Search This Blog

செவ்வாய், 22 டிசம்பர், 2009

தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்.தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்.

இதை நாம கண்ணை மூடிகிட்டு நம்ப வேண்டாங்க. ஏன் அப்படின்னு   விளக்கம் சொல்றதுக்கு முன்னால ஒரு சிறிய நகரத்துல நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துக்குறேன்.
எங்க குடும்ப நண்பர் ஒருத்தர் வேலை பார்த்த இடம் ஒரு பெரிய தனியார் நிறுவனம்.சில ஆண்டுகளுக்கு முன்னால வேற ஊருக்கு மாற்றலாகி குடும்பத்தோட போயிட்டார். அதே ஊரிலேயே அவர் பொண்ணையும் திருமணம் செய்து கொடுத்தார்.

மாப்பிள்ளை - செல்போன் ரீசார்ஜ், உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். அக்கம் பக்கத்துல உள்ளவங்க ஆசை வார்த்தையால வாடகை சைக்கிள் கம்பெனியும் நடத்தி வந்தார். செல்போன் தொடர்பான வியாபாரத்துல அவர் ரொம்பவே திறமைசாலிதான். ஆனால் சைக்கிள் விஷயத்தில் பூஜ்யம் என்பதால் ஒரு ஆளுக்கு நிறைய சம்பளம் கொடுத்து அந்தக் கடையை நடத்தி வந்தார். ஆனால் அதில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் சைக்கிள் கடையை மூடிவிட்டார்.

அது ஏற்படுத்திய பொருளாதார இழப்பினால் பிறகு செல்போன் கடையும் தள்ளாடியது. சைக்கிள் கடையால் பல மாதங்கள் நஷ்டம் வந்திருந்தாலும் நண்பரின் பெண் திருமணமாகிப் போன நேரம்தான் ஒரு கடையை இழுத்து மூடவேண்டியுள்ளது என்று சுற்றத்தார் பேசியிருக்கிறார்கள். இதனால் இரண்டு குடும்பங்களிலும் நிம்மதி இல்லை.

ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது உண்மைதான். (உதவியாக இருந்தாலும் சரி, தொந்தரவு கொடுக்காமல் இருந்தாலும் சரி...இரண்டையுமே வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.)

ஆனால் முற்றிலும் தெரியாத தொழிலில் ஈடுபட்டுவிட்டு அதில் நஷ்டம்

ஏற்பட்டால் உடனே மனைவி வந்த நேரம்தான், குழந்தை பிறந்த நேரம்தான்னு சொல்லி தப்பிக்கிறவங்களை என்ன செய்யுறது?

தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்.தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான். - இந்தப் பழமொழி குறித்த என்னுடைய கருத்தை சொல்றேன்.

இந்தப் பழமொழிக்கு முக்கிய காரணங்களா சோம்பேறித்தனமும், ஆர்வமின்மையும்தான் இருக்கணும். ஏன்னா, செய்யுற தொழிலை விடுறவன் சோம்பேறியா இருக்கலாம். ஆர்வம் இல்லாதவன்தான் தெரியாத தொழிலை அதனுடைய போக்குலேயே விட்டு நஷ்டப்படுவான்.

பேராசை மற்றொரு காரணமா இருக்கும். நீங்க யோசிச்சுப் பார்க்கும்போதும் ஒரு தொழில் வீழ்ச்சி அடைய பல காரணங்கள் இருக்குறதா தெரியலாம். ஆனா அதுக்கெல்லாம் அடிப்படையா மேலே சொல்லியிருக்குற மூணு காரணங்கள்தான் அதிகமா இருக்கும்.

இது 2008 ஜனவரியில் ஒரு பத்திரிகையில் பிரசுரமான என்னுடைய படைப்பு.

15 கருத்துகள்:

  1. hi
    உங்க வீட்ல ஏன் கொடி அறுந்து விழுதுன்னு இப்போ தான் எனக்கு தெரிஞ்சி

    நீங்களும் nanjil prathab சாரும் நல்லா strong கயிறு கட்டுங்க ok

    purinja illaya?

    பதிலளிநீக்கு
  2. இதை நாம கண்ணை மூடிகிட்டு நம்ப வேண்டாங்க.

    seri nan kana thiranthu kitu nambren nu sona intha postah fullah vasika venam ah?

    பதிலளிநீக்கு
  3. ஏற்பட்டால் உடனே மனைவி வந்த நேரம்தான், குழந்தை பிறந்த நேரம்தான்னு சொல்லி தப்பிக்கிறவங்களை என்ன செய்யுறது?

    potu thaliralamah?

    பதிலளிநீக்கு
  4. இது 2008 ஜனவரியில் ஒரு பத்திரிகையில் பிரசுரமான என்னுடைய படைப்பு.

    belated congratulations

    பதிலளிநீக்கு
  5. //hi
    உங்க வீட்ல ஏன் கொடி அறுந்து விழுதுன்னு இப்போ தான் எனக்கு தெரிஞ்சி

    நீங்களும் nanjil prathab சாரும் நல்லா strong கயிறு கட்டுங்க ok

    purinja illaya?//

    ஒரு முடிவு பண்ணிகிட்டுதான் நெட்டுல உட்காருறது? சரி...இப்படி எல்லாம் சிக்கும்போது தனியா இல்லாம கூட ஒரு ஆளும் இருக்குறது தைரியமாத்தான் இருக்கு.
    *******************
    //இதை நாம கண்ணை மூடிகிட்டு நம்ப வேண்டாங்க.

    seri nan kana thiranthu kitu nambren nu sona intha postah fullah vasika venam ah?//


    ரொம்ப கண்ணக் கட்டுது....
    *******************
    //ஏற்பட்டால் உடனே மனைவி வந்த நேரம்தான், குழந்தை பிறந்த நேரம்தான்னு சொல்லி தப்பிக்கிறவங்களை என்ன செய்யுறது?

    potu thaliralamah?//

    படிக்கிற பொண்ணுன்னு நினைச்சா பெரிய டெரரா இருப்பீங்க போலிருக்கே. நாஞ்சில் சார், எதுக்கும் நாம இசட் பாதுகாப்புக்கு விண்ணப்பிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்.
    *******************
    //இது 2008 ஜனவரியில் ஒரு பத்திரிகையில் பிரசுரமான என்னுடைய படைப்பு.

    belated congratulations//

    ரொம்ப டாங்க்சுங்க...

    பதிலளிநீக்கு
  6. @ angel

    //nan netla ukandha net arunthidum//

    அப்ப இவ்வளவு நாளும் நின்னுக்கிட்டுதான் இவ்வளவு அலப்பறையா?

    பதிலளிநீக்கு
  7. சரிதான் தல. தொழில் செய்யும்போது பல வகையில ஆராய்ஞ்சு செய்யணும். புதுமையா புகுத்தனும். சும்மா எல்லாம் பொண்ணால தான் பொலம்பக்கூடாது. :-)

    பதிலளிநீக்கு
  8. தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்.தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்.///////// இது வேறு விஷயத்துக்காக சொல்லப்பட்டதுன்னு நினைக்கிறேன். நம் சமூகம் குலத்தொழிலை அடிப்படையாக அமைய பெற்றவை. அதற்காக இவை சொல்லப்பட்டு இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  9. sir unmaya nijama seriousah anitharama suthil tharama soldren ungalayellam potu thala maten no feelings ok
    also z privuku vinapithal um angeyum nan varuveneh coz nan thevathai thevathai thevathai ( ellam eco ku agathan kekutha)

    பதிலளிநீக்கு
  10. ஹஹஹ அப்பாடா தனியா டேமேஜ் ஆகனோமோன்னு நினைச்சேன்.. கூட ஒரு ஆளு இருக்கு... Z பிரிவு பாதுகாப்பெல்லாம் தேவையில்ல தல... நம்ம வூட்டுக்கிட்டதான் ஏன்ஜலோட வீடு, அங்க ஆட்டோ அனுப்பிருவோம்...
    (என்னா அடி...)

    பதிலளிநீக்கு
  11. அடப்பாவி மக்கா...ஒரே ஊருக்குள்ள இருந்ததால்தான் இவ்வளவு அலப்பறையா...நாகர்கோவில்காரங்ககிட்ட திருவாரூர்க்காரன் நான் தெரியாம வந்து சிக்கிட்டேனா?

    தல... நான் தமிழ்நாட்டோட சி.எம் படிச்ச பள்ளிக்கூடத்துல படிச்சவன். அவரோட சின்ன வயசு சிநேகிதர்தான் இப்ப எங்க ஊர் நகர்மன்றத் தலைவர். அவர் கவுன்சிலரா இருக்குற ஏரியாவுலதான் நான் இருக்கேன். இதுக்கு மேல எழுத பயமா இருக்கு.பின்ன?... அங்கேருந்து எங்க வீட்டுக்கு ஆட்டோ வந்துடக்கூடாதுல்ல. எம்.எல்.ஏ தான் தொகுதிப் பக்கம் வரவே மாட்டாருன்னு ஜோக் எழுதுவாங்க. இவரும் அப்படியே.

    பதிலளிநீக்கு
  12. அங்க ஆட்டோ அனுப்பிருவோம்...


    auto correct jan 4th 2010 anupunga coz aniku skl open agum nan palaka thoshathil thungiduven late ayidum athan ok note panikonga jan 4

    பதிலளிநீக்கு