படி கவலைப்பட்டா நாடு எந்த காலத்துலப்பா வல்லரசாகுறது.)

ஆனா அடிக்கிற காத்துக்கு அஞ்சாம கோயிலுக்கு போறதுன்னு கிளம்பிட்டேன். 2009 மார்ச் மாசம் நாலாவது செவ்வாய்க்கிழமையில இருந்து அம்மாவோட விருப்பத்துக்காக ஒரு காளி கோயிலுக்குப் போறதை வழக்கமா
வெச்சிருக்கேன்.

மதியம் 3.00 மணியிலேர்ந்து 4.30 மணிவரை ராகுகாலத்துல சிறப்பு பூஜை நடக்கும். பானகம், ஏலக்காய் - சர்க்கரை போட்டு நைவேத்யம் செய்த பால்,(ரெண்டு ஸ்பூன்தாங்க) வெண்பொங்கல் அல்லது புளிசாதம் இதுல ரெண்டு உறுதியா கிடைக்கும்.

ஆனா அதுக்காக போகலைங்க.(எப்படியும் நம்பப்போறது இல்லை)

38 வாரம் இந்த நேரத்துல தொடர்ந்து கோயிலுக்குப் போனது நமக்குத் தேவையில்லை. நான் இந்தப் பதிவை எழுதக் காரணம் - இன்னைக்கு நான் கோயிலுக்குப் போய் வந்தபோது ஒரு எதிர்பாராத தாக்குதல்ல சிக்கிட்டேங்க.

மதியம் மூணு மணிக்குதான் பூஜைக்குரிய பொருட்களை எல்லாம் வாங்கிட்டு சைக்கிள்ல கிளம்பினேன்.(வண்டி வாங்குற அளவுக்கு வசதி இல்லைங்க.) அந்த நேரத்துல மழை ரொம்ப அதிகமா பெய்ததால பாதை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுது.(ஆத்துல தண்ணி இல்லைன்னுதானே வருத்தப்படுறீங்க...இப்ப ரோட்டுலயே ஓடுறேன் பாருன்னு மழையோட குரல்.)

ரோட்டோட இந்த நிலமையைப் பார்த்ததும் பேசாம தனிப்படை அமைச்சு அவங்க துணையோட கோயிலுக்கு கிளம்பியிருக்கலா............மோன்னு மனசுக்குள்ள ஒரு சிந்தனை.(இது உனக்கே அதிகமா தெரியலை...)

நீங்க தப்பா நினைச்சுடாதீங்கப்பா. திருவாரூர்ல புதை சாக்கடை அமைக்கும் வேலை துவங்கி ரெண்டு வருஷம் ஒரு மாதம் ஆகிடுச்சு. எப்ப பணிகள் பூர்த்தி ஆகும்னுதான் தெரியலை. (வேலையின் மதிப்பு, பணி முடியும் காலம் இதெல்லாம் அறிவிப்பு பலகையில எழுதி வெச்சுருப்பாங்களேன்னுதானே கேட்குறீங்க?...அதுல போட்டுருக்குற காலக்கெடு முடிஞ்சு ஏழு மாசமாகுது. வேலை முடிஞ்சுருக்குற நிலவரப்படி பார்த்தா இன்னும் எத்தனை வருஷம் ஆகும்னு தெரியலை.

அதுக்கும் நீ கோயிலுக்குப் போறதுக்கும் என்னய்யா சம்மந்தம்....

இருக்கே...சம்மந்தம் இருக்கே...

நிறைய வீதிகள்ல குழாய் பதிச்சுட்டு அரைகுறையா மூடிட்டுப் போயிட்டாங்க.(சில நடிகைங்களுக்குப் போட்டி?) அதுல மழை தண்ணி வேற நிறைய ஓடுறதால ரோடு எங்க...குழி எங்கன்னு கண்டுபிடிக்கவே தனிப்படைதான் தேவைப்படும்னு தோணுச்சு.

அப்புறம் ஒரு வழியா நகர எல்லையைத் தாண்டினதுக்கப்புறம் குழித்தொல்லை இல்லை. ஆனா மயிலாடுதுறை செல்லும் பாதையில் மூணு கிலோ மீட்டர் தூரம் போறப்ப வேற ஒரு பிரச்சனை. அதிகமாவே திறந்தவெளி ஏரியாவா இருந்ததால குடையைக் காப்பாத்துறதுக்கு ரொம்பவே போராட வேண்டியதாயிடுச்சு.

திடீர்னு லாரி, பஸ் கிராஸ் ஆகிப் போகும்போது குடை கையை விட்டு ஏழெட்டு கிலோமீட்டர் தூரம் போயிடுமோன்னு ஒரு பயம் விலகவே இல்லைங்க.

இதெல்லாம் எனக்கு சிரமமா தெரியலை. வழிபாட்டை முடிச்சுட்டு திரும்பவும்
ஊருக்குள்ள வரும்போது மறுபடி அதே குழி, அதே ரோடு...அதே பயணம்.

சாலையின் குறுக்கே மிருகங்கள் போகும்போது நாம அதோட பின்பக்கமா விலகிப் போகணும்னு விதி இருக்கு. ஏன்னா அதுங்களுக்கு ரிவர்ஸ் கியர்னா என்னன்னே தெரியாது. இந்த விஷயம் நமக்குத் தெரியும் அதனால பிரச்சனை இல்லை.

ஆனா மனுஷன் பூனையை விட மோசம்னு நினைக்கிறேன். ஏன்னு கேட்குறீங்கிளா?

தேரோடும் வீதியைக் கடந்து ஒரு தெருவுக்குள்ள ரோட்டைக் கண்டுபிடிச்சு குடையையும் காப்பாத்தி வீட்டுக்குப் போய்கிட்டு இருக்கேன்.

மூணு பள்ளி மாணவிகள் ஒரு ஓரமாத்தான் போய்கிட்டு இருந்தாங்க. அவங்களும் குழிகளுக்கு நடுவுல இருந்த ரோட்டைக் கண்டுபிடிச்சுட்டாங்க போலிருக்கு. திடீர்னு சைக்கிளுக்கு குறுக்க வந்துட்டாங்க. ஒரு கையில குடை இருந்ததால பெல் அடிக்க முடியாத நிலை. "ஏய்..."அப்படின்னு கத்திட்டேன்.

சட்டுன்னு மூணு மாணவிகளும் ஓரமா விலகிட்டாங்க. அதுல ஒரு மாணவி சொன்ன வார்த்தைகளை சுத்தமா எதிர்பார்க்கலைங்க.

காலேஜ் முடிச்சு ஆறரை வருஷம்தான் ஆகுது... அதுக்குள்ள இப்படி ஒரு மரியாதை கிடைச்சது பெரிய அதிர்ச்சிதான்.

அப்படி என்னதான் சொன்னுச்சுன்னுதானே கேட்டீங்க? பதினோராம் வகுப்பு இல்லைன்னா பனிரெண்டாம் வகுப்பு படிக்கிற அந்த மாணவி என்னைப் பார்த்து "சாரி அங்கிள்" அப்படின்னு சொல்றதை தாங்கிக்கவே முடியலங்க.

வயசு ஏறிகிட்டு இருக்கு...கல்யாணம் பண்ணுடான்னு அம்மா சொன்னப்ப காதுல விழலை. இப்படி யாராச்சும் பேச்சுலேயே வெடி வெச்சாதான் நாம முழிச்சுக்குவோமோ?

16 கருத்துகள்:

  1. ஹெஹெஹெ! ஒரு கொடியில் பல மலர்களா?
    ஹலோ என்னைய மாதிரி ஆளுகளே யூத்து மாதிரி அலப்பறை பண்ணிட்டுத் திரியறோம். உங்களுக்கு என்னா, போட்டுத் தாக்குங்கோ

    பதிலளிநீக்கு
  2. ஆமா... தாங்கவே முடியாது அங்கிள்... ஹி....ஹி... எப்டி

    பதிலளிநீக்கு
  3. ஆமா... தாங்கவே முடியாது அங்கிள்... ஹி....ஹி... எப்டி

    பதிலளிநீக்கு
  4. (உன்னை மாதிரி யூத்து எல்லாம் இப்படி கவலைப்பட்டா நாடு எந்த காலத்துலப்பா வல்லரசாகுறது.)

    nan ethuvum solala mukyama antha 3rd varthai ya pathi

    பதிலளிநீக்கு
  5. .(எப்படியும் நம்பப்போறது இல்லை)

    apram ethukunga atha type pani time waste pani opps

    பதிலளிநீக்கு
  6. சைக்கிள்ல கிளம்பினேன்

    athu thanga nalathu neengalum china skl payan mathri therivinga also environment won't get polluted

    பதிலளிநீக்கு
  7. no feelings
    nan vena avangakita soli thatha nu sorry sorry anna sorry thambhi nu sola soldren ok

    பதிலளிநீக்கு
  8. neenga type pana ena software use pandringa?
    no spelling mistake
    oru nalaiku 2 + posts
    very nice
    do u have yahoo id?

    பதிலளிநீக்கு
  9. ஹாஹாஹாஹா...காமெடி கலக்கல்ஸ்! அம்மா சொன்னதைக் கேளுங்க!

    பதிலளிநீக்கு
  10. ஹாஹாஹாஹா...காமெடி கலக்கல்ஸ்! அம்மா சொன்னதைக் கேளுங்க!

    பதிலளிநீக்கு
  11. @ ஷங்கி கூறியது...

    //ஹெஹெஹெ! ஒரு கொடியில் பல மலர்களா?
    ஹலோ என்னைய மாதிரி ஆளுகளே யூத்து மாதிரி அலப்பறை பண்ணிட்டுத் திரியறோம். உங்களுக்கு என்னா, போட்டுத் தாக்குங்கோ//

    ண்ணா...நீங்க ஒரு ஆள்தான் என்னைய யூத்துன்னு ஒத்துகிட்டீங்க. எங்க ஊர் எலக்ஷன்ல நீங்க நின்னா கண்டிப்பா என் ஓட்டு உங்களுக்குதான்
    ************

    @ கடையம் ஆனந்த்

    //ஆமா... தாங்கவே முடியாது அங்கிள்... ஹி....ஹி... எப்டி//

    அட நாராயணா...ஏன்?... ஏன் இப்படி...இது வரைக்கும் எல்லாம் சரியாத்தானே போய்கிட்டு இருக்கு?
    *************
    @ அன்புடன் அருணா

    //ஹாஹாஹாஹா...காமெடி கலக்கல்ஸ்! அம்மா சொன்னதைக் கேளுங்க!//

    இந்த அம்மாவும் சொல்லிட்டீங்க...முயற்சி பண்றேன்.
    ********************

    @ angel

    //(உன்னை மாதிரி யூத்து எல்லாம் இப்படி கவலைப்பட்டா நாடு எந்த காலத்துலப்பா வல்லரசாகுறது.)

    nan ethuvum solala mukyama antha 3rd varthai ya pathi//

    இவ்வளவு சின்ன வயசுல ரொம்ப புத்திசாலியா இருக்கேன்னு பொறாமை.
    *************

    @ angel

    //anjaneyar kovil lukum ponga//

    ஏன்? தினமும் கண்ணாடியைப் பார்க்குறது போதாதா?
    **************

    @ angel

    //.(எப்படியும் நம்பப்போறது இல்லை)

    apram ethukunga atha type pani time waste pani opps//

    உங்களை மாதிரி யாராவது ஒரு அப்பாவி நம்பிடமாட்டாங்களான்னுதான்.
    **************

    @ angel

    சைக்கிள்ல கிளம்பினேன்

    //athu thanga nalathu neengalum china skl payan mathri therivinga also environment won't get polluted//

    அப்பாடா...angel கிட்ட இருந்து பாராட்டா...இதனாலதான் காலையில இருந்து மழை வெளுத்து வாங்குதா?
    **************

    @ angel

    // no feelings
    nan vena avangakita soli thatha nu sorry sorry anna sorry thambhi nu sola soldren ok//

    இப்பதான ஒரு பாராட்டு வந்துச்சேன்னு மைல்டா ஒரு டவுட் வந்துச்சு. அதுக்குள்ளயா....

    ஒரு அழகான பொண்ணு அங்கிள்னு சொன்னதால பர்சனாலிட்டி மெயின்டெயின் பண்றத பத்தி யோசிக்கும்போது இது வேறயா?...போதும். அதெல்லாம் நாங்க சமாளிச்சுக்குறோம். இப்ப நீங்க ஆணியே புடுங்க வேணாம்.
    ***************

    angel கூறியது...

    //neenga type pana ena software use pandringa?
    no spelling mistake
    oru nalaiku 2 + posts
    very nice
    do u have yahoo id?//

    1.சின்ன வயசுல இருந்து நிறைய படிப்பேன்.(பாடப் புத்தகத்தை இல்லை.) அதனால இலக்கணப்பிழை, எழுத்துப்பிழை ரொம்பவும் குறைவா இருக்கும். இருக்குற ஒண்ணு ரெண்டு தப்பும் சாஃப்ட்வேர் பிராப்ளத்தால வர்றது.

    Azhagi Software யூஸ் பண்றேன். OFF LINE ல டைப் பண்ணி rich type format டாக்குமெண்ட்ல சேவ் பண்ணி வெச்சுடுவேன். பிளாக்கர்ல போஸ்டிங் போடும்போது லேபிள், தலைப்பு ரெண்டையும் கட் அன் பேஸ்ட் பண்ணி ஒரே நிமிடத்தில் பப்ளிஷ் பண்ணிடலாம்.

    போட்டோ இன்சர்ட் பண்றதுதான் கொஞ்சம் டைம் எடுக்கும். அப்புறம் தமிழ்மணம், திரட்டி, தட்ஸ் புக் மார்க், தமிழ் 10, தமிழிஷ் இதுல எல்லாம் எண்ட்ரி பண்ண அரைமணி நேரம் ஆகும். ஏன்னா என்னுடையது Bradband கனெக்ஷன் இல்லை. Will phone தான். வேகம் மிகக் குறைவு.

    Azhahi இன்ஸ்டால் பண்றதும் டைப் பண்றதும் ரொம்ப ஈசி. டவுன்லோடு பைல் சைஸ் 13 எம்.பிதான். இன்ஸ்டால் பண்ணினா 8 எம்.பி அளவுதான் டிஸ்க் ஸ்பேஸ் எடுத்துக்கும்.

    வேற சில சாப்ட்வேர்களைப் பயன்படுத்தி நானே பக்கங்களை வடிவமைத்திருக்கிறேன். இளைய பாரதம் பேனர், கவிதை இதெல்லாம் சாம்பிள்.

    ஒரு நாளைக்கு ரெண்டு போஸ்டிங் போடுறதுக்கு காரணம் இப்ப வேற வேலை இல்லை. விஷயம் எங்கிருந்து கிடைக்குதுன்னு கேட்டுடாதீங்க. நான் எழுதிய கதைகள் மிகக் குறைவு. ஆனா பல புனைப் பெயர்கள்ல நிறைய துணுக்குகள் எழுதியிருக்கேன். தினமும் ஒண்ணுன்னு போட்டாலும் ஒரு வருஷத்துக்கு வரும்.

    யாஹூ ஐ.டி இருக்கு.

    வேற கேள்வி இருக்கா?

    இடைவிடாம பின்னூட்டம் இடுறதுக்கு ரொம்ப நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நீங்கள் எழுதிய விதமும் எழுதிய விவரங்களும், ரொம்ப பிடிச்சிருக்குங்க. நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. @ Chitra

    // நீங்கள் எழுதிய விதமும் எழுதிய விவரங்களும், ரொம்ப பிடிச்சிருக்குங்க. நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்.//


    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. தொடரட்டும் இளைய பாரத்தில் உங்கள் வாசிப்பு.

    பதிலளிநீக்கு
  14. anila iniku than mudinju ine jan 4th than athu varaikum 2 perum pavam than

    பதிலளிநீக்கு
  15. அடப்பாவி மக்கா...ஒரே ஊருக்குள்ள இருந்ததால்தான் இவ்வளவு அலப்பறையா...நாகர்கோவில்காரங்ககிட்ட திருவாரூர்க்காரன் நான் தெரியாம வந்து சிக்கிட்டேனா?

    தல... நான் தமிழ்நாட்டோட சி.எம் படிச்ச பள்ளிக்கூடத்துல படிச்சவன். அவரோட சின்ன வயசு சிநேகிதர்தான் இப்ப எங்க ஊர் நகர்மன்றத் தலைவர். அவர் கவுன்சிலரா இருக்குற ஏரியாவுலதான் நான் இருக்கேன். இதுக்கு மேல எழுத பயமா இருக்கு.பின்ன?... அங்கேருந்து எங்க வீட்டுக்கு ஆட்டோ வந்துடக்கூடாதுல்ல. எம்.எல்.ஏ தான் தொகுதிப் பக்கம் வரவே மாட்டாருன்னு ஜோக் எழுதுவாங்க. இவரும் அப்படியே.

    பதிலளிநீக்கு