Search This Blog

செவ்வாய், 15 டிசம்பர், 2009

இனிப்பான விஷம் - (ஒரு தீபாவளியின் போது ஏற்பட்ட தெளிவு)

தீபாவளி நேரத்தில் கடைகளில் இனிப்பு, கார வகைகளுக்கு ஆர்டர் கொடுப்பது கன ஜோராக நடைபெறும். அதிலும் குழந்தைகள் மிக அதிகமாக விரும்புவது டைமன் கேக்குகள் போன்ற சில வகைகளில் பளபளப்பாகத் தெரிய சில்வர் ரேக் எனப்படும் மெல்லிய படிவம் ஒட்டப்பட்டதைதான். அழகு ஆபத்தானது என்பது போல் ஒரு விஷயம் என்னை அதிர்ச்சியடையச் செய்தது.

ஆம்...! சில்வர் ரேக் எனப்படும் அந்த மெல்லிய பளபளப்பான படிமம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் ரசாயனக்கலவை நச்சுத்தன்மை வாய்ந்த ஒன்று என்பதால் அது நமது நரம்பு மண்டலத்தை மெல்ல மெல்ல பாதித்து இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு வியாதிகளை எற்படுத்தும் என்று மருத்துவத்துறையும் சுகாதாரத்துறை ஆய்வகமும் அறிவித்துள்ளது.

ஸ்வீட் கடை உரிமையாளர்கள் வியாபாரமே முக்கியம் என்று கருதுவதால் சில்வர் ரேக் என்ற வெள்ளிப் படிவத்தை ஒட்டுவதை நிறுத்தமாட்டார்கள். எனவே, அரசு - மக்கள் நலன் காக்க ஸ்வீட்டுகளில் இது போன்ற மெல்லிய ரசாயன படிமத்தை ஒட்டுவதைத் தடை செய்ய வேண்டும். அரசு பொது மக்களைக் காப்பாற்றுமா?

2 கருத்துகள்:

  1. மாட்டின் கொழுப்பிலிருந்து இதைத் தயாரிப்பதற்காகவே மாடுகள் கொல்லப் படுவதாக படித்த நினைவு. அதிலிருந்து இவ்வகை இனிப்புகள் வாங்குவதைத் தவிர்த்து வருகிறேன். ஆரோக்கியத்துக்கும் கேடு என்பதையும் இப்போது தெரிந்து கொண்டேன். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  2. @ ராமலக்ஷ்மி

    //மாட்டின் கொழுப்பிலிருந்து இதைத் தயாரிப்பதற்காகவே மாடுகள் கொல்லப் படுவதாக படித்த நினைவு.//

    இந்த தகவல் எனக்கு புதியது. நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு