Search This Blog

வியாழன், 3 டிசம்பர், 2009

நாடு உருப்புடுற மாதிரி ஐடியா இருக்கா? ஆயிரம் ரூபாய் பரிசு காத்திருக்கு.



சமீப காலமா தமிழ்ல பல பத்திரிகைகள் வெளிவரத்தொடங்கி இருக்கு.ஒவ்வொண்ணுலயும் ஒரு சிறப்பு உண்டு. ஏன்னா, தனித்தன்மை இல்லாம வாசகர்களை கவர முடியாதுன்னு அவங்களுக்கும் நல்லாவே தெரியும்.

அப்படி மாதம் இருமுறை இதழா சூரிய கதிர்னு ஒரு பத்திரிகை நவம்பர் 16,2009 முதல் வெளிவரத்தொடங்கியிருக்கு. விஷயங்களும் கனமாத்தான் இருக்கு. பாலகுமாரன், மதன் - அப்படின்னு பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இதழை அலங்கரிக்கிறதே ஒரு பரிசுதான்.

ஆனா மெகா பரிசுப்போட்டியால் வாசகர்களும், பத்திரிகை விற்பனை உயர்வால் தாங்களும் மட்டும் நன்றாக இருந்தால் போதாது...நாடும் நலம் பெற வேண்டும் என்று நல்லெண்ணத்தில் ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார்கள்.

கல்வி, போக்குவரத்து, பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் என்று எல்லா வகையிலும் நாடு முன்னேற உங்களிடம் அற்புதமான யோசனை இருக்கிறதா?...அதை எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் ஐடியா ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு உண்டு. அதை பிரசுரம் செய்வதோடு நிற்காமல் செயல்வடிவம் கொடுக்கவும் சூரிய கதிர் தயாராக இருப்பதுதான் மற்ற பத்திரிகைகளைவிட தனித்திருக்கும் விஷயம்.

வேறு ஒரு சில போட்டிகளும் உண்டு. எட்டு வாரங்கள் கொண்ட தொடர் போட்டியும் இதில் அடக்கம். இப்போதே பத்திரிகை வாங்கிப் படியுங்கள். ஐடியா போட்டி மற்றும் அதில் இருக்கும் போட்டிகள் அனைத்திலும் கலந்து கொள்ளுங்கள். பரிசுகளை வென்று குடும்பத்துடன் குதூகலமாக இருங்கள்.

ஆம்...குடும்பத்துடன் குதூகலமாக இருக்க ஒரு அற்புத போட்டியையும் அறிவித்திருக்கிறார்கள்.

இப்போதே சூரிய கதிர் மாதம் இருமுறை பத்திரிகையை வாங்க கிளம்பி விட்டீர்களா?

நன்றி : சூரிய கதிர் மாதம் இருமுறை இதழ்.

2 கருத்துகள்:

  1. சூரியக்கதிர் வாங்கிப் பார்க்கிறேன்.

    தாங்கள் தேவதை இதழில் என் வலைபூ அறிமுகம் குறித்து இட்டிருந்த பின்னூட்டம் கண்டே விவரம் தெரியவந்து அதை வாங்கி பதிவிட்டும் ஆயிற்று, மிக்க நன்றி:)! பிறகு இன்று தேவதை இதழிலிருந்து தொடர்பு கொண்டு புத்தகம் அனுப்புவதாகக் கூறியிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. சென்னையில் உள்ள பி.எல். ராஜ் நினைவு ஐ.ஏ.எஸ். பயிலகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
    இதுகுறித்து அதன் இயக்குநர் குமரேஸ்வரி பெரியசாமி வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:
    பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முன்னோடிப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
    விருப்பமுள்ள மாணவர்கள் இம்மாதம் 23 ஆம் தேதி வருமானவரி சான்றிதழ், கடைசியாக பயின்ற கல்வி நிறுவனங்களிடமிருந்து நன்னடத்தை சான்றிதழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை குறித்த சான்றிதழ் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
    மேலும் விவரங்களுக்கு 94448-03620, 9500003790 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.

    தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் (NIFT) 2010-ம் கல்வி ஆண்டுக்கான படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
    இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
    விண்ணப்பங்கள் ஆக்சிஸ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளிலும், சென்னை தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்திலும் ரூ.250க்கான வரைவோலையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
    விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள கடைசி நாள் ஜனவரி 5, 2010 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 9-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
    மேலும் விவரங்களுக்கு: http://www.nift.ac.in

    பதிலளிநீக்கு