Search This Blog

புதன், 25 நவம்பர், 2009

தமிழ் மனப்பாட செய்யுள்கள் பாடத்திட்டத்தில் அவசியமா?(சமச்சீர் கல்வி)


திருக்குறள், நன்னூல், நாலடியார், நெடுநல் வாடை, கலிங்கத்துப் பரணி - ஆகிய பாடல்களின் சில வரிகளையாவது  அடி பிறழாமல் எழுதுமாறு தேர்வுகளில் கேட்கப் படும். அவர்களும் எழுதுவார்கள். ஆனால் பொருள் புரிந்து எழுதுவார்களா? என்ற கேள்விக்கு வேதனையுடன் இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

பாடல்களை படித்து புருந்து கொள்ளும் அளவுக்கு இத்தகைய விஷயங்கள் பாடத்திட்டத்தில் இருந்தால் போதும். அவற்றை அடி பிறழாமல் எழுதும் பயிற்சியை ஆய்வு மாணவர்கள் வேண்டுமானால் விருப்பத்தின் பேரில் செய்யட்டும். பள்ளி மாணவர்களின் தேர்வில் இந்த பாடல்களைக் கொடுத்து புரிந்து கொண்ட விஷயத்தை சொந்த நடையில் எழுத சொல்லுங்கள்.

அப்போதுதான் அந்த செய்யுளின் கருத்து ஒரு மாணவனின் மனதில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அறிய முடியும்.

இதில் வேறொரு நன்மையையும் இருக்கிறது.  இவற்றில் உள்ள பல நல்ல கருத்துக்கள் சிறு வயதிலேயே மனதில் பதிவதால் ஒருவன் வளர்ந்து பெரியவனாகும்போது சிறிதளவாவது தவறு செய்வதற்கு பயப்படுவான். அடுத்தவர்களுக்காக இல்லை என்றாலும் அவன் மனசாட்சி கொஞ்சம் யோசிக்க வைக்கும்.

பாடத்திட்டம் தயாரிப்பவர்களும் கொஞ்சம் யோசிங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக